விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி வீரத்தமிழரசி வேலுநாச்சி இலக்கிய சமூக அமைப்பு புலனம் வழி நடத்திய நான்கு சீர்கள் கொண்ட பதினாறு அடிகளில் கவிதை பாடும் நிகழ்ச்சிக்கு நான் எழுதியது.
தலைப்பு: விவேகானந்தர் பார்வையில் இளைஞர்கள்
துணிவை உடுத்து துவண்டு விடாதே
பணிவைக் கற்றிடு தலைமை தந்திடும்
இனிதே நினைத்திடு நினைவே ஆவாய்
மனதின் தூய்மை மங்குதல் விடாதே
இருக்கும் வரைக்கும் மரணமில்லை வருந்தாதே
வருவதை உருவாக்கு சென்றதில் உழலாதே
இருளில் கலங்காதே உண்மையில் நிலைத்திடு
வருங்காலம் ஒளிர்ந்திடும் எதற்கும் அஞ்சாதே
துன்பத்தைப் படித்திடு துணிச்சல் வந்திடும்
இன்பத்தை விடவும் பேராசான் அதுவே
உணர்வில் உயர்ந்திடு சிந்தனை விரித்திடு
உனைநீ நம்பு வெற்றி உனதே
வலிமை உண்டு இயலாது என்றிடாதே
அழுக்காறு அழுக்கு அதனை அண்டாதே
உழைப்பே உயர்வு முயற்சியை விடாதே
விளிம்பிலா ஆற்றல் உன்னிடமே இளைஞனே
// உனைநீ நம்பு வெற்றி உனதே //
பதிலளிநீக்குமிகவும் பிடித்த வரிகள்...
மிக்க நன்றி அண்ணா
நீக்குவாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குகவிதை சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்கு