ஐங்குறுநூறு 18, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது
மருதம் திணை - தலைவி தலைவனைப் பற்றி சொன்னது
"இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்தும் மலரன்ன என் கண் அழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே"
எளிய உரை: இருஞ்சாய் போன்ற செருந்தியோடு நாணல்(வேழம்) கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு என் மலர்போன்ற கண்கள் அழுமாறு பிரிந்துவிட்டானே.
விளக்கம்: இருஞ்சாய் என்பது தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல். அதனைப் போன்றே செருந்தி என்பதும் ஒரு புல். இவை களைகளாக கழனிகளில் வளரும். இந்தப் புற்கள் நாணலோடு கரும்பைப் போல காற்றிலாடும் கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் தன்னைப் பிரிய மாட்டேன் என்று சொல்லியிருந்தான். ஆனால் பிரிந்து சென்று (பிற மகளிருடன்) தன் மலர் போன்ற கண்களை அழவைத்து விட்டானே என்று தலைவி வருந்திக் கூறுகிறாள். செருந்தி, நாணல், ஆகியவை பிற மகளிரைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
சொற்பொருள்: இருஞ்சாய் - தண்டான்கோரை எனப்படும் கோரைப்புல், அன்ன - போல, செருந்தி - ஒருவகை களைப் புல், வேழம் - நாணல், கரும்பின் அலமரும் - கரும்பைப் போல காற்றிலாடும், கழனி ஊரன் - கழனிகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், பொருந்தும் மலரன்ன - மலரைப் போன்ற, என் கண் அழப் - என் கண் அழுமாறு, பிரிந்தனன் அல்லனோ - பிரிந்துவிட்டான் அல்லவா, பிரியலென் என்றே - பிரியமாட்டேன் என்றே
என் பாடல்:
"இருஞ்சாய் போன்ற செருந்தியும் நாணலும்
கரும்பைப் போல காற்றிலாடும் கழனி ஊரன்
பிரியேன் என்றேப் பிரிந்தான் அன்றோ
பொருந்திய மலர்போன்ற என்கண் அழ"
படங்கள்:நன்றி இணையம்

இருஞ்சாய்/தண்டான்கோரை |
படங்கள்:நன்றி இணையம்
செருந்திப் புல் |
படங்களோடு விளக்கமும், சொற்பொருள் விளக்கமும் அருமை... நன்றி...
பதிலளிநீக்குவிளக்கத்தை வைத்து (வித்தியாசமாக) "கதை உருவாக்கலாமா...?" என்று யோசிக்கிறேன்...
வாழ்த்துக்கள்...
நன்றி திரு.தனபாலன்!
நீக்குஅட, நல்ல யோசனையாக இருக்கிறதே...செய்யுங்கள் செய்யுங்கள். உங்கள் கதை படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். வாழ்த்துகள்!
அருமையான பாடல் விளக்கம்! உங்கள் பாடலும் சிறப்பு!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ்.
நீக்குஅருமையான விளக்கம்...!!!!
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணிமாறன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
பாடலும் அதற்கான விளக்கமும் சிறப்பு.. பள்ளியில் படிக்கும் போது... ஆசிரியர் சொல்லித்தந்த விளக்கவுரை போன்று உள்ளது..... தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்.
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குமிக்க நன்றி!
நல்ல பயிற்சி ...
பதிலளிநீக்குகொஞ்சம் காதில் புகை வருகிறது
எல்லாரும் செய்ய முடியாதில்லையா ?
வாழ்த்துக்கள்
உங்கள் மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி மது.
நீக்குநீங்கள் ஒரு அருமையான ஆசிரியர்,,என்னைப் பார்த்து புகையா? :)
புரியும்படியான விளக்கவுரை பாராட்டுக்கள் சகோதரி எனது தமிழாசிரியர் திரு பட்டாபிராமன் அவர்களை நினைவு கூற வைத்தது உங்கள் விளக்கம் நன்றி .
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி விமல். தமிழாசிரியரை நினைவுபடுத்தியதில் மகிழ்ச்சி...நன்றி!
நீக்குஅருமை... விளக்கமும், எளிய கவிதை மட்டுமில்லாமல் இப்பொழுது படங்களும்.. பலே பலே. நன்றிகள் பல :)
பதிலளிநீக்குபடங்கள் தேடிப்பார்த்தேன்..புரிந்துகொள்ள இன்னும் எளிதாய் இருக்குமே என்று இணைத்தேன்..இருஞ்சாய் போன்ற செருந்தி..இரண்டும் ஒரேமாதிரி இருப்பதைப் பாருங்களேன்..எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்கள்!!
நீக்குநன்றி ஸ்ரீனி!
சிறப்பான பாடல். படங்களும் அருமை. வெறும் பெயரோடு சொல்லி இருந்தால் அவற்றைத் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட். படங்களைப் பார்த்தால் இன்னும் ஆழமாகப் புரிகிறது இல்லையா? எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்கள்!!
நீக்குமகிழ்ச்சி வெங்கட்!
தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.தனபாலன்.
பதிலளிநீக்குதெளிவுரைக்கு வழங்கியுள்ள விளக்கம் சிறப்பாக உள்ளது...
பதிலளிநீக்குசெருந்தி, நாணல், ஆகியவை பிற மகளிரைக் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ளலாம்...//// புது தகவல்...
வார்பிலக்கியம் சிறப்பு...
ஆமாம், தலைவனின் நிலையற்றத் தன்மையைக் குறிப்பதாகவும் சொல்வர்..
நீக்குநன்றி வெற்றிவேல்!