விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய நான்கு சீர்கள் கொண்ட பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது.
தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்
விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய நான்கு சீர்கள் கொண்ட பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது.
தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்
தமிழ் அமெரிக்கா மற்றும் ஆலந்தூர்
கோ.மோகனரங்கன்தமிழியல் ஆய்வு மையம் நடத்திய பொங்கல் கவியரங்கில் நான் வாசித்தக் கவிதையும், அதன் வலையொளிப் பதிவும்! பார்த்து உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! மகிழ்வும், அன்பும், நலமும் வளமும் பொங்கட்டும்! பொங்கலோ பொங்கல்!
வாசித்ததைப் பதிவு செய்து வைக்கவும் பின்னொரு நாள் பார்த்து மகிழவும், குறிப்பாக, அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வாசிக்க உந்துதலாகவும் இப்பதிவு! நண்பர்களும் எத்தனை நூல்கள் வாசித்தீர்கள் என்று சொன்னால் ஒருவருக்கொருவர் உந்துதலாக இருக்கும். வாசிப்போம்! வாழ்வோம்!
ராணி முகர்ஜி நடித்து 2018இல் வெளியான இந்தித் திரைப்படம் 'ஹிச்கி'. வித்தியாசமான உடல்நலக் குறைபாட்டை சமூகத்தில் அனைவரும் அறிந்திருப்பதில்லை. அது பரவாயில்லை, அனைத்தையும் அறிந்திருக்க முடியாது என்பதை நம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்கிறாரே, "கற்றது கைமண் அளவு" என்று! ஆனால் ஒரு நோயை அறிய வரும்பொழுது எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் சான்றாண்மை இருக்கிறது!
பொதுவாகச் சமூகத்தில் புதிய ஒரு நோயைக் காணும்பொழுது அதனைக் கிண்டல் செய்வதையும் பாதிக்கப்பட்டவரைச் சாதாரணமாக, சக மனிதராக நடத்தாத நிலையையும் பேசும் இப்படம் இன்னும் சில விசயங்களையும் சிறப்பாக எடுத்துக்காண்பிக்கிறது.
திரு.கி. ராஜநாராயணன் (கி ரா) அவர்களுடையப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய நிகழ்வில் கி.ராஅவர்களுடைய 'சொந்தச் சீப்பு' என்ற கதையைப் பகிர்ந்தேன். எனக்கு மிகவும் மகிழ்வான நிகழ்வில் மேலும் இனிமையூட்டினார் கி ராஅவர்கள் தன்னுடைய வருகையினால்.
சொந்தச் சீப்பு என்னுடைய யூட்யூப் தளத்தில்!
நண்பர்கள் பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன். நன்றி.
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.