கவலைகள் மிகும் போதில்
உன் தோளில் சாய்ந்திருக்கவே வேண்டும்
கேள்விகள் துளைத்திடும் வேளையில்
உன் இதயத்துடிப்பை மட்டுமே கேட்க வேண்டும்
பாரங்கள் அழுத்தும் நிமிடங்களில்
உன்னைப் பார்த்தே மற்றவை மறந்திட வேண்டும்
திசைகள் தெரியாத தருணங்களில்
துணையாக நீயிருக்க வேண்டும்
அலைகள் அலைக்கழிக்கும் பொழுதில்
அருகினில் நீயிருக்க வேண்டும்
இன்பங்கள் இனிக்கும் பொழுதிலும்
உன்னுடனே சிரித்திட வேண்டும்
இவையனைத்திற்கும் நீ என்னுடன் வேண்டும்
மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன்
நீ மட்டும் என்னுடனே இருப்பாயா?
இந்தக் கவிதைக்கு ஒருவர் மட்டும்தான் ஆம்/இல்லை/தெரியலை னு பதில் சொல்ல இயலும்!
பதிலளிநீக்குநான் வேணா இந்தப் பின்னூட்டத்தின் மூலம் அவரை நல்ல பதிலாகச் சொல்லச் சொல்லிக் வேண்டி கேட்டுக்கிறேன்! ஏதோ என்னால் இயன்றது இதுதான் கிரேஸ்! :-)
ஹாஹா உண்மைதான்... நன்றி வருண்!
நீக்குஆஹா.. அருமை கிரேஸ். உங்களவர் என்றும் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் :)
பதிலளிநீக்குகவிதைக்கு பொருந்தும் படங்களை போட்டு கலக்குரீங்க :)
:) ஆமாம்!
நீக்குநன்றி ஸ்ரீனி
அருமையான "வேண்டும்கள் "
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்
தொடர (கவிதையையும் )வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா!
நீக்குகூட இருந்தால் போதும்...! அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.தனபாலன்
நீக்குஅழகான கவிதை!!! மிகவும் ரசிக்கும் படி உள்ளது...
பதிலளிநீக்குஅனைத்திற்கும் வாழ்த்துகள்...
மிகவும் நன்றி வெற்றிவேல். வருகைக்கும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிகலந்த நன்றி
நீக்குவேண்டும் வேண்டும் உங்கள் கவிகள்
பதிலளிநீக்குதூண்டும் எம்மை படிக்கும் ஆவல்
தோண்டும் தீண்டும் தாகம் தீர்க்க
நோண்டும் நுடங்கும் நெட்இலை என்றே!
அழகிய கவி தோழி! வாழ்த்துக்கள்!
எனக்குத்தான் வர நெட் கோளாறிப் போனது..:)
உங்கள் கவி அருமை தோழி, நெட் இல்லை என்பதை அழகாகச் சொன்னீர்கள். பரவாயில்லை தோழி, நெட் இல்லையென்றாலும் வந்தவுடன் என் தளம் வந்து கருத்து இட்டதற்கு மகிழ்ந்தேன்..மிக்க நன்றி தோழி!
நீக்குஆகமொத்தம் எப்போதும் நீ வேண்டும்.சரிதானே ? வாழ்க நலமுடன்
பதிலளிநீக்குஆமாம் ஐயா, சரிதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
நீக்குகாதல் உணர்வு ததும்ப வார்த்தைகளில்
பதிலளிநீக்குவலுப்பெற்று நிக்கும் அழகிய காதல் கவிதை இது அருமை !
வாழ்த்துக்கள் சகோ .வலைச்சரத்திலும் இன்று உங்களை
அறிமுகம் செய்யவுள்ளேன் .முயற்சிகள் தொடரட்டும்
வெற்றியும் உமதாகும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வருகைக்கு மிகவும் நன்றி அம்பாள் அடியாள் அவர்களே! உங்கள் பாராட்டும் கருத்துரையுமே மகிழ்ச்சி தருவதாக உள்ளது..இரட்டிப்பு மகிழ்ச்சியாக வலைச்சர அறிமுகம்..உங்களுக்கு நன்றி பல!
பதிலளிநீக்கு