காலம் கடந்தும்

கலை தவழும் மலை  
மலை தழுவும் முகில் 
இவற்றோடு ..


கடந்து செல்லும் காலம் 
காலமும் மாறும் அகிலம் 
இவற்றினிடையே 
காலம் கடந்தும்  நிற்கும் 
கலை தவழும் மலை  
மலை தழுவும் முகில் 
இவற்றோடு 
காதல் தலைவி தலைவனாய்
நீயும் நானும்!
            -கிரேஸ் பிரதிபா 
படம்:அமுதா ஹரிஹரன் 

வல்லமை இணைய இதழில் படக்கவிதைப் போட்டிக்காக நான் எழுதியது. பரிசு கிடைக்கவில்லையானாலும் பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்த இணைப்பைப் பார்க்கவும்.

24 கருத்துகள்:

  1. அருமை... பாராட்டுகளும் வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்ஷ
    கவிதை அருமையாக உள்ளது இரசித்தேன் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அருமையான கற்பனையும் கவிதையும் தேன்பாராட்டுக்கள். தொடர வாழ்த்துக்கள் ...! நலம் தானே.
    த+ம 3

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள். பரிசுக்காகக் காத்திருக்கவேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள். எழுதுவதில் கிடைக்கும் இன்பமும், அதைப் பிறருடன் பகிரும் இன்பமும் ஈடுஇணையற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      ஆமாம், பரிசுக்காகக் காத்திருக்கவில்லை, தொடர்வேன். உண்மைதான் ஐயா, மிக்க நன்றி.

      நீக்கு
  5. நீண்ட நாட்களுக்குப் பின் அழகிய கவிதையுடன்....

    படத்தைப் பார்த்த உடனே எனக்கென்னவோ சட்டென,

    “““ நிலத்தினும் பெரிதே... வானினும் உயர்ந்தன்று.........“

    என்று தோன்றுகிறது. ;))

    எல்லாம் சங்க இலக்கியத்தாக்கம்.

    பதிவொன்றிட்டிருக்கிறேன்.

    சகோதரி நேரம் கிடைக்கும் பொழுது வந்து கருத்திட வேண்டுகிறேன்.

    முக்கியமாய் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்காகவே..!!

    த ம 5

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா..
      ஆமாம் சங்க இலக்கியம் படித்தால் அப்படித்தான் தோன்றுகிறது..நானும் முதலில் இலக்கியத் தாக்கத்தில் விருத்தம் எழுதத் துவங்கிப் பின் மாற்றிவிட்டேன்..
      கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

      நீக்கு
  6. படமும் அதற்கேற்ற கவிதை வரிகளும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பொருத்தமான வரிகள் சகோ
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள சகோதரி,

    கவிதை அருமை... ! வாழ்த்துகள்.

    நன்றி!.
    த.ம.7.

    பதிலளிநீக்கு
  9. வரிகள் அருமை! காலம் கடந்தும் வாழும் காதல் ஆஹா நீங்கள் கவிதை எழுதியிருக்கின்றீர்கள். நான் ஒரு கதை எழுதி வைத்திருக்கின்றேன். வெயிட்டிங்க் ஃபொர் தெ அப்ரூவல் ஆஃப் துளசி....ஹஹ சூப்பர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி கீதா..
      ஓ அப்படியா பிரமாதம், காத்திருக்கிறேன்.. :)

      நீக்கு
  10. நல்லா இருக்குங்க பிரதீபா ..
    ஏன் முதல் வரி ரிப்பீட் ஆகுதுன்னு தான் புரியல.

    //கலை தவழும் மலை
    மலை தழுவும் முகில்
    இவற்றோடு ..//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஆவி.
      அது ஜம்ப் பிரேக் கொடுக்கும்பொழுது இந்த வரிகளைக் கொடுத்திருக்கிறேன்.. வேறொன்றுமில்லை... :)

      நீக்கு
  11. அருமை அருமை
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் கிரேஸ் .. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. காதலைச்சொல்லும் சிறப்பான வரிகள்.. மனம் ஈர்க்கும் அழகு. பாராட்டுகள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...