பெரும் பெயல் பொழிந்த சனிக்கிழமை மாலை
ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி
சாரலோடு மகிழ்ந்து காகிதக் கப்பல் செய்து
நீரில் அவை மிதப்பதும் மூழ்குவதும் கண்டு
மூழ்கிய கப்பலால் சாளரம் துடைத்து நிற்க
'இந்தாருங்கள் சாக்லேட்', அம்மா சொல்ல
'நற்சொல் கேட்டனம்' என்றே மகிழ்ந்தனர் புதல்வர்
"பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" என்ற முல்லைப்பாட்டு வரியின் (வரி எண்.6) இனிய தாக்கம் இக்கவிதைக்கு அடித்தளம் அமைத்தது.
சொற்பொருள்: பெயல்- மழை, மருங்கில் - அருகில், போகி - சென்று, கேட்டனம் - கேட்டோம்
/// ஆர்வமுடன் பலகணி மருங்கில் போகி /// சிறப்பு
பதிலளிநீக்குஉங்கள் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.தனபாலன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
எழுதிய கவிதை நன்று சங்க இலக்கியப்பாடல் வரியையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அரும் பத விளக்கங்களும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சின்ன வயது நினைவை அள்ளிச்சென்றது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே
நீக்கு//அரும் பத விளக்கங்களும் நன்று// மிக்க நன்றி.
ஆமாம், சிறுவயது நினைவு எனக்கும் வந்தது. நான் வாசலில் கப்பல் விட்டேன், என் பிள்ளைகள் பலகணியில் :)
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை கிரேஸ் ..
பதிலளிநீக்குநல்ல வரிகள்.
பதிலளிநீக்குநாம் செய்த காகிதக்கப்பல் நினைவிற்கு வந்தது.
நன்றி கிரேஸ்.
வேதா.இலங்காதிலகம்.
இனிய நினைவுகள் அல்லவா?
நீக்குநன்றி சகோதரி
ஒருவரியுடன் தொடர்ந்த தங்கள்
பதிலளிநீக்குகற்பனை விரிவு அற்புதம்
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா
நீக்குtha.ma 5
பதிலளிநீக்குசிறந்த கவிதை
பதிலளிநீக்குபொருள் விளக்கம் அருமை!
நன்றி ஐயா
நீக்குசங்க இலக்கியம் தந்த கவியடி
பதிலளிநீக்குஉங்கள் படைப்பில் ஒளிர்ந்து!
என்னவென்று பாராட்ட உங்கள் திறமையை!
என் அறிவு போதவில்லை இன்னும் சொல்ல...
வாழ்த்துக்கள் தோழி!
பா படைக்கும் உங்கள் திறமைக்குமுன் என்னுடையது சிறியதே தோழி..
நீக்குநன்றி
அடடா! கற்பனை அழகு கிரேஸ்.
பதிலளிநீக்குநன்ற இமா
நீக்குஇப்படி அனைவரும் இன்தமிழில் பேசிக் கொண்டால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்!..
பதிலளிநீக்குஆமாம் ஐயா..
நீக்குநன்றி
சிறந்த கவிதை நடை சகோதரி
பதிலளிநீக்குபழமையும் புதுமையும் கலந்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சகோதரரே
நீக்குநல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமூலத்தை எடுத்துரைக்கும் நேர்மையும் கவிதை போலவே அழகு!!
பதிலளிநீக்குவாங்க தோழி..நலமா?
நீக்குஅழகிய கருத்திற்கு நன்றி
அருமையான வார்த்தைத் தேடல்...
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பிரியா
நீக்குநல்ல கவிதை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி மது
நீக்குத.ம எட்டு...
பதிலளிநீக்குத.ம. வாக்கிற்கும் நன்றி மது
நீக்குவணக்கம் அக்கா...
பதிலளிநீக்குவீதியில் கப்பல் விட்ட நிலை போய் இப்போது பால்கனியில்...
கத்திக் கப்பல், சாதாரணக் கப்பல், அடுக்குக் கப்பல் என பல வித கப்பல்களை செய்த நினைவுகள் கண்முன் தோன்றுகிறது...
நன்று நன்று...