அரிய இலக்கியம் படித்து


முன்னேறும் புவியில்
அறிவியல் வேண்டும்
இலக்கியம் எதற்கு?

உலக வெம்மை
உலகை உலுக்க
இலக்கியமா படிக்க?

விண்வெளியும் மருத்துவமும்
புதுமை படைக்க
இலக்கியம் எதற்கு?

இயற்கை காக்க
இயன்றது செய்யாமல்
இலக்கியமா படிக்க?

கணினி காலத்தில்
விரைவாய் ஓட
இலக்கியம் எதற்கு?

பெருமை பேச ஆங்கிலம்
இருக்க தமிழ்
இலக்கியமாபடிக்க?

இப்படிப்  பல பேசி

இலக்கியமா படிக்க?
எதற்கு என்போரே கேட்பீர்

இலக்கியம் படித்துப் பார்ப்பீர்
அதிலுள்ள அறிவியலில்
அசந்து போவீர்

உலக வெம்மையா?
இலக்கியம் கூறும் இயற்கை
பேணியிருந்தால் இந்நிலை இராதே..

இலக்கியம் படித்தால் அல்லவா
மருத்துவமும் விண்வெளியும்
பாட்டில் ஒளிந்திருப்பது தெரியும்

கணினி இல்லாமலே
துரித கணக்கு போட்ட
முன்னோரின் பெருமை தெரியும்

ஆங்கில இலக்கியம் கூறும்
இயற்கையும் வாழ்வுமுறையும் புரியுமோ? தமிழ்
இலக்கியக் காட்சி கண்முன் இருக்கே


இலக்கியம் மொழி மட்டுமல்ல
நம் உள்ளூரின் வாழ்வியல்
நம் அடையாளம் வரலாறு

இயற்கை, வரலாறு, அறிவியல்
விண்ணியல் மருத்துவம் கணிதம்
இலக்கியத்தில் எல்லாம் இருக்க
எதற்கு என்ற வினா எதற்கு

அறியாமை வார்த்தைகள் விடுத்து
அறிவாய் முன்னேறு
அரிய இலக்கியம் படித்து


இலக்கியம் படித்து என்ன செய்யப் போறே? வளரும் உலகில் இலக்கியமா? என்கிற பாணியில் சிலர் பேசுவதை அறிந்ததால் வந்த கவிதை இது.










21 கருத்துகள்:

  1. அறியாமையினால் கேள்வி கேட்போருக்கு அருமையான கவிதையில் பதிலளித்து விட்டீர்கள் தோழி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இலக்கிய படிப்பா? என்று வினவுவோருக்கு நல்ல பதில்!

    பதிலளிநீக்கு
  3. இலக்கியத்தின் பெருமை அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அறியாமை வார்த்தைகள் விடுத்து
    அறிவாய் முன்னேறு
    அரிய இலக்கியம் படித்து

    நன்றாக சொல்லியுள்ளிர்கள் ... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      உங்கள் கருத்துரைக்கும் பிடித்த வரிகள் சொல்லியதற்கும் நன்றி!

      நீக்கு
  5. அருமையாக சொன்னீங்க ...சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. அப்படிச் சொல்லுங்க... புரியாதவர்களுக்கு புரிந்தால் சரி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதைத் தான் பார்த்துக்கொண்டிருந்தேன்..பகிர்விற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  8. அறியாமையால் எழுந்த வினாவுக்கு வந்த பதில் கவிதையாக அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  9. இலக்கியத்தை இனிமையாக்க சொல்வது சரிதான்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...