குடியரசு நாள்

 


குடியரசு நாள்
இந்திய அரசியலமைப்பு செயலாக்கப்பட்ட நாள்
சமதர்மம் சுதந்திரம் சகோதரத்துவம்
குடியரசின் மூன்று தூண்களாம்
மூன்றும் சமமாய் வலுவாய் நிற்பதே
குடியரசின் வெற்றி
குடிமக்களின் வாழ்க்கை
உலகின் நீண்ட அரசியலமைப்பு
உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர்
செயல்படுத்திப் போற்றிய  தலைவர்கள்
இந்தியத் தாயின்
தவத்திருப் புதல்வர்கள்
தேசத்தின் அடிநாதமாய்
தீங்கின் எதிர்ப்பு சக்தியாய்
சீர்மிகு அரசியலமைப்பு
ஏற்ற இறக்கங்களையும்
சவால்களையும் வலுவாய்ச் சந்தித்து
பாரில் இந்தியா ஓங்கவே செய்யும்
அரச கம்பீரம் 

 வித்திட்ட இந்நாளைக் கொண்டாடுவோம்
குடியரசின் முதுகெலும்பாம் அரசியலமைப்பு
நாட்டின் முதுகெலும்பாம் உழவர்கள்
இரண்டிற்கும் நன்றி
இரண்டும் போற்றி
உழுகுடிகளுக்கும்
அவரைச் சார்ந்த மற்றனைத்துக் குடிகளுக்கும்
இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்
4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...