தேன்மதுரத் தமிழோசை - யூட்யூப் மற்றும் டிக்டாக்


எப்போதாவது ஒரு கதை, ஒரு நூல் வாசிப்பு, கைவினை என்று குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தில் பகிர்ந்ததோடு மறைந்திருந்தது தேன்மதுரத் தமிழின் யூட்யூப் தளம். பல வகைகளில் பயன்படுத்தவேண்டும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசை இருந்தாலும் செய்யவில்லை. நேரம் காரணமா? சோம்பேறித்தனம் காரணமா தெரியவில்லை. இதுவே தான் ஆங்கிலத் தளத்துக்கும். Jack of many trades master of none (can't say all) என்பதைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.

சமூக இடைவெளி

படம்: நன்றி இணையம்

வீட்டில் இருப்பு!
உடல் மட்டும் தான்,
கண்டம் தாண்டிச் செல்கின்றன

எண்ணில்லா நினைவுகளுக்குத் தலைப்பேது?


குடும்பமாகிய நட்பு. அப்பாவின் நெருங்கிய நண்பர், இருவர் குடும்பத்தினரும் ஒன்றாகிப்போன அன்பு. எங்கள் நலம் விரும்பி.

வீரயுக நாயகன் வேள்பாரி - சு. வெங்கடேசன்


பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!

பொங்குக பொங்கல்

  பொங்குக இனிய பொங்கல்       பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல்       போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல்       படிப்பினில் அழுத்...