வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!
வல்லினச் சிறகுகள் ஏப்ரல் 2021 இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் 'பெருமைக்குரிய பெண்கள்' பகுதியில் நான் காணும் நேர்காணலும் மகிழ்வு தரும்இன்னும் இரண்டு செய்திகளும்!
'தமிழ் என் தாய் தந்த அமுதம்' மற்றும் உரோமைத் தமிழ்ச் சங்கம் இணைந்து 'வாங்க கொண்டலாம்' என்ற நிகழ்ச்சியைத் திங்கள் தோறும் நடத்துகின்றனர். அதில் ஏப்ரல் திங்களில் பாரதிதாசன் அவர்களைக் கொண்டாடிச் சிறப்பித்தனர். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தனர்.
தனிமை தடுக்கும் நட்பே திகட்டா தேனமுதே
கனிவே மொழியாய் யாவும் உணர்த்தும் நுவல்வோனே
அனித அறிவை அன்பாய்ப் புகட்டும் அன்னையே
அனிலம் அகற்றி அகிலம் வெல்லும் ஆயுதமே
நனிதவ அணியே நூலெனும் கொடையே
அனிசமும் எந்தன் அனிகம் நீயே!
- கிரேஸ் பிரதிபா
அனிதம் - கணக்கற்றது; அனிலம் - அச்சம்; அனிசம் - எப்பொழுதும்; அனிகம் - சிவிகை, சேனை;
அன்புத்தோழி, நிகழ்காலம் வலைத்தளத்தின் வலைப்பதிவர், மனமகிழ் மைன்ட் கேர் நிறுவனர், எழில் அவர்களின் மன நலம் குறித்த விளக்கமும் அறிவுரைகளும்!
'நங்கை கூறும் நவீனங்கள்' எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறேன். இந்நிகழ்ச்சி தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மனநலம் குறித்துப் பேசலாம் என்று தோழி எழிலிடம் கேட்டவுடன் சரியென்று ஒத்துக்கொண்டார். மனம் நிறைந்த நன்றிகள், எழிலுக்கு! அருமையாக மனநலம் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டார். காணொலியைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
நன்றி!
வல்லினச் சிறகுகள் இதழில் வெளிவந்திருக்கும் என்னுடைய கவிதையும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திருமிகு.பிரபா ஸ்ரீதேவன் அவர்களுடனான என்னுடைய நேர்காணலும்.
வலைத்தமிழ் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி அட்லாண்டாவின் யாவரும் கேளிர் குழுவுடன் இணைந்து நடத்திய பட்டிமன்றம்.
பெண்கள் வளர்ச்சி அடைந்துவிட்டனரா? இன்னும் என்னென்ன வழிகளில் துறைகளில் வளர வேண்டும்? ஆக்கப் பூர்வமான ஒரு கலந்துரையாடல்!
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.