கட்டுக்குள் வருமாக் கரிமக் கால்தடம்?


மனிதனின், விலங்குகளின், பறவைகளின், செடிகொடிகளின் - பூமியின் வாழ்வாதாரம் சுற்றுச்சூழல். நாம் பார்க்கும், உணரும், சுவாசிக்கும், கேட்கும், நுகரும் அனைத்துமே நம் சுற்றுச்சூழல் தான். உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என்று அனைத்தும் சுற்றுச்சூழலிருந்தே அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலுக்கு நாம் என்ன செய்கிறோம், நம் செயல்களால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு நமக்குக் கண்டிப்பாக வேண்டும்.
ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அனைத்துமே இயற்கையாக இருந்தன. பின்னர் மனிதன் பயிரிடத் துவங்கி, தொழிற்புரட்சி செய்துப் படிப்படியாக முன்னேறி இன்று தொழில்நுட்பம் பெருகியிருக்கும் இந்த நிலைக்கு வந்துவிட்டோம். இன்று நகரங்கள் பெருகி உலகின் மக்கள் தொகையில் பாதி நகரங்களில் வசிக்கத் துவங்கிவிட்டனர். இதற்காக ஆயிரமாயிரம் மரங்கள் வெட்டப்பட்டன, வெட்டப்படுகின்றன. சாலைகளும், பாலங்களும், தொழிற்சாலைகளும் என்று இயற்கை வளங்களை அழித்துத்தான் நம் வசதியைப் பெருக்கியிருக்கிறோம். தொழிற்சாலை, மின்சாதனங்கள் நிறைந்த வாழ்வு முறையால் கரிம(கார்பன்) வெளியேற்றத்தை (carbon emission) அதிகரித்து வளர்ச்சி என்ற பெயரில் பூமியின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துவிட்டோம்.
இன்று பெருகிக்கொண்டேயிருக்கும் வாகனங்கள் காற்றை மட்டுமல்ல நிலத்தடி நீரையும் பாதிக்கின்றன என்று அறிவோமா? ஆம்! கோடிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த பூமியில் நாம் ஏற்படுத்தியிருக்கும் சாலைகள், கல்லும் தாரும் என்று சேர்த்து நீர் உட்செல்லக் கூடிய நுண்துளைகள் இல்லாதவை. மேலும் சாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கான கனஅடிகள் மண் அப்புறப்படுத்தப் படுகின்றது.
இதனால் நிலத்தடியில் உள்ள ஊடுசெல்லும் தன்மையுடையப் பாறைகள் மற்றும் மண் சேர்ந்த அக்யுபர் (aquifer) எனப்படும் மழைநீரை உறிஞ்சிச் சேமிக்கக் கூடிய அமைப்பிற்கு மழைநீர் சென்று சேர்வதில்லை. மாறாக வாழ்விடங்களை மூழ்கச் செய்யும் வெள்ளமாய் வீணாகிறது. சிறிது நீர் ஆறு, குளம் என்றும் சேர்கின்றது, ஆனால் இவை சாலைகளில் உள்ள ரப்பர் கழிவுகளையும் கழுவிச் சேர்த்துக் கொண்டேச் செல்கின்றன. இதனால் நிலத்தடி நீர் சுண்டுவதுடன் நீர்நிலைகளும் மாசடைகின்றன. மேலும் பெருகிவரும் வாகனங்களால் கரியமிலவளி (கார்பன் டை ஆக்சைடு) ஆபத்தான அளவிற்கு அதிகரிக்கிறது. கரிம வெளியேற்றத்தால் ஏற்படும் பருவ மாற்றங்கள் எண்ணிப் பார்க்கவியலாத அளவிற்குப் பேரழிவை ஏற்படுத்தும். உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசு ஆர்க்டிக் பனிக்கட்டிகளில் கூட கருமையாகப் படருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவை அதிகப்படியாக சூரிய ஒளியை ஈர்க்கின்றனவாம். இதனால் பனி உருகுவதுடன் உலக வெம்மைக் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கிறது.
கலிபோர்னியப் பல்கலைக்கழக ஆய்வாளர் எரிக் ரிக்னாட் அவர்கள் தலைமையில் செயல்பட்ட ஆய்வுக்குழு கிரீன்லாந்து பனிக்கட்டிகள் முன்பு எதிர்பார்த்திருந்ததைவிடவும் வேகமாக உருகுவதாகக் கண்டுபிடித்துள்ளனர். மேற்பரப்பில் உருகும் நீரானது உள்ளூடுருவிச் சென்று கீழிருந்து ஒரு பெரியப் பனிப்பாறையை அறுத்துவிடுவதாக ஒரு தொலைக்காட்சி ஆவணப்படத்தில் கூறுகிறார் எரிக். அத்தகைய பனிப்பாறைகள் கடலில் மிதந்துசெல்வதாகவும் அவை உருகி ஏற்படுத்தும் கடல்மட்ட உயர்வால் நிலத்தை ஊடுருவும் கடல் நீர் மேலும் பனிப்பாறைகள் உருகக் காரணமாக அமைவதாகவும் கூறுகிறார்.
ஓர் ஆண்டிற்குச் சில அடிகள் உருகும் என்று எதிர்பார்க்கப்பட்ட பனிப்பாறைகள் ஒரு நாளிற்குச் சில அடிகள் என்ற அளவில் உருகத் தொடங்கிவிட்டனவாம். கிரீன்லாந்தின் மொத்தப்பனிப்பாறைகளும் உருகினால் கடல் மட்டம் ஏழு அடிகள் உயருமாம். ஒரு அடி உயர்ந்தாலே எகிப்தின் ஆறுகோடி மக்களும் பங்களாதேசின் பதிமூன்று கோடி மக்களும் சீனாவின் எழுபத்திரண்டு கோடி மக்களும் அத்தோடு பல ஆயிரக்கணக்கான விளைநிலங்களும் அழிந்துவிடும். இதில் ஏழடி உயர்ந்தால்? எண்ணிப் பார்க்கவியலாத பேரழிவு அது!
மேற்கு அண்டார்டிக் பனிப்பாறைகளும் அலாஸ்காவின் பனிப்பாறைகளும் கூட வேகமாக உருகுகின்றன. இவையனைத்தும் உருகினால் கடல் மட்டம் இருபதடி உயரும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகுவதால் க்ரில் எனப்படும் ஓட்டு மீன்களின் எண்ணிக்கை 1970இல் இருந்த அளவிலிருந்து 80% குறைந்துவிட்டதாம். தெற்கின் உணவுச் சங்கிலியில் க்ரில் முக்கியமானது.
இத்தோடு திபெத்தியப் பனிப்பாறைகளும் பத்தாண்டிற்கு 50% என்ற அளவில் உருகி வருகின்றன. ஆசியாவின் பல ஆறுகளுக்கு இப்பனிப் பாறைகள்  நீர்பாய்ச்சுகின்றன. சிந்துநதி, கங்கை, பிரம்மபுத்ரா, சீனாவின் மஞ்சள் ஆறு, மேகாங் ஆறு ஆகியவை இதில் அடங்கும். இப்பனிப்பாறைகள் உருகினால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பேரழிவு!
இதுவே நம்மை அச்சுறுத்தும் நிலையில் ஆபத்து இத்தோடு முடியவில்லை. கடல் மட்ட உயர்வால் கடல் பரப்பு வெம்மையும் அதிகரிக்கும். அதிக வெம்மை கடல் பாசிகளுக்கு ஒவ்வாது. பாசிதானே என்று சாதாரணமாக யோசித்தால், கேளுங்கள்..உலகின் 70-80% பிராண வாயு கடல் பாசிகளால் உண்டாக்கப் படுகிறது. அதிக வெம்மையால் பாதிக்கப்படும் கடல்பாசி, கரிமத்தை (carbon) உள்வாங்க முடியாத நிலைக்குச் சென்று உலகின் கரிம அளவு 500 பிபிஎம் (parts per million) அளவிற்கு உயர்ந்துவிடும்.
இப்போதிருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால் இன்னும் நாற்பது வருடங்களில் இந்த அளவை எட்டிவிடுவோம். 350 பிபிஎம் அளவே அதிகப் பட்சக் கரிம அளவாக இருக்கலாம். மனிதநாகரிகத் துவக்கக் காலத்தில் இது 275பிபிஎம் ஆக இருந்திருக்கிறது. இப்போதைய அளவு 400பிபிஎம்.
சுற்றுப்புறச்சூழல் அழிவினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பல பக்கங்கள் எழுதலாம். இதற்கு மேலும் இந்நிலை தொடர்ந்தால் மனிதகுலத்திற்கே அழிவு என்ற நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்று ஆய்ந்துணர வேண்டும். தனிமனித அளவில், சமூக அளவில், நாடளவில், உலகளவில் என்று கரிமக் கால் தடத்தைக் (carbon footprint) குறைக்கச் செயல்படவேண்டும்.
முக்கியமாகப் படிம எரிபொருள் பயன்பாட்டிலிருந்துப் புதுபிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டிற்கு மாறவேண்டும். உங்கள் வசிப்பிடத்தில்  பச்சை ஆற்றல் இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்க, ஐரோப்பா, ஜெர்மனி என்று பல இடங்களில் உள்ளது. அதை அறிந்து மாற வேண்டியது உங்கள் கடமை. எங்கெங்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியுமோ அங்கதைச் செய்யுங்கள். ஒரே இடத்திற்குச் செல்வோர் சேர்ந்து ஒரு வாகனத்தில் பயணிக்கலாம். ஹைப்ரிட் வாகனங்கள் அல்லது மின்சார மகிழுந்துகள் கிடைக்கும் இடத்தில் அதையே வாங்க முயற்சிக்கலாம். உள்ளூரில் விளையும் காய்கறிகள், பழங்களை வாங்குங்கள். நெகிழிப் பைகள், நெகிழிக் கோப்பைகள், தட்டுகள் என்று பயன்படுத்துவதைவிட்டு கழுவிப் பயன்படுத்தக் கூடியவற்றைப் பயன்படுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் வாழ்வுமுறையை எளிதாக்கலாம். ஆனால் அவை சூழலுக்கும் உடல்நலத்திற்கும் கேடு. அவற்றைச் சமைப்பதற்குத் தேவையான எரிபொருளும் அதிகம். தண்ணீரைத் தேவையில்லாமல் சொட்ட விடாதிர்கள். ஒவ்வொரு துளியையும் யோசித்துச் செலவழியுங்கள். பாத்திரம் துலக்கும் சாதனம் பயன்படுத்துவோர் அதில் பாத்திரங்களை அலசாமல் தேய்த்துமட்டும் அடுக்குங்கள். முழு அளவுக்குத் துணிகள் சேர்ந்தபின்னரே வாஷிங்மெசினை ஓட்டுங்கள். குளிர்சாதனப்பெட்டியில் 36 இலிருந்து 38 டிகிரி வரை வெப்பம் போதுமானது. பிரீசரில் 0 டிகிரி. இன்னும் குறைத்து வைக்கவேண்டாம். சூரியஒளியைக் கொண்டு எரிபொருள் உற்பத்திசெய்துப் பயன்படுத்தலாம். குப்பையைக் குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகியவை கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டும்.
மரங்கள் வளர்க்க வேண்டும். சாலையோரங்களிலும் கட்டிடங்களிலும் மழைநீர் நிலத்திற்குள் செல்வதற்கான வடிகால் முறையைச் சரியாகச் செய்யவேண்டும். அனைத்திற்கும் மேலாக கைவிட்டுப்போனவைக்குத் தயாராக வேண்டும். கடல்மட்ட உயர்வைச் சமாளிப்பது, அதிக வெம்மையைக் கையாள்வது, மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்வது, அதிகரிக்கப் போகும் இயற்கைச் சீற்றங்கள், இடப்பெயர்ச்சி, அதனால் ஏற்படும் பாதிப்புகள், கொள்ளைநோய்கள், நாட்டின் பாதுகாப்பு என்பது பற்றியெல்லாம் சிந்தித்துச் செயல்படவேண்டியக் காலம் வந்துவிட்டது. கடந்துசெல்லும் ஒவ்வொரு ஆண்டும் நம் கால அவகாசத்தைக் குறைக்கின்றது என்பதே உண்மை! சூழல் காப்போம்! உயிர் காப்போம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-2 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காகவே எழுதப்பட்டது”. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.
                                                                             -வி.கிரேஸ் பிரதிபா

போட்டிக்கு அல்லாது தகவலுக்காக இங்கே சில இணைப்புகளைப் பகிர்கிறேன்.



59 கருத்துகள்:

  1. பரிசு பெற வாழ்த்துக்கள் பரிசு கிடைச்சால் பங்கு உண்டா? ஒரே ஊர்காரங்க ஒரே நாட்டில் வசிக்கிறோம் பாவப்பட்ட இந்த ஏழையை பரிசு வாங்கியது மறந்துடாதீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. //ஒரே ஊர்க்காரங்க ஒரே நாட்டில் வசிக்கிறோம்// இது சரி.. பாவப்பட்ட ஏழை ...??!! :-)
      பரிசு கிடைச்சா மறக்காம உங்ககிட்ட சொல்றேன் சகோ :-)

      நீக்கு
    2. அமெரிக்காவில் வசிக்கும் தமிழன் ஏழையாக இருக்க வாய்ப்பு இல்லையா என்ன?

      நீக்கு
    3. அதெப்படி மறுப்பேன், நானும் அதே கேட்டகிரி :-)

      நீக்கு
    4. அட்லாண்டா வாங்க சகோ, பரிசு கிடைச்சா ட்ரீட் உண்டு

      நீக்கு
    5. விற்பனை துறையில் கமிசனா வாங்குறிங்க.. இதுலேயுமா பங்கு. அம்மா.. கிரேஸ் அம்மா.. இந்த கலிபோர்னியா கணக்கு பிள்ளைய மறந்துடாந்திங்க...

      நீக்கு
    6. பொருள் விற்றால்தானே காசு இப்போதெல்லாம் பல சமயங்களில் சிங்கள் பைசா சம்பாதிக்காமல் வரும் நாட்கள் அதிகமாகி கொண்டே போகின்றன. அதனால்தான் சகோவிடம் ஒரே ஊர்காரர் என்பதில் பங்கு கேட்கிறேன், நீங்கள் கணக்குபுள்ளையாக இருப்பதால் சரி சமமாக பிரித்து கொடுங்கள் ஒகேவா

      நீக்கு
    7. ஆஹா! கணக்கரும் விற்பனையாளரும் கிடைத்துவிட்டார்கள். யாராவது உற்பத்தியாளரும் பினான்சியரும் இருக்கிங்களா? நல்லதொரு தொழில் துவங்கலாம், CEO நானிருக்கேன் ;-)

      நீக்கு
    8. **CEO நானிருக்கேன் ;-)** ஹை!! இந்த டீல் சூப்பர்!! டியர்!!
      தலைப்பை மட்டும் படித்தேன்! அட்டகாசமான தலைப்பு!! நானும் எழுதலாம் என்றிருப்பதால், கட்டுரையை படிக்கவில்லை:) போட்டியில் வெற்றிபெற விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் கிரேஸ்!!

      நீக்கு
    9. ஹாஹா நன்றி டியர்.

      அசத்தல்..உங்கள் பார்வைக்குக் காத்திருக்கிறேன். வெற்றிபெற வாழ்த்துகள்!

      நீக்கு
    10. ஹஹாஹ்ஹ் என்னப்பா இங்க நடக்குது ஒரு மூணு நாள் வலைப்பக்கம் எட்டிப்பார்க்க முடியாத இந்த சைக்கிள் காப்ல, அமெரிக்காவின் கிழக்கும் மேற்கும் செம டீல் போட்டுருக்காங்க.......

      நீக்கு
  2. தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருக்கின்றன..

    ஆனாலும் மனித சமுதாயம் திருந்துமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. சின்ன சின்ன விடயமும் யோசித்துச் செய்ய வேண்டும்..
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  3. பரிசு பெற வாழ்த்துக்கள் அக்கா. கிடைச்சா இங்க கொஞ்சம் அனுப்பிடுங்க மறந்திடாதீங்க சொல்லிட்டேன்....))

    பதிலளிநீக்கு
  4. மேலும் மேலும் பல கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, உங்க அளவுக்கு உழைக்க முடியுமா? உங்க ஆற்றலைக் கொஞ்சம் இரவல் தாருங்கள் :-) மறக்காம அண்ணிகிட்ட சொல்லி சுத்திப்போட்டுக்கங்க :-)
      நன்றி அண்ணா..

      நீக்கு
  5. செறிவு நிறைந்த பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சூழலைப்பற்றிச் சொன்ன சூப்பர் பகிர்வு!
    பரிசு பெற வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி..
      உங்க கட்டுரைகளும் கவிதைகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  7. ஆழமான விவரங்கள்..கொஞ்சம் பயமும் வருது...என்ன ஆகப்போகுதோன்னு....பக்கத்தலைப்புகள் கொடுங்களேன்மா...வாழ்த்துகள் வெற்றி பெற...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, ஆவணப்படம் பார்த்துவிட்டுப் பயந்துதான் போனேன். நாம் செய்யவேண்டியதைச் செய்வோம்...
      நான்கு பக்கங்களுக்குள் கட்டுரையை முடிப்பது கடினமாகிவிட்டது :-)
      நன்றி கீதா

      நீக்கு
  8. அருமையான எழுத்து கிரேஸ். நிச்சயம் வெல்வாய் நீ. நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு விடயங்கள் சகோ வெற்றி நிச்சயம் பரிசு பெற வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகளுடன், போட்டிக்கான குடுவையில் போட்டுக்கொண்டோம். நன்றி

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    பரிசு நிச்சயம்
    அருமை
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  12. சுற்றுச் சூழல் பற்றிய பதிவு.....கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்கள், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்று அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் தோழி.

    பகிர்வுக்கு நன்றிகள். போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    கரிமக் கால்தடம் - இச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன என்பதை அறியத் தாருங்கள் தோழி....நேரிடையாக மொழிபெயர்த்தால் organic footprint என்று வருகிறது. இந்த மொழிபெயர்ப்பு சரியா என்பது தெரியவில்லை. இணையத்தில் இந்த சொல்லை தேட முயன்றேன். தகவல் கிடைக்கவில்லை. தயை கூர்ந்து அறியத் தாருங்கள் தோழி.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி.
      உங்கள் படைப்புகளையும் அனுப்புங்கள்.

      Carbon footprint தோழி

      நீக்கு
    2. அறியத் தந்தமைக்கு நன்றிகள் தோழி. எனது கட்டுரையையும் விரைவில் பதிகிறேன் தோழி.

      நீக்கு
  13. வணக்கம்
    சகோதரி.

    நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் ... இருந்தாலும் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் த.ம 8
    எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ.
      உங்கள் நூல் வெளியீட்டிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

      கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
  14. வணக்கம்,
    எங்கம்மா என் வாழ்த்தைக் காணோம்,,
    சரி மீண்டும் வாழ்த்துக்கிறேன்,,
    அருமையான கருத்து, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி.
      அச்சச்சோ உங்க வாழ்த்து வரலையே , .. :-( இருந்தாலும் மீண்டும் வந்து வாழ்த்திய அன்பிற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  15. வாக்களித்தாயிற்று
    வாழ்த்துகள்
    செறிவாக இருக்கிறது ...
    தொடர்ந்து எழுதலாமே ...

    பதிலளிநீக்கு
  16. அருமையான அலசல்க்கட்டுரை போட்டியில் பரிசு பெற வாழ்த்துக்கள் அப்படியே இந்த ஏதிலிக்கும் கொஞ்சம் பரிசில் பங்கு கொடுங்கள்)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ..
      ஒண்ணு பண்ணுங்க, ஒரு கட்டுரை எழுதி விழாக் குழுவினர்க்கு அனுப்பிடுங்க. பரிசு உங்களுக்குத்தான், வாழ்த்துகள் :-)

      நீக்கு
  17. அத்தனை பொருட்செறிவாக அருமையான கட்டுரை தோழி!

    போட்டிக்குப் புறப்பட்டுவிட்டது பெரும் ஆரவாரத்தோடு உங்கள் கட்டுரை!
    வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி அன்புத் தோழி, மனமார்ந்த நன்றி.
      உங்கள் கவிதைகள் உண்டுதானே?

      நீக்கு
  18. மொத்தம் ஐந்து வகைகளில் போட்டிக் கட்டுரைகள் உள்ளன... அதில் எந்த வகை என்பதை மறவாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் கொடுக்கவும்... நன்றி...

    மேலும் இதுவரை வந்த கட்டுரைகளை காண சொடுக்குக இங்கே --> சபாஷ்... சரியான போட்டி...!<---

    புதுக் கோட்டை விழாக் குழுவின் சார்பாக
    திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பா வகையைச் சேர்த்து விடுகிறேன் அண்ணா.
      மற்ற கட்டுரைகளையும் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  19. செம்ம கிரேஸ் ... எவ்வளவு விஷயம் தேடி பிடிச்சு போட்டு இருக்கீங்க ... வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. அருமையான ஒரு கட்டுரை. நிறைய தகவல்கள். மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி!/ தோழி பரிசு வெல்ல....

    பதிலளிநீக்கு
  21. வளர்ந்த நரடுகள் தொழிற்துறை உற்பத்தி ஒன்றையே நாட்டமாக்கி, பசுமை இல்ல வாயுக்களை வெளியெங்கும் பரப்பி, வளரும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தினை வதைத்து வரும் வேளையில் கரிமக் கால் தடப் பதிப்பினைக் குறைக்க வலியுறுத்தும் தங்களின் கட்டுரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

      உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  22. Maatru ariporul kandupidithum ethanal payan padutha arasu yaan thayakam kaatuthunu theriyavilai. thagalin padaipu aalntha karuthukum ualipirkum vaalthukal.

    பதிலளிநீக்கு
  23. கிரீன்லாந்து பனி உருகல், ஆய்வு செய்திகள், உயிர்வளி உற்பத்தியில் கடல்பாசியின் பங்கு எனப் புதிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன் கிரேஸ்! தலைப்பும் அருமை! மேலதிக செய்திகள் அறிந்து கொள்ள இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி. கரிமக் கால்தடத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ஆக்கப்பூர்வ யோசனைகளையும் கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கலையரசி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...