இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வசந்தத்தில் மலரும் முதல் நறுவீ
வறண்ட நிலம்விழும் முதல் மழைத்துளி

மனதை மகிழ்விக்கும் மழலை மொழி
மலர் இதழாய் வருடும் மழலை விரல்

கரும் கானகத்தில் ஊடுருவும் பொன்னொளி
கடல் பயணத்தில் கலங்கரை விளக்கம்

இவை தரும் அளப்பறியா மகிழ்ச்சி அன்ன
இன்பமாய் இவ்வாண்டின் முதல் பதிவு 

இவையினும் பெரும் மகிழ்ச்சியுடன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

13 கருத்துகள்:

  1. தங்களுக்கு, தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நாள் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி. இப்புத்தாண்டில் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுவோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கரும் கானகத்தில் பொன்னொளி/
    பொன்னொளி பாயட்டும் இன்பத் தமிழ் வளரட்டும்
    அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  6. வனக்கம் தோழி.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமை கிரேஸ்... முத்தான முதல் பதிவு

    பதிலளிநீக்கு
  8. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...