எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
பள்ளி விழாக்களுக்கு ஓடியதில்
படிகளில் தொலைத்தேனா
விருந்தாளிகளுடன் பொழுதுபோக்கில்
விளையாட்டாய்த் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
சிறப்பாய் நடந்த நத்தார் விழாவிற்குப் பாடல்கள்
சிறார்க்குக் கற்றுக் கொடுத்ததில் தொலைத்தேனா
கேக்கும் இனிப்பு அப்பமும் செய்ததிலும்
முறுக்கைப் பிழிந்ததிலும் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
குழந்தைகளின் சிறுஉடல்நலக் குறைகளில்
கலங்கியதில் தொலைத்தேனா
பயணங்களில் மூட்டை கட்டி
பத்திரமாய்த் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
நான் கணினி எடுக்கும்போது நின்று போகும்
நிலையில்லா இணையத்தொடர்பில் தொலைத்தேனா
அவ்வப்போது மிரட்டிய சில பிரச்சினைகளில்
அறியாமல் தொலைத்தேனா
எங்கு தொலைத்தாலும் எப்படித் தொலைத்தாலும்
கண்டு பிடிக்காமல் விடுவேனா
தேயும் நிலவு வளராமல் போகுமா
தேடி வலைத்தளம் வராமல் போவேனா
இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தேன்
இம்சிக்கவோ மகிழ்விக்கவோ
என் இணைய நேரத்தை
பள்ளி விழாக்களுக்கு ஓடியதில்
படிகளில் தொலைத்தேனா
விருந்தாளிகளுடன் பொழுதுபோக்கில்
விளையாட்டாய்த் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
சிறப்பாய் நடந்த நத்தார் விழாவிற்குப் பாடல்கள்
சிறார்க்குக் கற்றுக் கொடுத்ததில் தொலைத்தேனா
கேக்கும் இனிப்பு அப்பமும் செய்ததிலும்
முறுக்கைப் பிழிந்ததிலும் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
குழந்தைகளின் சிறுஉடல்நலக் குறைகளில்
கலங்கியதில் தொலைத்தேனா
பயணங்களில் மூட்டை கட்டி
பத்திரமாய்த் தொலைத்தேனா
எங்கே தொலைத்தேன்
என் இணைய நேரத்தை
நான் கணினி எடுக்கும்போது நின்று போகும்
நிலையில்லா இணையத்தொடர்பில் தொலைத்தேனா
அவ்வப்போது மிரட்டிய சில பிரச்சினைகளில்
அறியாமல் தொலைத்தேனா
எங்கு தொலைத்தாலும் எப்படித் தொலைத்தாலும்
கண்டு பிடிக்காமல் விடுவேனா
தேயும் நிலவு வளராமல் போகுமா
தேடி வலைத்தளம் வராமல் போவேனா
இப்படிச் சொல்லிக் கொண்டு வந்தேன்
இம்சிக்கவோ மகிழ்விக்கவோ
மிக்க மகிழ்ச்சியே... இனி தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி திரு.தனபாலன். உங்கள் ஊக்கத்துடன் கண்டிப்பாகத் தொடர்வேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதேடல் பற்றிய கவிதை மிக நன்றாக உள்ளது....
உங்கள் வாழ்க்கையில் ஏதோ உன்றை தேடிக் கொண்டு இருங்கள்... விடியல் ஒரு நாள் பிறக்கும் வாழ்த்துக்கள்
புதிய கவிதையாக என்பக்கம்-வாருங்கள்...(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)
http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்!
நீக்குஉங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி! கண்டிப்பாக உங்கள் கவிதை பார்க்கிறேன்.
நன்றி!
Imsikka illai Sako..!
பதிலளிநீக்குNeengal vanthathil makizhve..
உங்கள் கருத்துரை ஊக்கமும் மகிழ்வும் தருகிறது, மிக்க நன்றி சகோ!
நீக்குநிச்சயம் மகிழ்விக்க தான் வந்திருகிறீர்கள் !
பதிலளிநீக்குஎங்கு தொலைந்தீர் இப்படியான சிக்கல்கள் இருக்குமோ ?
என்று என் கற்பனை பின்னிய வலையை
இப்படி படி எடுத்தது போல் எழுதிவிட்டீரே !
நல்ல வேளை தேடிய உள்ளம் நிம்மதி கொள்ள
வந்துவிட்டீரே! மிக்க மகிழ்ச்சி !!
உங்கள் கருத்துரை கண்டு நெகிழ்ந்து மகிழ்கிறேன் மைதிலி. உங்கள் அன்பிற்கு உளமார்ந்த நன்றி!
நீக்குதேயும் நிலவு வளரத்தான் செய்யும்
பதிலளிநீக்குநேரமும் கிடைக்கத்தான் செய்யும்
அருமை
ஆமாம், மிக்க நன்றி ஜெயக்குமார் அவர்களே!
நீக்குத.ம.2
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார்!
நீக்குநிச்சயம் மகிழ்விக்கவே
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை
வசன கவிதைக்கும் ஓசை நயம் உண்டு
பலர் இதில் கவனம் கொள்வதில்லை
அதைக் தங்கள் கவிதையில் காண மகிழ்ந்தேன்
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி ஐயா, உங்கள் பாராட்டு ஊக்கமும் மகிழ்வும் தருகிறது.
நீக்குகண்டிப்பாகத் தொடர்வேன். நன்றி!
கண்டிப்பாக மகிழ்ச்சிக்கவே :) வருக.. வருக.. கவிதைகள் பல தருக :)
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீனி..கண்டிப்பாக :)
நீக்குதங்களை இம்சிச்சு, எங்களை மகிழ்விக்கத்தான்! :)
பதிலளிநீக்குஎனக்கும் இம்சை இல்லை வருண். உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்
தமிழ்மணம் 5
வாழ்வில் அடைந்த வலிகளை வார்த்துள்ளீா்
சூழ்துயா் நீங்கும் துணி
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா!
நீக்குஉங்கள் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் நன்றி!
நண்பர்களுடன் அளவளாவுதை "பொழுதை பொன் செய்தேன் "பிரபஞ்சன் என்கிற பேராளுமை சொல்வார்
பதிலளிநீக்குஅந்தவகையில் தொலைத்ததாக குறிப்பிடும் பலவிசயங்கள் பொன்னான பொழுதுகளே...என்று தோன்றுகிறது
எப்போதும் இணையம் என்பதும் தவறுதானே?
அவ்வப்பொழுது ஒரு நிறுத்தம் எடுத்துக்கொண்டு மீள்வது ஒன்றும் தொலைதல் அல்ல அது படைப்பாளனை மீளக் கண்டெடுப்பது.
உறவுகளையும், நண்பர்களையும் கடமைகளையும் அவற்றிற்குரிய முன்னுரிமையில்தான் நீங்கள் அணுகியிருக்கிறீர்கள் எனவே
நீங்கள் எங்கும் தொலைந்து போகவில்லை என்பது எனது கருத்து.
anyhow welcome back!
ஆமாம் மது, இணையத்தில் இருந்து தொலைத்தேனே தவிர வீண்போகவில்லை என்றே நானும் கருதுகிறேன். நீங்கள் சொல்வது போல எப்பொழுதும் இணையம் என்பது பெருந்தவறே. உங்கள் விரிவான ஊக்கப்படுத்தும் கருத்திற்கும் வரவேற்பிற்கும் உளமார்ந்த நன்றி மது!
நீக்குஉங்கள் வருகை நிச்சயமாக மகிழ்வுதான். தமிழ் எவரையேனும் இம்சிக்குமா? இதுவோ தேமதுரத் தமிழ்! இன்னும் இன்சுவையன்றோ? ஆக்கமாய் பொழுதைக் கழிக்கும்வரை ஏக்கம் தேவையில்லை. தொடரட்டும் தொலையாத நேரங்களில் சுவையான பதிவுகள்.
பதிலளிநீக்குஉங்கள் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி!
நீக்குதொடர்ந்து இணையத்தில் உலவ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்!
நீக்கு