கேள்வியிலும் பதிலிலும்

'இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருப்பேன்னு' சொல்லித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்? அப்போ நான் மட்டுமா கேள்விகளுக்குப் பதில் சொல்றது? கேள்வியிலும் பதிலிலும் உடன் இருக்க வேண்டாமா? அதான் என் கணவர்கிட்ட கேட்டுட்டேன்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
அத்தன வயசு வரைக்கும் இருக்கனுமா? வேணாம்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நிறைய இருக்கே - பியானோ கத்துக்கணும், பிளேன் ஓட்டக் கத்துக்கணும், பிஸிக்ஸ் ல ஒரு ஆராய்ச்சி பண்ணனும், .. (போதும்னு நான் நிறுத்திட்டேன்)

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
இதோ இப்போதான், முந்தைய கேள்வியக் கேட்டு..

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
என் மனைவியப் பாத்துட்டு இருப்பேன்
(தாங்கமுடியலப்பா..தாங்கமுடியல. இது சும்மா, தமிழ்வாசி பிரகாஷ் சகோவோட முதல் பதில நான் சொல்லிட்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சதன் விளைவு :) எப்படியோ, சகோவிற்கு ஒரு நன்றி.)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
நீங்க ஒருத்தருக்கொருத்தர்...எங்கள தொந்திரவு பண்ணாம ஓடிப் போய்டுங்க
(அடப் பாவமே, கேட்டா 'உன்ன வெனிஸ் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாரு)

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
என் பிரச்சினைதான்..எவ்ளோ கத்துக்கணும்னு நினைக்கிறேன்..அத எப்டி பண்ணுறது? (சுய நலக்காரா)
 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் மனைவிகிட்ட (ஆஹா அப்படியா)

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
காதப் பொத்திக்குவேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
எந்த நண்பர், அவங்க மனைவி எப்படின்றதை பொறுத்து...
(சந்தோசமா இருக்கச் சொல்வேன் அப்டினுதான் முதல்ல சொன்னாங்க..நான் ஒரு முறை முறைச்சேன் பாருங்க, மாத்திட்டாங்க :) )

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
வேலை பார்ப்பேன் (work from home)
(நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன் ,,, போயிட்டு வரேன்)

58 கருத்துகள்:

  1. இவ்வாறாக வித்தியாசமாக யாரும்நினைத்திருக்க மாட்டார்கள். பதில்களும் அவ்வாறே இருந்தன. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  2. பதிவர்கள்த்தான் இதுபோல் பதில் சொல்லச்சொல்லி ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பாங்க. நீங்க உங்க "better-half"ஐயும் விடவில்லை போல. பாவம்! :(

    நல்லா பதில் சொல்லியிருக்கிறார். உங்களை மணந்தவர் புத்திசாலியாகத்தானே இருப்பார்? :) உங்களை ஐஸ் வைக்க வேண்டிய இடங்களில் சரியாக ஐஸ் கலந்து வைத்து பதிலளித்துள்ளார். நீங்க பிடிக்காதமாரி நடிச்சாலும் உங்களுக்கு என்ன பதில்கள் பிடிக்கும்னு தெரியாதா என்ன அவருக்கு? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சும்மா ஒரு change அப்டின்னு அவர மாட்டிவிட்டேன். மேலும் ஒரு ஆர்வம், என்ன பதில் சொல்வார் என்று. ஆமாமாம், என்னை மணந்தப்பவே தெரிஞ்சுடுச்சே ரொம்ப புத்திசாலின்னு :) ஆமாம் வச்ச ஐசுல, போய் ஆவி பிடுச்சுட்டு வந்தேன் :)
      உங்க கருத்திற்கு நன்றி வருண்.

      நீக்கு
  3. இது இனிமை. உங்களைக் கேட்டால் நீங்கள் அவரைக் கேட்கிறீர்களா. நல்லாவே இருந்தது. இவைகளே உண்மையான பதில்கள். தேன் க்ரேஸ்.

    பதிலளிநீக்கு
  4. இதுவும் நல்லாத்தான் இருக்கு...:)

    அருமை கிரேஸ்!

    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்!

    பதிலளிநீக்கு
  5. நல்லாத்தானே பதில் சொல்றாரு,,,, அப்படீனாக்கா இவரைப்பத்தி ஏன் அப்படி சொன்னீங்க ?

    பதிலளிநீக்கு
  6. ஹ..ஹா....ஹா...கிரேஸ்! அண்ணா ரொம்ப ஸ்மார்ட் யா:)
    சூப்பரா பதில் சொல்லியிருக்கிறார் :)
    த,ம 3:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி,, அதான் என்னக் கல்யாணம் பண்ணப்போவே தெரிஞ்சுடுச்சே ;-)
      நன்றி டியர்.

      நீக்கு
  7. // ஆஹா அப்படியா...//

    ஓஹோ...!

    வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பதில் பாதி எழுதியாகிவிட்டது கிறேஸ்..
      விரைவில் வலையேற்றுவேன்.
      தங்கள் பதிலும் நன்று.
      வேதா. இலங்காதிலகம்.

      நீக்கு
  8. ஆகாகா.. ரொம்ப அருமைம்மா. “நீயொரு பாதி நானொரு பாதி“ மாதிரி ரெண்டுபேருமா சேந்து வெளுத்துக் கட்டியிருக்கீங்க.. அவர் எதார்த்தமா சொல்லியிருக்காரு. அடுத்து வர்ரது உங்க மைண்ட் வாய்சா..? ரொம்ப ரசிச்சேன். அப்படியே மாதம் ஒருமுறை இப்படி ஏதாவது வந்து ஒரு ரவுண்டு விடச் சொலலாம்போல... நன்றிம்மா. (வலை உறவுகள்னா குடும்ப உறவுகள்ங்கறது சும்மா இல்லன்னு செயலில் கா்ட்டிய கிரேஸ், இஸ் கிரேட்...! And the credit goes to your better half.) வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்கையா..என் மைண்ட் வாய்ஸ்சே தான் :)
      ரசித்துக் கருத்திட்டதற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
      ஆமாம், credit goes to him, அவர் இல்லேனா இத்தனை உறவுகள் வலைத்தளத்தில் கிடைத்திருக்காது..என்னை வலைத்தளம் ஆரம்பிக்கத் தூண்டியவர் அவரே :)

      நீக்கு
  9. இப்படியும் பதிலளிப்பவர்கள் இருக்கிறார்கள்!

    1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
    அத்தன வயசு வரைக்கும் இருக்கனுமா? வேணாம்.

    பிழைச்சுக்கிடந்த பாத்துக்கலாம். (அவர் வயசு 42)

    2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
    நிறைய இருக்கே - பியானோ கத்துக்கணும், பிளேன் ஓட்டக் கத்துக்கணும், பிஸிக்ஸ் ல ஒரு ஆராய்ச்சி பண்ணனும், .. (போதும்னு நான் நிறுத்திட்டேன்)

    தமிழ் படிக்க.. (லொராட்டொ கான்வெண்ட் மாணவி)

    3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
    இதோ இப்போதான், முந்தைய கேள்வியக் கேட்டு..

    ஞாபகம் இல்லையே ( படி தாண்டா பத்தினி)

    4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
    என் மனைவியப் பாத்துட்டு இருப்பேன்
    (தாங்கமுடியலப்பா..தாங்கமுடியல. இது சும்மா, தமிழ்வாசி பிரகாஷ் சகோவோட முதல் பதில நான் சொல்லிட்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சதன் விளைவு :) எப்படியோ, சகோவிற்கு ஒரு நன்றி.)

    தூங்குவேன் (பாப்பா)

    5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
    நீங்க ஒருத்தருக்கொருத்தர்...எங்கள தொந்திரவு பண்ணாம ஓடிப் போய்டுங்க
    (அடப் பாவமே, கேட்டா 'உன்ன வெனிஸ் கூட்டிட்டுப் போறேன்னு சொல்றாரு)

    சினிமாவுக்கு போய்ட்டு வா. இந்தா காசு ( நாலணா கொடுத்த கொள்ளுப்பாட்டி)

    6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
    என் பிரச்சினைதான்..எவ்ளோ கத்துக்கணும்னு நினைக்கிறேன்..அத எப்டி பண்ணுறது? (சுய நலக்காரா)

    மன அழுத்தத்தை ( அமெச்சூர் மனோ நல வைத்தியர்)
     

    7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
    என் மனைவிகிட்ட (ஆஹா அப்படியா)
    ஒரு கேள்விக்கு அதே பதிலை சொல்லுவேன்.ஆனால் அவள் இல்லை. அதனால், ப்ண்ணு கிட்ட (நான்)
    8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
    காதப் பொத்திக்குவேன்

    அது நடக்குதுங்க. தப்பிக்க மோடிக்கு ஆறாவது கேள்வி பற்றி 200 பக்க கடிதம் எழுதுவேன். (பேர் எதுக்குங்க? மறுபடியும் எழுதுவாக.)

    9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
    எந்த நண்பர், அவங்க மனைவி எப்படின்றதை பொறுத்து...
    (சந்தோசமா இருக்கச் சொல்வேன் அப்டினுதான் முதல்ல சொன்னாங்க..நான் ஒரு முறை முறைச்சேன் பாருங்க, மாத்திட்டாங்க :) )

    இது நடந்தது. அவர் கையை பிடித்து சில நேரம். மெளனமாக திரும்புதல். (என் நண்பரின் செய்கை)

    10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
    வேலை பார்ப்பேன் (work from home)
    (நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன் ,,, போயிட்டு வரேன்)

    ஆட்டை தூக்கி மாட்லெ போடுவேன். மாட்டை தூக்கி ஆட்டில் போடுவேன். மறுபடியும், கிறுபடியும். (ஹி ஹி

    You might also like: அதுவும் இதுவும்:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் படிக்க என்று ஒரு மாணவி சொல்லியிருப்பது மகிழ்ச்சி, இன்றைய நிலை அப்படியாகிவிட்டது. கொள்ளுப்பாட்டி பதில் யதார்த்தம். ஆணித்து பதில்களும் நன்று. பத்தாவது நன்றாக சிரிக்க வைத்தது...
      முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  10. என் மனைவியப் பாத்துட்டு இருப்பேன்
    (தாங்கமுடியலப்பா..தாங்கமுடியல. இது சும்மா, தமிழ்வாசி பிரகாஷ் சகோவோட முதல் பதில நான் சொல்லிட்டு கேள்வி கேக்க ஆரம்பிச்சதன் விளைவு :) எப்படியோ, சகோவிற்கு ஒரு நன்றி.)///

    எப்படியோ என்னை வச்சு அவரு உங்களை ஒருநாள் முழுக்க கவனிக்க வச்சுட்டிங்க...
    ஆனாலும் ஒரு நாளுங்கறது அவருக்கு ஒரு பணிஸ்மென்ட் போலத்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஏதோ தெரியாம சொல்லிட்டாரு...பனிஷ்மென்ட் நடைமுறைப்படுத்தாம விட்டுரலாம்

      நன்றி சகோ.

      நீக்கு
  11. இந்த கேள்விகளை நீங்க கேட்டதுனால அவரால் இப்படித்தான் பதில் சொல்ல முடியும். உங்காத்துக்காரர் ஃபோன் நம்பரை எனக்கு கொடுங்க. நான் கேள்வி கேக்குறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்ல ஐடியா தான்..பாருங்க, இதுக்குத்தான் இப்படி ஒரு அன்பான அக்கா வேணும். என் நம்பர்ல ஒரு 4 இருக்குல? அத மட்டும் 3ஆ மாத்திக்கோங்க ராஜி :)
      மறக்காம என்ன பதில் சொன்னாருன்னு தங்கைக்குச் சொல்லிடுங்க ;-)

      நீக்கு
  12. கணவரிடம் பதில்களைக் கேட்டுப் பதிவிட்டதோடு உங்களுடைய மைண்ட்வாய்ஸையும் சேர்த்துப் பதிவிட்டு ரசிக்கவைத்துவிட்டீர்கள். உங்கள் கணவரின் நேர்மையான பதில்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவிடுங்கள் கிரேஸ்.

    பதிலளிநீக்கு
  13. என்ன ஒரு பதில்கள் ... கலக்கிட்டாரு.. போங்க :) .. 4, 7 கேள்விக்கான பதில் கேட்டு ஊறுகிடிங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :). ஹாஹா அவர் ஹரிச்சந்திரன் னுங்க .. பொய் சொல்ல மாட்டார் :)
      நம்ம பதிலுக்கு இங்க வாங்க :)
      http://covaiveeran.blogspot.com/2014/06/blog-post_24.html

      நீக்கு
    2. அரிச்சந்திரனா? ஐயையோ!!
      வந்துட்டாப் போச்சு..இதோ :)

      நீக்கு
  14. அடடா.. ஈரிழை போல அசத்தலான பதில்கள்.. மிகவும் ரசித்தேன்..

    Blogger Dash Board - ல் ஒரு பதிவு மட்டுமே - சற்று முன் வெளியானதாகத் தெரிகின்றது. எனவே தான் கால தாமதம் . பொறுத்துக் கொள்க!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிங்க ஐயா.

      உங்களுக்குமா? எனக்குத்தான் அப்படி ஆகிவிட்டது என்று நினைத்தேன்..
      தாமதம் பரவாயில்லை ஐயா..

      நீக்கு
  15. எனக்கென்னமோ பதில்களை எல்லாம் படிச்சதும் அவர் உங்களுக்கு ரொம்பப் பயந்து பணிஞ்சு நடக்கறவரோன்னு தோணுது. (நீ மட்டும் விதிவிலக்கான்னு தயவுசெஞ்சு கேட்ராதீங்க. ஹி... ஹி... ஹி....) பிராக்கெட்டில் வந்திருக்கும் உங்களின் மைண்ட் வாய்ஸை மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா இது பெரிய ஜோக்குங்க ..ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி சகோதரரே.

      நீக்கு
  16. வணக்கம்
    சகோதரி

    யாரும் இப்படி செய்ததில்லை ஒரு வித்தியாசமாக உள்ளது....பதில்கள் இரசிக்கும் படி நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. என்னப்பா இது நான் இன்னும் முதல் ரவுண்டு கேள்விகளுக்கே எத்தனை புத்தகம் எடுத்து ரெபரென்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன் நீங்க அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டீங்களா... அருமை வாழ்த்துக்கள்... எப்படியோ இந்த சாக்கில் அவரோட மனசைப் பத்தியும் நல்லா போட்டு வாங்கிட்டீங்களோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நன்றி எழில்
      ஆமாம் அதான் முயற்சி பண்ணேன், ஆனா அவரு விவரமா தப்பிச்சுட்டாரு :)

      நீக்கு
  19. வணக்கம் !

    தாங்கள் கொளுத்திப் போட்ட வெடி
    எங்கள் தேசத்தில் வெடிக்கிறது
    நாங்களும் பதில் சொல்ல வச்சிட்டாங்களே அவ்வவ் !

    தொட்டுத் துலங்க தொடுத்தவினா எம்மோடு
    பட்டுத் தெறிக்குதிங்கே பாரெல்லாம் - விட்டு
    விலகி வெளியோட மாட்டாமல் நானும்
    அலகிட்டு நிற்கின்றேன் ஆங்கு !

    இருவரிப் பாவில் இயன்றவரை ஈந்தேன்
    விருப்போடு என்நா விழைந்து !

    அத்தனையும் அருமை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.
      நான் கொளுத்திப் போடலீங்க..அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத் தமிழன் ஆரம்பித்த வேலை...நல்ல சுயமதிப்பீட்டாக அமைந்துவிட்டது.
      விட்டு விலகி ஓட முடியாதுதான்..
      அழகாச் சொல்லியிருக்கீங்க..இயன்றவரை ஈந்தது இனிமையாய் இருக்கிறது.
      கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
    2. வணக்கம் சகோ !

      எல்லோர் வலைக்கும் முடிந்தவரை செல்கிறேன்
      செல்லும் இடங்களில் குறள் வெண்பாக்களில் தான் கருத்திடுகிறேன் அதனை விருப்போடு வாசித்து வாழ்த்து சொல்கின்றீர்கள் என்னையும் இவ்வாறு எழுத வழிகாட்டிய கவிஞர் ,கி,பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டு இருக்கின்றேன் ......என் வரிகளுக்கு வாசம் இட்டவர் அந்த வள்ளலே ! எல்லாப் புகழும் அவருக்கே சொந்தம்..!

      நன்றி நன்றி சகோ !

      நீக்கு
    3. வணக்கம் சகோ.
      அருமையான விசயம், வெண்பா எனக்கு கைவரவில்லை, முயற்சிக்கவே பயமாக இருக்கிறது. உங்களுக்கு வாழ்த்துகள்! திரு.பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  20. உங்கள் பதிலைக் கேட்டால்.. அதையே வீட்டுக்காரரைச் சோதிக்கும் கேள்விகொத்தாக மாற்றிய சிந்தனை அருமை கிரேஸ். ;)

    பதிலளிநீக்கு
  21. ஆகா அர்த்த நாரீஸ்வரருக்கு அடுத்ததாக நீங்க தான்மா பொருத்தமான ஜோடிதான் என்ன அழகா பாதிலளித்துள்ளார் .ஆதர்கேற்ப மைன்ட் வாய்ஸ் ம் நன்று தோழி. வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  22. மனைவி இறந்தவரிடம் சந்தோசமா இருக்கச் சொல்வேன்னு சொல்றது ஆணாத்திக்கசொல் ஆயிடுச்சு இல்லையா மேடம் ?
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை ஐயா. துணை இறந்தால் வாழ்க்கை இருண்டுவிட்டது என்று இருப்பது தப்பு..மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் ஐயா.
      என்ன? நான் இறந்துட்டா சந்தோசமா இருப்பியா நீ? அப்டி னு சும்மா வம்பிழுப்பது தான் அப்படிக் கேட்பது. ஆனால் மனம் துணை சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்பர்.

      கருத்திற்கு நன்றி ஐயா

      நீக்கு
    2. இந்த விசயத்தில் உங்கள் கருத்தே என் கருத்தும் !

      நீக்கு
  23. சிறப்பாக பதில் சொல்லி இருக்கிறார். அப்படி சொல்ல வைத்து விட்டீர்கள் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. மாறுபட்ட அணுகுமுறையில்
    மாறுபட்ட பதில்களால்
    சிந்திக்க வைக்கிறியளே!

    பதிலளிநீக்கு
  25. ஆஹா அவரையும் மாட்டி விட்டுட்டீங்களா இந்த வலையில! :)

    நல்ல பதில்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா, என்னதான் நினைச்சுட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்கு :)

      நன்றி சகோதரரே

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...