தாய்நாடு சேர்ந்திடுவேன்

புலம் பெயரும் புள்ளினமும்
வாழ்விடம் மாறும் விலங்கினமும்
பொருட்களை வகைப்படுத்துமா
மூட்டை முடிச்சுக் கட்டுமா

நட்பு பிரிய கலங்குமா
ஒக்கல் இணைய  உவக்குமா
எப்படியோ என்று தவிக்குமா
நன்றேயாகும் என்று நம்புமா

அவற்றைப் பற்றி தெரியவில்லை
சிந்திக்க இப்போ நேரமில்லை
தாய்நாடு திரும்ப விழைகிறேன்
அயல்நாட்டை விட்டுக் கிளம்புகிறேன்

நண்பரிடம் பிரியாவிடை பெற்றே
கேளிருடன் பிரியமுடன் இணைந்திடுவேன்
விரைவில் அங்கே சேர்ந்திடுவேன்
தொடர்ந்தே பதிவு இட்டிடுவேன்


ஒக்கல் - உறவினர்

தாய்நாடு திரும்ப ஆயத்தமாகிறேன்..அப்பா! எவ்வளவு வேலை!!!
வலைத்தளத்திலிருந்து சிறிது இடைவெளி ஏற்படலாம் என்று வலைத்தள நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அருமையான பதிவுகளைப் படிக்க தாமதமாகுமே என்று ஒரு வருத்தமும்...

நட்புடன்
கிரேஸ் 

14 கருத்துகள்:

  1. தாய் நாடு சென்று பத்திரமாகத் திரும்பி வாருங்கள். சுகமோ சோகமோ, வந்தபின் மறவாமல் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.செல்லப்பா அவர்களே! தாய்நாட்டிற்கேத் திரும்புகிறேன். அங்கிருந்து எழுதுவேன். நன்றி!

      நீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி தோழி. தங்களது பயணம் இனிமையாய் அமையட்டும்.சுற்றம் நட்புகளுடன் தங்களது பொழுதுகள் இனிமையானதாய் அமையட்டும்.
    நல்வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் தோழி.. உறவினர்களைச் சந்தித்ததும் எங்களை மறந்து விடாதே தொடர்ந்து எழுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தியானா..உன்னை எப்பொழுதும் மறப்பதில்லை.
      தொடர்ந்து எழுதுவேன் தோழி, உன் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  4. பழகிய இடத்தை, நண்பர்களைப் பிரிவது ஒருபக்கம் துயர் தந்தாலும் தாய்நாட்டின் மடியில் தஞ்சமடையவிருக்கும் மகிழ்வு அத்துயரைத் தணித்திடும் என்று நம்புகிறேன். சுகமான பயணத்துக்கும் இனியதொரு எதிர்கால வாழ்வுக்கும் நல்வாழ்த்துக்கள் தோழி. கவிதை மனத்தின் பாரத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதமஞ்சரி, இங்குள்ள நண்பர்களைப் பிரிவதில் வருத்தமும் அங்குள்ள உறவினர்களையும் நண்பர்களையும் சேர்வது நினைத்து மகிழ்ச்சியும் ஒருசேர எழுகிறது. உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி!

      நீக்கு
  5. காலம் பின் நோக்கி செல்லாதோ?
    தங்கள் குடும்பத்துடன் கழித்த அந்த இனிய காலங்கள் திரும்ப வாராதோ?
    சுட்டிகளுடன் விளையாடிய நாட்கள் திரும்ப வாராதோ?
    பயணித்த சுற்றுலாகள் திரும்ப வாராதோ?
    தங்கள் இருவருடன் கதை பேசிய நாட்களும் திரும்ப வாராதோ?
    இக்கேள்விகளுடன்,
    தங்கள் குடும்பமில்லா வெற்றிடத்தை எப்படி நிரப்பப் போகிறேன்?
    என்ற கேள்வியும் சேர்ந்து,
    கனத்த இதயத்தை மேலும் கனமாக்க,
    பசுமையான நினைவுகளைத் தாங்கி,
    மனம் நிறைந்த வாழ்த்துகளோடு,
    பிரியா விடை தருகிறேன் சகோதரி.
    தாய் மண்ணில் தங்களை வசந்தமும், மகிழ்ச்சியும்
    ஒரு சேர வரவேற்று, என்றும் நிலைத்து இருக்கட்டும் :)

    வாழ்த்துக்கள் கிரேஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொன்னீர்கள் ஸ்ரீனி. உங்களின் அன்பான இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீனி.

      நீக்கு
  6. பயணமும் உறவுகளும் இனிமையாக சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...