சாளரமருகில் சிலையென

Img: thanks Google

உள்ளம் நனைக்கிறான்
தொடாமலே!
வேலைகள் விட்டு
மயங்க வைக்கிறான்!

தூக்கத்தில் எழுப்பியும்
சிலிர்ப்பிக்கிறான்..
கோபம் வருவதில்லை!
தடை போட்டாலும்
நிறுத்தமுடியவில்லை
அவனைப் பாடுவதை!
இதோ இப்பொழுதும்
பொழிகிறான்...
சாளரமருகில்
சிலையென நான்!

13 கருத்துகள்:

  1. சிலையென நான்.. கவிதை.. ஒரு கவிதை காட்சியாகிறது..அருமை சகோ

    பதிலளிநீக்கு
  2. மழை..நனைந்தாலும் சுகம், நினைந்தாலும் சுகம்தான்!
    அப்பாடா..ஒருமாத இடைவெளிக்குப்பின் இப்போதுதான் உன் (வலை)மழையைப் பார்க்க மகிழ்ச்சிம்மா.. தொடர்க! த.ம.2

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! மழை!!! மிகவும் ரசித்தோம்!!! அருமை சகோ/க்ரேஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...