Sunday, August 21, 2016

ஆம்பளடா

Img:thx google

மூன்றுபேர்
இருசக்கர வாகனத்தில்
வேண்டுமென்றே
குறுக்கே வெட்டி
ஆட்டம் காட்டலாம்...ஆம்பளடா!
ஒருவர்
இருசக்கர வாகனத்தில்
பழக்கமில்லா அறியாமையால்
குறுக்கே வெட்டிவிட்டால்
பெருங்குற்றம்
பொம்பளப்பிள்ளைகளேஏ
இப்படித்தான்!!


சில நண்பர்களுக்குப் புரியவில்லை என்பதால் சிறு விளக்கம்:
ஆண்பிள்ளைகள் வண்டியில் மூன்று பேராகச் சென்று பெண்கள் முன்னால் வேண்டும் என்றே குறுக்கே வெட்டிச் சென்று, ஆட்டம் காண்பிப்பார்கள். ஒரு பெண் தன்னை முந்திச் சென்றுவிட்டால் வேகம் அதிகரித்து அப்பெண்ணை இடிப்பது போல் (இடித்தும்) சென்று முந்தியும் முறைத்தும் செல்லும் ஆண்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த ஆண்களின் "ஆம்பளடா" எண்ணம்..!!
ஆனால் வீட்டில் அடைந்துகிடந்த பெண்கள் இன்று வண்டி வாங்கித் தெரியாமல் கொஞ்சம் தவறி விட்டாலும் 'இவளுக ஏன் வண்டி ஓட்டணும்?', 'பெண்களே சரியாக ஓட்டுவதில்லை' இப்படிச் சரமாரியாகப் பொதுக்கருத்துகள் வைக்கப்படும். அதைக் கண்டிக்கிறேன். தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தவறென்று சொல்லலாம்,,அதை விடுத்து எங்கும் எதிலும் பொதுவாகப்  பெண்களை  இழிவு படுத்தினால் அது தவறு.. நன்றி!

38 comments:

 1. Replies
  1. நன்றி ஸ்ரீராம்.
   அபுரி என்றால்? என்று தேடி ரமணி ஐயாவின் பதிவினைக் கண்டேன்..அங்கும் ஸ்ரீராம் :)))
   http://yaathoramani.blogspot.com/2016/08/blog-post_5.html

   மதுரைத்தமிழன் சகோ கவனிக்கவும்.

   Delete

  2. விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
  3. இந்த மதுரக் காரங்களுக்கு லொல்லு அதிகம் அதனால்தான் இங்கு ஒருத்தர் புரியாத கவிதை எழுத அதை படித்த இன்னொரு மதுர புரியதா கருத்து போட கடைசியில் இந்த சாமனிய மதுர என்னடா இந்த பெரியவங்க என்னவோ சொல்லுறாங்க நமக்கு ஒன்றுமே புரியலைன்னு தலையை பிச்சுக்கிட்டு இருந்தேன் இப்ப ஒரு மதுர கவிதைக்கு விளக்கம் கொடுத்தாச்சு ஆனால் இன்னொரு மதுர கருத்துக்கு விளக்கம் சொல்லாமல் இருக்கிறார். ஒரு வேளை நான் போராட்டம் என்று அறிவித்த பின்னர்தான் பதில் சொல்லுவாரோ என்னவோ

   Delete
  4. ஹாஹா ...
   ரமணி ஐயாவின் தளத்திற்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேனே..

   அபுரி - புரியாது, புரிந்துவிட்டால் பிரமாதம்...
   சரியா என்று ஸ்ரீராம் சகோதான் சொல்ல வேண்டும்.

   Delete
  5. க்ரேஸ் இந்த அபுரி யை நான் ஸ்ரீராமிடம் இருந்துதான் கற்றேன். அவர் கை காட்டுவது எழுத்தாளர் சுஜாதா அவர்களை. அவர் ஒரு கதையில் உபயோகப்படுத்தியிருப்பார் என்று.

   கீதா

   Delete
 2. Replies

  1. எனக்கும்தான் புரியலை... கிரேஸ் பதிவிட்டதும் நான் முதலில் படித்தேன் புரியவில்லை அதன் பிறகு யாராவது படித்துவிட்டு கருத்து சொல்லுவார்கள் அதன் மூலம் புரிஞ்சு கொள்ளலாம் என்று பலமுறை வந்து பார்துவிட்டேன் இன்னும் புரியலை இனிமேலுயும் எனக்கு தாங்காது எங்களை போல உள்ள சாமானியர்கள் புரிந்து கொள்ள விளக்கவுரை வேண்டும் இல்லையென்றால் கிரேஸ் வீட்டு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை.

   Delete
  2. தாமதத்திற்கு மன்னிக்கவும். விளக்கத்தைப் பதிவிலேயே சேர்த்துவிடுகிறேன்.

   Delete

  3. சகோ விளக்கத்திற்கு நன்றி அதைபடிச்சவுடன் எனக்கு என்னா புரிஞ்சிச்சு என்றால் நீங்களோ அல்லது உங்களது தோழியோ யார் மேலேயோ வண்டியை கொண்டு இடித்துவிட்டு திட்டு வாங்கி வாந்திருக்கிறீர்கள் என்று அதன் விளைவாக எழுந்த பதிவுதான் இது. எப்படிடா நாம் சகோ இவ்வளவு அறிவாளியாக இருக்கிறானே என்று ஆச்சிரியப்படக் கூடாது ஒகே வா ஹீஹீஹீ

   Delete
  4. ஆச்சரியமெல்லாம் இல்லை...சகோ வின் புரிதல் அறிவேன் நான் :-))))

   Delete
  5. நல்லாருக்குல க்ரேஸ்! மதுரை சகோவிற்கு பூரிக்கட்டை அடி வாங்கி வாங்கியே மூளை தெளிந்து அறிவாளியாகிவிட்டார் இல்லையா!!! ஹிஹிஹி

   கீதா

   Delete
 3. புரியவில்லை. ஒருவேளை புரியாமல் இருப்பதும் நல்லதுதானோ?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா எனக்கு மட்டும்தான் புரியவில்லை என்று நினைத்து இருந்தேன் ஆனால் அறிஞருக்கும் இப்போது புரியவில்லை போல இருக்கிறதே...

   Delete
  2. விளக்கம் சேர்த்திருக்கிறேன் ஐயா, நன்றி.

   Delete

 4. கிரேஸ் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் கவிதை கிண்டல் பண்ணி பதிவிட்டேன் அது நகைச்சுவைக்காகத்தான் ஆனால் அதற்கு பதில் பதிவாக இந்த பதிவு இருக்கிறது போல....மன்னிச்சுகோங்க சகோ இனிமே கவிதையை கிண்டல் பண்ணி பதிவு எழுத மாட்டேன் எழுத மாட்டேன் எழுத மாட்டேன் எழுத மாட்டேன்எழுத மாட்டேன்

  ReplyDelete
  Replies
  1. அடடா சகோ..காமெடி பண்ணாதீங்க. அலைபேசியில் கருத்துகளைப் பார்த்து வெளியிட்டுவிட்டேன். பதில் எழுதுவதற்குத் தாமதம்..அதற்குள் இப்படியா? :)
   நன்றி சகோ,,,புரியலேன்னு போகாம பல முறை வந்து அறிந்துகொள்ளும் ஆவலுக்கு நன்றி பல :)

   Delete
 5. அருமையான பா வரிகள்
  தொடருங்கள்
  தொடருவோம்

  ReplyDelete
 6. வணக்கம்
  சகோதரி
  அருமையான பாவரிகள் விளக்கமும் நன்று...
  இப்படி வெட்டி திரிவது வாலிப வயது.இதுவெல்லாம் சாதாரணம்....ஹீ..ஹீ..ஹீ..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   நன்றி.

   சாதாரணமா?! ஹ்ம்ம் விபத்து ஏற்பட்டால்? இருபாலரும் கவனமாக ஓட்ட வேண்டும் என்பதே என் கருத்து. பொதுவாக ஒரு பாலினத்தைத் தவறாகச் சித்தரிப்பதை நான் எதிர்க்கிறேன்..அதற்கே இக்கவிதை.

   Delete
 7. அஹா...
  இதை கவியாக்கியாச்சு...
  நல்லவேளை விளக்கம் இருந்ததால் தப்பித்தேன்....
  புரிந்தது...

  ReplyDelete
 8. 'ஆம்பளடா' என்ற திமிரை விட பருவ வயதில் ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பே இந்த முரட்டுத்தனத்துக்கு காரணம். அது ஓரிடத்தில் ஆணை அடக்கமாக இருக்கவிடுவதில்லை. இதைப்போலவே பெண்களுக்கும் பருவ வயதில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் பெண்ணுக்கு தன்னை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை தொடர்ந்து ஏற்படுத்துகிறது. ஒரு பெண் தன்னை அழகாக காட்டிக்கொள்வதற்காக எத்தனை மெனெக்கிடுகிறாள். இரு இனத்துக்குமே பருவ வயதில்தான் இதன் சுரப்பு அதிகம். வயது ஆகஆக அதன் சுரப்பு குறையும். ஆணுக்கு முரட்டுத்தனமும் பெண்ணுக்கு அழகுபடுத்திக் கொள்வதும் காணாமல் போய்விடும். இருவருக்கும் இருவேறு குணங்கள் இது இயற்கையே வடிவமைத்ததுதான் ஆண் என்ற திமிர் அல்ல.
  நன்றி!

  த ம 3

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விளக்கம் சரியே சகோ. ஆனால் நான் குறிப்பிட்டிருப்பது வேறு. பெண்கள் என்றாலே சரியாக வண்டி ஓட்டமாட்டார்கள் என்ற பொதுத்தூற்றலை எதிர்த்தே இக்கவிதை..
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
  2. உண்மைதான் க்ரேஸ்! நான் கார் ஓட்டினால் என்னவோ எனக்கு ஓட்டத் தெரியாதது போல பல ஆண்கள் அருகில் வந்து முறைத்துப் பார்த்தல், சைட் வ்யூ மிரரைத் தட்டிச் செல்லுதல் குறிப்பாக கால் டாக்சி ஓட்டுநர்கள்...சிக்னலில் காத்திருக்க பொறுமை இல்லாமல் ஏதோ நான் தவறு செய்தது போல் திட்டுதல் என்று ரொம்பவே..

   கீதா

   Delete
 9. கல்லூரிப் பருவத்தில் நானும் “ஆம்பள”யாகத்தான் இருந்தேன் (டா வாக என்றுமே இருந்ததில்லை) பின்னர் கிடைத்த நண்பர்களால் இப்போது, யாரேனும் பெண்பிள்ளைகள் என் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்றால், உண்மையிலேயே மகிழ்கிறேன். “போடா போ..இன்னும் நீ செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கு! கவனமாப் போ” என்று மனசுக்குள் வாழ்த்துகிறேன் -உண்மைடா!
  “இப்ப வயசாயிப்போச்சு அதுனால சமாளிக்கிறீங்களா? என்று மதுரைத்தமிழனின் மைண்ட் வாய்ஸ் கேட்குது..உண்மையில்தான் அய்யா “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” பாடலை எழுதி, எங்கள்மாவட்ட அறிவொளிஇயக்கத்தில் சுமார் 50,000பேர் சைக்கிள் ஓட்டத் தூண்டுகோலாக இருந்தவனாக்கும்! அப்ப வந்த பண்பு இது!
  நிற்க.. கொள்ளிவைப்பதும் ஆண்தானாம் குலப் பெருமை சொல்வதும் ஆண்தானாம், பழங்கதை சாத்திரம் பலபேசி தள்ளிவைக்கிறார் பெண்குலத்தை, பெண்கள் இங்கே கொள்ளிவைத்தால் பிணங்கள் வேகாதா? முத்துலட்சுமி வள்ளியம்மைபோல் ஆகக் கூடாதா?” என்பதும் அறிவொளி இயக்கத்தில் நாங்கள் பாடிய-பிரளயன்எழுதிய- பாடல். இதுபற்றித் தனிப்பதிவே போடலாம். அவ்வளவு தூண்டுகிறது கவிதை.

  ReplyDelete
  Replies
  1. //உண்மைடா! //உங்களை அறிவேன் அண்ணா.
   ஹாஹா மதுரைத்தமிழன் மைன்ட் வாய்ஸ் எல்லாபக்கமும் கேட்குதே :)))
   //“சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி” //பாடல் மற்றும் அறிவொளி இயக்கப் பணிகள் பற்றிய கட்டுரை படித்திருக்கிறேன். புதுகோட்டையில் அதிகமாக சைக்கிள் விற்பனை ஆனது என்றுகூட நேற்று வாசித்தேனே..உங்கள் பங்கு பெரிது அண்ணா. மிக்க நன்றி.
   உண்மைதான் அண்ணா..இன்றும் பேரனை வாரிசு என்று சொல்லி பேத்தியை ஒதுக்கும் கிறுக்குத்தனம் நடக்குதே..பதிவிடுங்கள் அண்ணா..வாசிக்கக் காத்திருக்கிறோம்.
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா.

   Delete
 10. வன்கோம் கர்டசி யாரு என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்..

  தம +

  ReplyDelete
  Replies
  1. வாசித்தவுடன் புரியவில்லை அண்ணா :)
   கர்டசி ஒரு காரணம் அல்ல அண்ணா...பல, பல்வேறு திசைகளிலிருந்து.
   நன்றி அண்ணா.

   Delete
 11. சகோ/ க்ரேஸ் முதலில் வாசித்ததும் புரியவில்லைதான். ஆனால் உங்கள் விளக்கம் பார்த்தவுடன் மீண்டும் வாசித்ததும் சொல்ல வந்த கருத்து புரிந்தது.

  ReplyDelete
 12. vilaka uarai paditha piragu kavithai nadi arumai: thanaku yeer pata anupavam sagothri sonathu 2 wheeler ooti pinam thooki selpavargal meethu vitu avargal thitiya piragu 2 wheeler edupathu ilayam. avargal sona vidam ennaal siripai adaka mudiyavilai. ovaru varkum oru anupavam .

  ReplyDelete
 13. apuri kula ithana iruka? arumai therithu kondan.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...