வந்ததே உனைக் கண்டதும்

image: thanks google

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்

எழுதுகோலை கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்


காகிதத்தைக் கசக்கி கசக்கி
கடமையாகச் சிந்தித்தாலும்

கவிழ்ந்து படுத்து மணிக்கணக்காய்
காலாட்டி யோசித்தாலும்

வராத கவிதை நீர்வீழ்ச்சியாய்
வந்ததே உனைக் கண்டதும்

17 கருத்துகள்:

  1. அருமை அருமை
    கவிதைக்கும் கவிதையின் ஊற்றுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஊற்றுக் கணக்காய்
    உள்ளத்தே எழுந்த
    உணர்ச்சிக் கவிதைக்கு
    மாற்றுக் கருத்து
    ஏதும் இல்லை!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.தமிழ் இளங்கோ.

      நீக்கு
  3. இப்போதெல்லாம் அந்த நாட்களை எண்ணிப்பார்த்துத்தான் காதல் கவிதை எழுத முடிகிறது. உணர்ந்து எழுதிய கவிதை பாராட்டுக்கள். என் மின் அஞ்சல் கிடைக்க வில்லையா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! இன்னும் அந்த நினைவுகளில் கவிதை வருகிறதே..அருமை!
      வந்தது ஐயா..பதிவை பாதி படித்தேன்..ஏதோ வேலை காரணமாக எழுந்து சென்று மறந்தேவிட்டேன்...படிக்கிறேன் ஐயா. பகிர்விற்கு நன்றி!

      நீக்கு
  4. வணக்கம்
    இப்படியான முடிவில்தான் அழகிய கவிதை பிறக்கும்..... அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அது எப்படி வராமல் போகும்... காதல் அப்படி ... அருமை... அருமை

    பதிலளிநீக்கு
  6. கண்டதும் கவிதை வந்ததே.....
    கவிதையும் இன்பம் தந்ததே.....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி வெங்கட்.

      நீக்கு
  7. நீர்வீழ்ச்சியாக வந்த கவிதை அருமை..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...