Thursday, July 23, 2015

ஷர்மிலி மிஸ் கேட்ட உதவி

"சாரி சார், நான் லேசா தான் தட்டினேன். பெத்தவங்க மனசு புரியுது சார். இனிமேல் செய்யமாட்டேன். ஆனா,ஒரே ஒரு விண்ணப்பம் சார்."
 

 
thanks: Google


ஷர்மிலி மிஸ் அருகில் வந்தவுடன் ஆரம்பித்துவிட்டார் தங்கத்தின்  அப்பா.
"குழந்தையை நீங்க எப்படி அடிக்கலாம் . ஆயிரக்கணக்குல பீஸ் கட்டி படிக்கவைக்கிறது உங்க கிட்ட அடி வாங்கவா?. இன்னும் எந்த காலத்தில இருக்கீங்க  ..." 
 
முருகனின் கோபத்தை எதிர்பார்க்காத ஷர்மிலி மிஸ்ஸின் முகம் பயத்தில் மாறியது 
 
"அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா  எங்ககிட்ட தான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்கு பெத்தவங்களுக்கே உரிமை இல்லை. நீங்க எப்படி அடிக்கலாம்? குழந்தைங்க என்ன கல்லா ? அசையாம அப்படியே இருக்கிறதுக்கு. பி.எட். ல சைல்ட் சைக்காலஜி படிச்சிட்டுதானே வந்தீங்க. குழந்தைகளை எப்படி ட்ரீட் பண்ணனும்னு தெரியாதா?.  சைல்ட் ப்ரொடெக்ஷன் சட்டம் இருக்கு தெரியுமா? இன்னொரு தடவை  இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டேன். பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி இ ஓ கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், அதுக்கு மேலயும் போவேன்"  
 
"சாரி சார், நான் லேசா தான் தட்டினேன். பெத்தவங்க மனசு புரியுது சார். இனிமேல் செய்யமாட்டேன். ஆனா,ஒரே ஒரு விண்ணப்பம் சார்."
 
முருகன் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும்பொழுதே, 
 
"நான் அடிச்சதால உங்களுக்கு ஒரு கதைக்கரு கிடைச்சு  நிறைய கதைகள் வலம் வருதாமே...குறும்படம் கூட எடுக்கப் போறாங்களாமே..உங்க ப்ளாக் பாலோ பண்ற ஒருத்தர் சொன்னாரு..கதையோட காபி ரைட் எனக்கு வாங்கிக் கொடுத்துடுங்க சார்"
  
thanks: Google

 
கதை இப்படித் தோன்றி ஷர்மிலி மிஸ், அப்படிப் போய் ஷர்மிலி மிஸ், ஏன் பொண்ண அடிச்சீங்க? என்று கேள்வி கேட்டு, இப்படி வந்து ர்...ரா..ராதிகா என்று சிரிக்க வைத்து, ஷர்மிலி மிஸ் நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா? என்று கேட்டால் ஷர்மிலி மிஸ் என்ன பண்ணுவாங்க பாவம் :-)
 
 
மூளையின் கதை படித்து மூளை பாரமானவர்கள் நல்லா சிரிச்சுட்டு அடுத்த பதிவிற்குத் தயாராகுங்கள் :-)

59 comments:

 1. Replies
  1. உடனே வந்து கருத்திட்டதற்கு நன்றி சகோ..

   Delete
 2. அட அதுக்கு ஏத்த மாதிரியே பொருத்தமான படம். ரசித்தேன்.வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 3. ஆமாம்...

  குறும்படத்தை திரைப்படமாக தயாரிக்க இப்பவே பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புவதாக கூட கேள்வி....

  ஹா... ஹா... ஹா...

  சூப்பர் !

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? அதுக்கு விளம்பரம் செய்ததற்கானப் பணத்தை வாங்கிருவோம் :-)

   நன்றி சகோ

   Delete
 4. ஆஹா இப்படி சுருக்கமாக அதே நேரத்தில் மிக அற்புதமாக எழுதி இருக்கீங்க பாராட்டுக்கள் ஹும் இதுக்ககுதான் பத்தாம் வகுப்பாவது பாஸாகி இருக்கனும் இப்ப பாருங்க நான் 10 வகுப்பு பாஸாகததால் வழ வழா எழுதிகிட்டு இருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. சுருக்கமா எழுதி கல்லூரியில் பெயிலான கதை தெரியுமா சகோ? ஹாஹா

   Delete
 5. சிம்பிள் & நச் பதிவு. மீண்டும் பாராட்ட தோன்றியதால் இந்த கமெண்ட்

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வந்து பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி சகோ

   Delete
 6. நான் ஒரு தடவை பாராட்டினா 100 தடவை பாராட்டின மாதிரி

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவிற்கு மட்டும்தானே சகோ? அடுத்த பதிவுகளுக்கு வந்துடுங்க :-)
   மீண்டும் நன்றி

   Delete
 7. ஷர்மிலி மிஸ் பேமஸ் ஆகிக்கிட்டு வர்றாங்க.....ஹஹஹா...
  தம +1

  ReplyDelete
 8. இரசித்துச் சிரித்தேன்
  கொஞ்சம் பாரம் குறைந்தது நிஜம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா. பாரம் குறைந்தது மகிழ்ச்சி.

   Delete
 9. அட... குறும்படத்துக்கு காப்பி ரைட் (டீ ரைட் வேணாமா?) கேக்க ஷர்மிலி மிஸ்க்கு ஐடியா தந்தது சூப்பரா இருக்குதே. ஹா.. ஹா. ஹா... அதுக்கு அந்தத் தகப்பன் முழிக்க முழி இருக்கேம்மா நீ போட்ட போட்டோவுல... பிரமாதம். சுருக்கமான, அதே சமயம் அழகான, ரசிக்க வெச்ச பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. திரைப் படத்திற்கு டீ ரைட் வாங்கிருவோம் அண்ணா :-)
   அன்பான கருத்திற்கு நன்றி அண்ணா

   Delete
 10. ஹா...ஹா...ஹா... இது ஒரு வெர்ஷன்! புத்திசாலி ஷர்மிலி!

  ReplyDelete
 11. ஹாஹாஹா!!! கலக்கீடீங்க டியர்!!! முருகன் நொந்து நூடில்ஸ் ஆகிடாப்ள:))))

  ReplyDelete
 12. பாலசந்தரின் ஒரு வீடு இரு வாசல் போல மாறுபட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்ட முடிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

   Delete
 13. ரசித்தேன் சிரித்தேன் சகோதரியாரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
 14. ஹா ஹா... இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே சகோ.... நீங்களும் எழுதுவீர்கள் என்றும், அதில் இப்படி ஒரு முடிவை வைப்பீர்கள் என்றும்....

  ReplyDelete
 15. சொல்லப்போனால் ஷர்மிலி மிஸ்ஸுக்கும் ஒரு தொகையை காப்பிரைட் என்ற பெயரில் கொடுக்க வேண்டும் தான். அதை நான் பாத்துக்கறேன்.... ஹா ஹா ஹா....

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா
   அது சும்மா , கத உங்களுது தானே? :-)

   நன்றி சகோ

   Delete
 16. ஆகா கார்த்தி கதை நச்சுனு வந்திருக்கே..
  அந்த ஆசிரியர் பார்த்தல் நன்னா இருக்கும் ..
  தம +
  நைஸ். கிரேஸ் ..

  ReplyDelete
 17. உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை!..

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் ஐயா
   பதிவின் கீழ் நான் கொடுத்துள்ள இணைப்புகளை முதலில் படித்துவிட்டுப் பின் இதைப் படியுங்கள்.
   சரவணன் பள்ளியில் நடந்த ஒரு விசயத்தைப் பதிவாக்க , அது தொடர்பதிவாகிவிட்டது

   Delete
  2. ஆஹா.... இது கூட நல்ல யோசனைதான்.....

   Delete
 18. ஹஹஹஹஹ் செம வெர்ஷன்!! அருமை சகோதரி! அழகா திருப்பி விட்டுட்டீங்களே....சூப்பர் !! ரொமப் அழகா இருக்குதுங்க....ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ரசித்துக் கருத்திட்டுப் பகிர்ந்ததற்கும் நன்றி அண்ணா, கீதா

   Delete
 19. மிகவும் ரசனையான தொடர் பதிவு ....

  ReplyDelete
 20. ஹஹாஹா செம.. துளசி சகோ பகிர்ந்திருந்தார் தேன் மதுரத் தமிழ் க்ரேஸ் அருமை :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி அக்கா. நன்றி :)

   Delete
 21. நானும் ஸ்கூல் பையனும் நல்லா மாட்டிகிட்டோம்
  என் வசனத்தை சிவப்பில காட்டி ஆளுக்கு ஆள் கலாய்க்கிறீங்க
  மதுரை தமிழன் என்ன பண்ணப் போராறோ தெரியலேயே
  எப்படியோ ஒரு பதிவை தொடர் பதிவா ஆக்கின பெருமை எனக்குத்தான்
  நடத்துங்க நடத்துங்க

  ReplyDelete
  Replies
  1. அச்சோ..அண்ணா கலாய்க்கலை :-)
   உங்கள் வசனத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்று சொல்லலாம்.
   ஆமாம் சுவாரசியமான தொடர் பதிவிற்கு உங்களுக்கும் சரவணனுக்கும் நன்றி சொல்லணும்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 22. இப்படியொரு முடிவு யாரும் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி சகோ

   Delete
 23. My version.. :)


  http://www.kovaiaavee.com/2015/07/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்து சிரித்து வந்தேன் :)
   கலக்கிட்டீங்க

   Delete
 24. இப்படியும் யோசிக்கலாம் என்பது போல இருந்தது தோழி தங்கள் பார்வையில்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

   Delete
 25. ஹஹா...என்ன ஒரு ட்விஸ்ட் ... இந்த மாதிரி நிறைய எழுதுங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனி :)
   கண்டிப்பா , நாம பேசின மாதிரி முயற்சியை ஆரம்பித்து விடுவோம் :)

   Delete
 26. அருமையான கதை... கலக்கிட்டீங்க..

  ReplyDelete
 27. ஹிஹிஹி, இதுவும் நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...