அம்மா என் கூட விளையாடு
அம்மா இது வேணும், அம்மா அது வேணும்
அம்மா இங்க வா, அம்மா அங்க போகலாம்
அம்மா டிவி பார்க்கவா, அம்மா சிஸ்டம்ல விளையாடவா
அம்மா போரடிக்குது, யார் என் கூட விளாடுவா
அம்மா போரடிக்குது, யார் என் கூட விளாடுவா
இப்படி நீளும் அம்மாவை அழைக்கும் பட்டியல்
சாப்பிட அழைக்கும்பொழுது, அம்மா பசிக்கலை
ஊட்ட முயன்றாலும் வாயைத் திறப்பதில்லை
பின்னர் சமைக்கும் பொழுது அம்மா சாக்லட் சாப்பிடவா
அரை மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்தால்
அரை மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்தால்
அப்பொழுது வந்து அம்மா பசிக்குது..
எனக்கு டயர்டா இருக்கு, இப்போ ஒன்னும் இல்லை
சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் எழுந்து சென்று
முணுமுணுத்தாலும் ஊட்டும் இயல்பு தாய்மைக்கே உரியது
ஒவ்வொரு நிமிடம் கேட்கும் அம்மா
கொஞ்ச நேரம் நிம்மதியா வேலை செய்ய விடு
கூப்பிடக் கூடாது என்று கத்தி விட்டு வேலை தொடர்வது
கத்தி விட்டேனே என்று வருந்துவது, இதுவும் இயல்பாகிப் போனது
விடுமுறை முடிந்து பள்ளி துவங்கப் போகிறது அடுத்த வாரம்
என் செல்லமே என் தங்கமே உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேனே
நீ இல்லாம எனக்கு போரடிக்குமே என்று சொல்லி
மனதில் பள்ளி அனுப்பாமல் இன்னும் இரண்டு வருடம்
என் கூடவே இருந்தால் நல்லதே என்ற எண்ணம்
இதைக் கட்டியவரிடம் சொன்னால்
அன்று அப்படி சொன்னே, இன்று இப்படி சொல்றே
உனக்கு வேறு வேலை இல்லை என்று அங்கலாய்ப்பார்
இல்லை என்றால் சுவற்றிடம் பேசுகிறோமோ என்று எண்ண வைப்பார்
சரி, விடுங்கள் இதெல்லாம் அவர்களுக்குப் புரிய போவதில்லை
ஏன் என்றால் இது தாய்மைக்கே உரிய அன்பான குழப்பம்!
அழகாகச் சொல்லி இருக்கீங்க கிரேஸ்..அம்மாவிற்கு ஓய்வு என்பதே கிடையாது.. தவறி போய் கிடைத்தாலும் அதை நாடுவதில்லை..
பதிலளிநீக்கு