உதயன் என்று ஒரு சிறுவன் தன் தாய் தந்தையோடு வசித்து வந்தான். ஏழ்மையான குடும்பம். உதயனுடைய தந்தை கட்டிடத் தொழில் செய்யப் போவார். தாயார் சில வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் குடும்பச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணம் சம்பாதிப்பார். இந்த நிலையில் உதயனின் பெற்றோர் அவனை நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று சொல்லி ஊக்குவித்தனர். அவனும் பொறுப்பை உணர்ந்து நன்றாகப் படித்து வந்தான்.
திடீரென்று கட்டிட வேலைகள் சரிவரக் கிடைக்காமல் அவன் தந்தை தவித்தார். இந்தச் சூழ்நிலையில் உதயனுக்கு ஒரு பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. தன் வீட்டு நிலைமை தெரிந்திருந்த உதயன் பெற்றோரிடம் பணம் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது என்ற கவலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் ஆசிரியரைப் பார்த்தான். ஆசிரியர் அவனிடம், "உதயா, பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டுமே, தேவை என்றால் நான் உதவட்டுமா?" என்று கேட்டார். உதயன் அவரிடம், "மிக்க நன்றி ஐயா! ஆனால் மன்னித்துக் கொள்ளுங்கள். சும்மா பணத்தை ஏற்பதற்கு எனக்கு மனம் இடம் அளிக்கவில்லை. நான் செய்யக்கூடிய ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள் ஐயா, அதைச் செய்து பணம் கட்டிக்கொள்ளப்பார்க்கிறேன்" என்று சொன்னான். அவனைப் பெருமிதத்துடன் பார்த்த ஆசிரியர், "சரி, தெரிந்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள் உதயனை அழைத்த அவர், "தெரிந்த ஒருவர் வீட்டில் உள்ள ஒரு நான்கு வயதுச் சிறுவனை தினமும் மாலையில் 2 மணி நேரம் பார்த்துக் கொள்ளவேண்டுமாம், செய்கிறாயா?" என்று கேட்டார். உதயனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். பரிட்சைக்குக் கட்டப் பணமும் சம்பாதித்தான். தன் வறுமையிலும் தேவையின்போதும் "ஏற்பது இகழ்ச்சி" என்ற அவ்வைப் பாட்டியின் அறிவுரைக்கு ஏற்ப செயல்பட்ட உதயனை ஆசிரியர் பாராட்டினார்.
ஒன்றும் செய்யாமல் யாரிடமாவது உதவி பெறுவது இகழ்ச்சி. அதைவிட தன்னால் நல்ல வழியில் முடிந்ததைச் செய்து பணம் ஈட்டுவது தான் நல்லது.

உதயன் மனதில் இருளை நீக்கி விட்டான்...
பதிலளிநீக்குநல்லதொரு நீதிக்கதைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
எளிமையான நடையில், அவ்வையின் கூற்றை அழகாக விவரிக்கும் கதை
பதிலளிநீக்குநன்றி Srini
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நன்றி மதுரைத் தமிழன்! தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீக்குநல்ல கதை... நன்கு புரியும்படி உள்ளது... நன்றிகள் பல....
பதிலளிநீக்கு