அணிலும் பாடுதே

Image: thanks Google

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

என்னை அழைக்கின்றதோ
தன்னை மறந்து இசைக்கின்றதோ

தன் துணைத்  தேடுகின்றதோ
தன் குட்டிக் கொஞ்சுகின்றதோ

காக்கையிடம் நலம் விசாரிக்கின்றதோ
பருக்கை இருக்குமிடம் சொல்கின்றதோ

சுற்றிவரும் பருந்தைக் காட்டுகின்றதோ
காற்றிலாடும் தென்னங்கீற்றில் இனிமையாய்

நீண்ட நேரமாய் ஸ்குவீக் ஸ்குவீக் என்றே
அணிலும் பாடுதே

35 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி

    நல்ல கற்பனையில் அருமையான அணில் பாட்டு பாடி இரசித்தேன் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அணில் அப்படியா கத்தும்!!? எனக்கென்னமோ கீச்..., கீச்ச்ன்னு கத்துற மாதிரி கேட்குமே! அடுத்த முறை கூர்ந்து கவனிக்கனும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இது என்னடா புது குழப்பம்...அணிலுக்கும் தாய்மொழி இருக்குமோ? கேட்டுட்டு வரேன் :)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜி

      நீக்கு
  3. //துணை, குட்டி, காக்கை, பருக்கை, பருந்து//
    உங்கள் பாடலை பார்த்தால் அந்த அணில் " குவீக் குவீக் "என்று அல்லவா பாடி இருக்க வேண்டும். அருமையான பதிவு....ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அய்..! குட்டி அணில் தான் என்ன அழகு! உங்கள் கற்பனையும் எதார்த்தமும் கலந்த கவிதை பேரழகு! வாழ்த்துகள் சகோதரி. பதிவுகளில் அப்பப்ப இதுமாதிரிக் கவிதைகளையும் வெளியிடுங்கள்... நம் படைப்பு ஈரம் காயாமல் வைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா
      நீங்கள் ரசித்துக் கருத்திட்டது மகிழ்ச்சி . கண்டிப்பாக ஐயா. முன்னர் இதுபோல் பதிவுகள் அதிகம் இருக்கும். இப்பொழுது தமிழும் ஆங்கிலத்திலும் இலக்கியம் என்று இதுபோல் பதிவுகள் குறைந்தது. இரண்டையும் சமன் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  5. நாட்டில இதயெல்லாம் கவனிக்க ஒருத்தரேனும் இருக்கினம் என்று அறிந்து கொண்டால் நாயும் பாடும்லே லொள் லொள் என்று :)))))))))) .மிகவும் ரசித்தேன் தோழி வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி, நாயும் பாடுகிறது, இரவில் உச்சஸ்தாயியில் :)
      ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. ஹை! அணிலார் அழ..கு.
    இந்த நாட்டுக்கு வந்து நான் மிஸ் பண்ணுற ஒரு விஷயம் அணில். ;(
    கவிதை... ரசித்து எழுதியிருக்கிறீங்கள். நானும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவில் அணிலைப் போல பெரிது பெரிதாய் இருக்கும்..அது chipmunk
      உங்கள் நாட்டில் அப்படி ஏதேனும் இருக்கின்றதா?
      நம் ஊர் அணில் அழகோ அழகுதான்

      ரசித்துக் கருத்திட்டதற்கு மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி

      நீக்கு
  7. அணிலுக்கு பாட்டு போட்டதை - அந்த அணில் கிட்டே சொல்லியாச்சா!?..

    - படுபாவிகள் மரங்களை வெட்டிச் சாய்க்கும் போது - இந்த சிற்றுயிர்க்கும் வாழ வழியின்றிப் போகுதே!.. மானுடமும் அழிந்து ராட்சஷம் ஆகுதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிட்டேன்..அதே பாட்ட (ஸ்குவீக் ஸ்குவீக் ) பாடிட்டுப் போய்டுச்சு :)

      ஆமாம், அவற்றின் வாழுமிடம் குறைந்துகொண்டே வருகிறது
      நன்றி ஐயா

      நீக்கு
  8. அணிலும் பாடுதே!.....
    அணிமையாய் வாவேன்! (பக்கமாய்)
    எளிமை வரிகள்
    இனிமை.
    இனிய வாழ்த்து கிரேஸ்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கவியை ரசிகின்றதோ ??...
    அருமை கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
  10. பட்டம்பூச்சிக் கவிதைகளே அதிகம் கண்ணில் படுகையில் அழகாய் தானிருக்கிறது அணில் கவிதை....

    பதிலளிநீக்கு
  11. எங்கள் வீட்டில் தினந்தோறும் அணிகளின் அழகு அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன . கவிதை நன்று

    பதிலளிநீக்கு
  12. குட்டி பிள்ளை போல் பாடவைத்திருக்கும் குட்டி அணிலுக்கு நன்றி!உங்களுக்குள் இருக்கும் குழந்தை எழுப்பியிருகிறது அணில் :)))
    அழகு தோழி!!

    பதிலளிநீக்கு
  13. அணிலை வைத்து
    அழகாகக் பின்னிய
    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  14. குட்டி அணில் ரொம்ப அழகு தாயை தேடியிருக்குமோ. அல்லது தங்களையே பாடச் சொல்லி கேட்டிருக்குமோ தோழி ! எதிர்ப்பாட்டு பாடியிருக்கலாமே. அழகு அழகு கற்பனையும் கவிதையும். வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பாட்டு பாடியிருந்தா வேறொரு மரம் தேடி ஓடியிருக்கும் தோழி, நான் பாடினால் அவ்வளவு 'இனிமையாய்' இருக்கும் ;-)
      உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி.

      நீக்கு
  15. ஸ்க்வீச் ஸ்க்வீச் என்று அழகாய் அணில் சத்தமிடுவதை நானும் அவதானித்ததுண்டு கிரேஸ். அணிலின் சத்தத்திற்காய் சந்தத்துடன் ஒரு அழகுப் பாடல் நீங்கள் அளித்திருப்பதை மிகமிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. சூழலின் இனிமை
    வரிகளில் வந்திருக்கிறது
    வாழ்த்துக்கள்
    என்னை சுற்றியும் பாடுகிற மாதிரி இருக்கு ...
    வாழ்த்துக்கள் சகோதரி
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னை சுற்றியும் பாடுகிற மாதிரி இருக்கு .//மகிழ்ச்சியாக இருக்கிறது..
      மிக்க நன்றி சகோதரரே

      நீக்கு
  17. அணில் பாட்டு.... அணிலைப் போலவே அருமை!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...