உடைப்பது யாரோ

நன்றி:கூகிள் 

உயரத்தில்  தேங்காய்  உடைப்பது யாரோ
இடியுடன்  பெய்யும்  பொழிவு


36 கருத்துகள்:

  1. தென்றல் உடைத்திடவே துள்ளி நிலமிணைய
    மன்றல் நடத்தும் மழை.

    மன்றல் = திருமணம்.

    உஙகளில் குரல் பலகுறள் எழுத வைக்கும் வண்ணம் உள்ளது.
    உடைப்பது தென்றல் என்று நினைக்கிறேன்,
    தமிழ்த்தென்றலாயிருக்குமோ.......???!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடஅடஅட!!!!!!!! என்ன ஒரு அழகிய பின்னூட்டம்!

      நீக்கு
    2. //மன்றல் நடத்தும் மழை// அழகு!
      தமிழ்த்தென்றல் தான் போல..தேவைப்பட்டால் வலியுடன் இப்படி உடைக்கிறதே :)

      நீக்கு
  2. இடி சப்தத்திற்கு - இப்படியும் உவமை!..
    அருமை!.. அருமை!..

    பதிலளிநீக்கு
  3. இந்தப் படத்தை எங்கிருந்து எடுத்தீர்கள், செம்யா இருக்கு சகோ... அதற்கு உங்கள் ஹைக்கூ மிகப் பொருத்தம்...

    பதிலளிநீக்கு
  4. இணையத் தமிழில் இருவரிக் கவிதை! இடியும் மழையுமாய் தொடர்ந்து பொழிந்திட வாழ்த்துக்கள்!
    த.ம.2

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டங்கள் உங்க கவிதையை தெளிவு படுத்தியுள்ளதால் எனக்கும் புரிகிறது.:) மழைக்கு இன்னொரு அழகான பெயர் பொழிவு னு கற்றுக்கொண்டேன் தேன் மதுரத் தமிழில் கவிதையாக கவிக்கும் உங்களிடமிருந்து. :)

    கடுகளவுதான் தான் கற்றது என்கிறார் ஒரு பெரியவர்..

    நான் இதுவரை கற்ற தமிழ், அணு அளவுதான்தான் போலிருக்கிறது, அதுவும் அணுக்களில் மிகச்சிறிய அணு, ஹைட்ரஜன் அளவுதான். இப்போ என் தமிழ் அறிவை ஹீலியம் அளவாக்கி விட்டீர்கள், கிரேஸ். :) நன்றி. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'பொழிவு' அழகான சொல் இல்லையா வருண் மழைக்கு..'பொழிவி' என்றாலும் மழையாம், நேற்றுதான் அறிந்துகொண்டேன்.
      அணு, ஹைட்ரஜன், ஹீலியம் - ஆஹா! இவற்றையெல்லாம் நினைவுபடுத்திவிட்டீர்கள்..
      அணுவைச் சாதாரணமாச் சொல்லிவிட முடியாது..அதுதானே அனைத்திற்கும் மூலம்..'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டலாம் தெரியும்தானே?
      உங்கள் இனிய கருத்திற்கு நன்றி வருண்.

      நீக்கு
  6. மழையின் மகிழ்ச்சி குறளாய்..நன்று நன்று தோழி.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா என்ன ஒரு கற்பனை! எங்கேயோ போயிட்டீங்கப்பா!

    வானில் தேன்மதுரத் தமிழ் - பொழியும்
    இனிய கவிதை மழை!!


    பதிலளிநீக்கு
  8. அட.. அற்புதம் தோழி!
    உங்கள் கற்பனை!

    ஓங்கி இடித்தவர்யார்? உட்காயம் கண்டவானம்
    தாங்கா தழுததே தான்!

    ....:)

    வாழ்த்துக்கள் கிரேஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..//உட்காயம் கண்ட வானம் தாங்கா தழுததே// என்னவொரு கற்பனை!அருமை தோழி..உங்கள் பா அழகாய் இருக்கிறது..மழை தான் எத்தனை கற்பனை தருகிறது, இல்லையா தோழி?
      உங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  9. வணக்கம்
    சகோதரி...

    கற்பனை நன்று நானும் இரசித்துன்...த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. அடடா மதுரையில் தேங்காய் உடைத்தால் இப்படித்தான் சத்தம் கேட்குமா?
    தமா ஆறு

    பதிலளிநீக்கு
  11. அட கடவுளே எனக்குத் தெரியாதும்மா. ஹா ஹா எப்படி தோழி .... இப்படி யாரும் சிந்தித் திருக்கமாட்டார்கள் தோழி wow very nice.

    பதிலளிநீக்கு
  12. நச்சுன்னு இருக்கு சகோ. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. குறளினை ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  14. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க .. சூப்பர்

    பதிலளிநீக்கு
  15. அருமை ! மிகவும் இரசித்தேன். வாழ்த்துகள் தோழி !

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...