இணையக்கல்வி - பகுதி 2

இணையக்கல்வி - பகுதி 1 பதிவில் இணையக் கல்வி பற்றி எழுதியிருந்தேன். இப்பதிவில் அது பள்ளிகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.


என் இளைய மகனுக்கு (Kindergarten) பெரென்ஸ்டைன் பியர்ஸ் (Berenstain Bears) என்ற புத்தகங்கள் பிடிக்கும்.
நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்தபின்பும் புதுப்பித்து மூன்று வாரங்கள் முடிந்த பின்பே திரும்பிக் கொடுப்பான். இடையில் நூலகம் சென்றால் இன்னும் ஒன்றிரண்டு எடுத்துக்கொண்டும் வருவான். ஒரு பயனர் ஒரே நேரத்தில் 75 நூற்கள் எடுக்கலாம் என்பதால் பிரச்சினை இல்லை. (வீட்டில் அடுக்கி வைப்பது பற்றி இங்கு சொல்லவில்லை . :) )


ஒருநாள் பள்ளியில் இருந்து வந்தவுடன், "அம்மா, அனிமல்ஸ் மட்டும் எண்டேஞ்சர்ட் இல்ல, ப்லான்ட்சும்" என்றான். ஆமாம் என்று நான் சொல்வதற்குள் ஒரு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டான். "ஓ புக் படிச்சியா?" என்றேன். "இல்லமா, யூ டுப்ல பெரென்ஸ்டைன் பியர்ஸ் இருக்கு, இன்னைக்கு ஸ்கூல்ல பார்த்தேன்" என்றான். அவன் பார்த்த பாகத்திற்கான இணைப்பு - பெரென்ஸ்டைன் பியர்ஸ் - டோன்ட் பொல்யூட். அன்றிலிருந்து அவனுக்குப் பிடித்த கார்டூனாக மாறிவிட்டது.

மூத்தவனுடைய அறிவியல் பாடம், inclined planes. பிள்ளைகள் நன்றாகக் கற்றுக் கொள்ள உதவுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் இந்த இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பள்ளி இணைய நூலகமும் உண்டு. பள்ளி நூலகத்தில் இருந்து இணைய நூற்கள் எடுத்துக் கொள்ளலாம். இரு வாரங்கள் கெடு, இரு வாரங்கள் முடிந்ததும் தானாக நம் கணக்கில் இருந்து போய்விடும்.

மேலும் பள்ளியில் அவரவர் தங்கள் சொந்த தொழில்நுட்பம் கொண்டுவரலாம். அதாவது பிள்ளைகள் ஐபேட், டேபிலட், கிண்டில் போன்ற சாதனங்களைக் கொண்டுவரலாம். இடைவேளைகளிளோ ஏதேனும் குறிப்புகள் பார்ப்பதற்கோ வகுப்பில் பயன்படுத்தலாமாம். இதை என் பிள்ளைகள் சொன்னபொழுது, அதெல்லாம் கொடுக்க முடியாது. புக் படிச்சா போதும் என்று சொல்லிவிட்டேன். பிற பெற்றோர்களிடம் விசாரித்தேன், இந்தியப் பெற்றோர்கள் பலர் கொடுப்பதில்லை என்று அறிந்துகொண்டேன். ஆசிரியரிடம் கேட்டால் இப்பொழுது கொடுக்காவிட்டால் பரவாயில்லை, ஆனால் ஆறாம் வகுப்புக்கு மேல் கொடுத்தால் நல்லது என்று சொன்னார். சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை  இளையவனுடைய ஆசிரியரிடமிருந்து மின்னஞ்சல். "வரும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வரையக்கூடிய ஏதேனும் ஒரு மென்பொருளுடன் டெக்னாலஜி கொடுத்துவிடவும். ஒரு ஜிப்லாக் பையில் போட்டு பெயர் எழுதிக் கொடுத்துவிடவும்". வேற வழி? கொடுத்துவிட்டோம். மற்றொரு வாரம் யூடுயூப் அனுமதி கொடுத்து அனுப்பச் சொன்னார்கள். Safe share வழியாகத் தான் பயன்படுத்துவார்கள், பயப்படத் தேவையில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். இது போல அவ்வப்பொழுது நிகழும். மூத்தவனுக்கும்  ஒரு வாரம் கட்டாயம் கொடுக்கச் சொன்னார்கள்.

மற்ற நாட்களில் வேறு ஏதோ செயல்முறைப் படுத்துகிறார்கள் என்று நினைத்து விட்டால் அது தவறு. குளிர் அதிகமாக இருக்கும் நாட்களிலும் மழை பெய்யும் நாட்களிலும் இடைவேளையில் வெளியே விளையாடச் செல்ல முடியாது. அப்பொழுது அவரவர் கொண்டு வந்த டெக்னாலஜியில் விளையாடுவார்களாம். நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் மூத்தவனும் விளையாடுகிறான். ஒரு நாள்  இளையவன் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் ஏதோ துப்பாக்கியால் சுட்ட கதை சொல்ல ஆரம்பித்துவிட்டான். இது என்னடா? இதெல்லாமா ஸ்கூல்ல போடுறாங்க என்றேன். "இல்லம்மா, ஸ்கூல் பஸ்ல ஜாக் விளையாடுவன், இன்றைக்கு என்கூட ஷேர் பண்ணான்".


பள்ளியில் கற்றுக்கொடுக்க ஸ்க்ரீன் டைம், இடைவேளையில் ஸ்க்ரீன் டைம், வீட்டுப்பாடத்திற்கு ஸ்க்ரீன் டைம், படிக்க ஸ்க்ரீன் டைம், பொழுதுபோக்க ஸ்க்ரீன் டைம்!!! ஆக, நான் ஸ்க்ரீன் டைம் வரையரை வைத்திருந்தற்கு ஒரு ஆப்பு, என்னென்ன விளையாட்டுகள் பிள்ளைகள் விளையாடலாம் என்பதற்கு வைத்திருந்த வரையரைக்கு ஒரு ஆப்பு.

மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் நம் மதிப்பீடுகளும் வரையறைகளும் மாறத்தான் வேண்டும் போல. மருந்து, மாத்திரை போல நம் கருத்துகளுக்கும்  காலாவதி உண்டோ? 

கற்றல் இணைய தளங்களைப் பட்டியலிட்டு ஒரு பதிவு போடுகிறேன். பயன்படுத்துவதா வேண்டாமா என்ற முடிவு உங்களுடையது. :)

பின் குறிப்பு:
நான் இணையக் கல்விப் பதிவுகளில் எழுதியிருப்பது எங்கள் கல்வி மாவட்டப்  பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுவது. அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரி இருக்காது. நகரத்தின் மற்ற கல்வி மாவட்டத்திற்கே வேறுபடுகிறது. மாநிலங்கள் அளவிலும் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் மற்ற சில கல்வி மாவட்டங்களிலிருந்து எங்கள் மாவட்டத்திற்குப் பயிற்சிக்கு வருகிறார்கள் என்று சொன்னார்கள்.

கான் அகாடமியும் யூ டுயூபும் இன்னும் பல தளங்களும் பயன்படுத்திக் கற்பிப்பது என்றால் பள்ளி எதற்கு என்றும் தோன்றும். ஆனால் எங்கள் கல்வி மாவட்டம்  தொழில்நுட்ப முன்னோடியாம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் எங்கள் கல்வி மாவட்டத்தில் கால் சதவிகிதம்  இணைய வழி நடைபெற இருக்கிறது. அடுத்த வருடம் முழுமையாக இணைய வழி என்பது நோக்கமாம். பேப்பர் மற்றும் பென்சில் துணைக் கருவிகளாக மாறிவிடுமாம்.




-----தொடரும்

42 கருத்துகள்:

  1. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொங்குக தமிழ் ஓசை
      தங்குக தரணி எங்கும்!//
      இனிமையான பாடலுடன் வாழ்த்தியமைக்கு நன்றி சகோ. உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.
      உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. இனிய தமிழ்ப் புத்தாண்டு ந்ல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.
      உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  5. நம் (இஸ்டத்திற்கு) விருப்பத்திற்கு எல்லாம் ஆப்பு தான் போல...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா :)
      நன்றி, உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  6. அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இனிமையாகவும் எளிதாகவும் கற்பிக்கவும் கற்கவும் உதவும் கல்வி முறை...
    நம் பிள்ளைகள் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும்.
    தொடர்கிறேன் சகோ.

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    தொடருங்கள் த.ம5
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.
      நன்றி. உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  8. அன்று நான் படித்த கல்வி முறைக்கும், இன்றைய கல்வி முறைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சகோதரி அவர்களின் தொடர் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா..இன்றும் நம் ஊருக்கும் இங்கும் வித்தியாசம்!
      நன்றி.

      நீக்கு
  9. அன்புள்ள சகோதரி,

    பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக, அறிவை வளர்க்கக் கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாகத்தான் தெரிகிறது...!

    நன்றி.
    த.ம.7.

    பதிலளிநீக்கு
  10. அருமை...
    (முகநூல் மூலம் வந்தேன்..)
    நேரத்தை பார்த்தீர்களா ..
    தம +

    பதிலளிநீக்கு
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். .! கல்வித் திட்டத்தைக் காண தொடர்கிறேன் ....நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி.
      உங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  12. உங்கள் ஆதங்கம் புரிகிறது கிரேஸ். என் பிள்ளைகளை பதிமூன்று பதினான்கு வயது வரைதான் என்னிஷ்டத்துக்கு வளர்க்கமுடிந்தது. அதன்பிறகு அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. பள்ளிகளிலும் நண்பர் வட்டாரத்திலும் பல விஷயங்கள் நம் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அமைந்துவிடுகின்றன. பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வரும்வரை அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் நம் கண்காணிப்பின் கீழ் இருந்தால்தான் மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கீதமஞ்சரி, பெரியவனுக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் என்று நினைத்திருந்தேன், அது முன்னதாக வந்துவிட்டது. அது பரவாயில்லை, சிறியவனுக்கு ஆறு வயது...என்ன பண்றது? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
      ஆமாம், பதினைந்து வயது வரைக்குமாவது கண்காணிப்பில் இருக்க வேண்டும், பார்க்கலாம். உங்கள் புரிதலான அன்பான கருத்திற்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  13. உங்கள் தளம் முதல்முறை வருகிறேன். அருமையான பதிவு. இனி தொடர்கிறேன். வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கல்வி நிலையில் இவ்வாறான படிநிலை மாற்றங்கள் காலத்தின் அவசியத் தேவையாகும். அறிவியல் உத்தி அறிவினை மேம்படுத்த உதவும் நிலை வரை அது பயனுள்ளதாகவே அமையும். தடம் மாறும் நிலையில் பல சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் ஆதங்கம் சரியே! சகோதரி! அதுவும் இப்பொது இருக்கும் காலமும் அப்படி. காட்டுத் தீ போல எல்லாமே குழந்தைகளின் மனதில் சிக்கெனப் பற்றிக் கொண்டு விடுகின்றது. ஆனால் அதையும் நாம் நம் கண் காணிப்பிலும், அவர்களிடம் நல்லது சொல்லியும் எதுநல்லது, எது கெட்டது என்று பிரித்தாராய கற்றுக் கொடுத்துவிட்டால் நல்லது தானே. தாங்கள் மிகச் சிறந்த தாய். எனவே நீங்கள் அதை நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள் சகோதரி.....பருவ வயது வரை அவர்கள் நமது பிடியில் இருந்து விட்டால் நாம் போதிக்கும் நல்லவை பதிந்து விடுமே.....சிறிய வயதில் நல்லவை பதிந்து விட்டால் அந்த வேர் ஆணித்தரமாக ஊன்றி விருட்சமாக வளரும் சகோதரி. உங்கள் மகன் மிக அழகாக நல்ல ஒரு விஷயம் கற்றுக்கொண்டிருக்கின்றார்....அனிமல்ஸ் மட்டும் என் டேஞ்சர் அல்ல ப்ளான்ட்ஸ் என்பதும்.....நல்லதொரு விஷயம்....அந்த சின்ன வயதில் இங்குள்ள எத்தனை குழந்தைகளுக்கு இது போன்ற ஒரு விஷயம் கிடைக்கும்....பேசுவார்கள்? அதையும் நாம் நினைத்துப் பார்க்கலாமே.....இங்கு உங்கள் மகன் வயதில் குழந்தைகள் கன் கேம்தான் விளையாடுகின்றார்கள்...எந்த இணையக் கட்டுப்பாடும் கிடையாது.....அப்படிப் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் நன்றாகவே கற்கின்றார்கள் ..சகோதரி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ, நீங்கள் சொல்வது சரிதான். பல நல்ல விசயங்கள் நன்றாகக் கற்றுக்கொள்கின்றனர். பசுமரத்தாணி போல பதிந்து விடும்..
      இப்பொழுது அவர்கள் இருவரும் பேசுவது, செய்வது எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறது சகோ, நன்றாக வளர்த்திருக்கிறோம் என்று. பெருமைக்காகச் சொல்லவில்லை, வெளியே கேட்ட பார்த்த சில விசயங்கள் இந்த எண்ணத்தை ஏற்படுத்தின.. :) இன்னும் சிறிது காலம் பருவ வயது வரை வழி நடத்திவிட்டால் போதும்.
      உங்கள் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
  16. நல்ல பதிவு தோழி. இங்கும் இப்போதே ஆரம்பித்தாகி விட்டது. தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் எல்லாம் கற்றுக் கொள்வது யூ டியூபில் என்றாகி விட்டது. ஆனாலும் புத்தகத்தில் பார்த்து ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி சொல்வதிலும் ஆர்வம் காட்டுகிறான்.முடிந்தவரை புத்தகங்களை கொடுக்க முயற்சிக்கிறேன். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா தோழி? ஆமாம் பிள்ளைகள் கற்றுக்கொள்ளும்படியும் அவர்களை ஈர்க்கும் படியும் நிறைய இருக்கிறதே. நேரத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இரு அரை மணி நேரம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
      புத்தகங்கள் கொடுப்பது மகிழ்ச்சி..பார்ன்ஸ் அண்ட் நோபில், நூலக கதைநேரத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா?

      கருத்திற்கு நன்றி தோழி.

      நீக்கு
    2. மற்ற விளையாட்டுகள், வெளியே விளையாடுதல், செடிகள் போன்றவற்றில் அவனது கவனத்தை திருப்ப முயற்சிக்கிறேன்.

      நூலகத்தில் கதை நேரத்திற்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால், ஓரிடத்தில் அமர்ந்து கதை கேட்பதில் தான் சிக்கல். சுற்றிலும் இருக்கும் பொம்மைகள், புத்தகங்கள் ஆகியவற்றில் கவனம் செல்வதால், எழுந்து அங்கு ஓடி விடுவான். இப்போதைக்கு வீட்டில் தான் படிக்கிறான்.

      நீக்கு
    3. க்ரேஸ் பார்ன்ஸ் அண்ட் நோபில்.....ஆஹா என்ன ஒரு அருமையான நூலகம்...அங்கு இருக்கும் போது வீக் என்ட் என்றால் மகனுடன் அங்குதான், சாப்பாட்டுக் கூடையுடன்...ஹஹஹ் மகனும் அங்கு தனக்கு வேண்டியதை எடுத்துப் படிப்பான், வாசிப்பான் குறித்துக் கொள்வான்...அங்கு சிறு குழந்தைகளைக் கூட அழைத்து வருவார்கள்....அவர்களுக்கென்று விளையாட்டுச் சாமாங்கள் கூட இருக்கும்...இது நான் சொல்லுவது 14 வருடங்களுக்கு முன்.....இப்போது இன்னும் நிறைய வந்திருக்கும்...இல்லையா க்ரேஸ்??!!

      கீதா

      நீக்கு
    4. தாமதமான மறுமொழிக்கு தமிழ்முகிலும் கீதாவும் மன்னிக்கவும்.
      அப்படி ஓடினாலும் பரவாயில்லை தமிழ்முகில், குழந்தைகள் கவனிப்பார்கள்.

      கீதா, 14 வருடங்களுக்கு முன்பே இருந்ததா? நான் ஒன்பது வருடங்களுக்கு முன் வந்து முதன்முதலில் பார்த்து மலைத்துப் போனேன். பெங்களூரில் நான் ஆரம்பிக்கலாம் என்று கூட நினைத்தேன்..ஆனால் நான் அங்கு சென்ற போது ஏற்கெனவே crossword மற்றும் apple of my eye ஸ்டோரிலும் இம்முறை வந்துவிட்டது..இங்கு போல அதிகம் இல்லை.
      இங்கு இன்னமும் அப்படி இருக்கிறது கீதா. பார்ன்ஸ் அண்ட் நோபில் என் பாவரைட்..அங்கு விட்டு விட்டால் மணி தெரியாமல் இருப்பேன் :)
      அது போல இன்னும் நிறைய இடங்களில் வந்துவிட்டது - நூலகம், நேச்சர் சென்ட்டர் என்று
      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கீதா..

      நீக்கு
  17. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  18. எனக்கு டப் பைட் கொடுக்க திட்டமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அதற்கு வாய்ப்பே இல்ல, உங்க கூட போட்டி போட முடியுமா? நான் சிறு பிள்ளை :)

      நீக்கு
  19. தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் - ஆமாம் நிச்சயமாக! இவ்வளவு அருமையான -நான் விரும்பும் கல்வியில் புதிய கற்பித்தல் முறைகள் எனும் - அரிய வகைப்பதிவை இவ்வளவு தாமதமாக வாசிக்கிறேனே? அருமைம்மா..
    அதிலும் நடுநடுவில் “ மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் நம் மதிப்பீடுகளும் வரையறைகளும் மாறத்தான் வேண்டும் போல. மருந்து, மாத்திரை போல நம் கருத்துகளுக்கும் காலாவதி உண்டோ?“ என்பது போலும் உன் முத்திரைகள் படிப்பதை சுகமான அனுபவமாக்குகின்றன. இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுதுவதோடு “புதிய கற்பிக்கும் முறைகள்“ என்று ஒரு சிறு நூலாகவே போட்டுத் தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.. கடந்த சில தலைமுறை களுக்கும் கீழாகக் கிடக்கும் தமிழ்நாட்டில், இதுபோலும் அடுத்த தலைமுறைக் கான கல்விமுறை பற்றிய அறிமுகம் நல்ல ப லன் தரும். இதன் நல்லது கெட்டது பற்றிய விவாதமும் அவசியம். ஆக நல்ல பதிவிற்கு நன்றிம்மா. த.ம.கூ-1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. தொடர்கிறேன் அண்ணா, நான் பார்ப்பவற்றை இங்கே பகிர்கிறேன். நம்மூரில் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் சொல்வது போல விவாதமும் அவசியம் தான்.
      கருத்திற்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  20. காலத்திற்கேற்ப சில மாற்றங்களை புகுத்த்வேண்டியது அவசியமாகிறது.ஸ்க்ரீன் டைமை கட்டாயபடுத்தி தகடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். பல சிந்திக்க வைக்கும் தகவல்களை கூறி உள்ளீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, காலத்திற்கேற்ப மாற வேண்டியிருக்கிறது. ஸ்க்ரீன் டைமோடு ஓடி விளையாடுவதும் கற்பனை செய்து விளையாடுவதும் சரிவிகிதமாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...