Thursday, January 1, 2015

செருக்கில்லாதோர் துணை

புதுவருடம்!! இனிப்பு கொடுத்தால் மகிழ்ச்சிதானே? இனிப்புடன் துவங்குவோம் இவ்வருடத்தை என்று இதோ வந்துவிட்டேன், ஒன்றுக்கு மூன்று இனிப்புகளுடன், உங்களுக்காக...நமக்கு இருக்கும் பொருளை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தர்மம் செய்வது நல்லது, இனிது. உலக ஆசைக்கு  அப்பாற்பட்டு நல்ல நெறியில் நடப்போர் சொல்லும் சொற்கள் நன்மையானதாய் பயனுள்ளவையாய் இருக்கும், அதனால் அவை இனிது. எல்லா செல்வமும் வாய்க்கப் பெற்றாலும் செருக்கு இல்லாமல் வாழ்வோரைத் துணையாகக் கொண்டால் வாழ்வு இனிது. இதைத்தான் பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' என்ற நூலின் ஒரு  பாடல் சொல்கிறது.  இந்நூலில் உள்ள நாற்பது பாடல்களை இயற்றியவர் மதுரை பூதஞ்சேந்தனார் என்பவர். மதுரையைச் சேர்ந்த பூதன் என்பவரின் மகன் சேந்தனார்.

பாடல் எண்:6
"ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது"


         சொற்பொருள்: ஆற்றுந்துணையால் - செய்யக்கூடிய அளவில், அறஞ்செய்கை - தர்மம் செய்தல், முன்இனிதே - இனிதானதே, பாற்பட்டோர் - உலக ஆசைக்கப்பாற்பட்ட பெரியோர், கூறும் பயமொழி - சொல்லும் பயனுள்ள நல்ல சொற்கள், மாண்பினிதே - உயர்ந்ததே, வாய்ப்புடையராகி - அனைத்து செல்வமும் வாய்க்கப்பெற்றவராகி, வலவைகள் அல்லாரை - இறுமாப்பு/செருக்கு இல்லாதோரை, காப்படைய - காவலாக/துணையாக, கோடல் - கொள்ளுதல்
       
       என் பாடல்:
       தன்னால்  இயன்ற  தருமம்   இனியதே 
       நன்னெறி  வாழ்வாரின் நற்சொல் இனியதே 
   செல்வமெலாம்  வாய்த்தும் செருக்கில்லா தாரை 
   பெலனாகக் கொள்ளல் இனிது 


38 comments:

 1. Replies
  1. உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா..

   Delete
 2. புது வருட விடயம் அருமை வாழ்த்துகள் எமது பதிவு
  எமனேஸ்வரம், எழுத்தாளர் எமகண்டன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   உங்கள் தளம் டாஸ்போர்டில் வரமாட்டேங்கிறது சகோ..பதிவைப் பார்த்துவிட்டேன்

   Delete
 3. தித்திக்கும் தமிழ்...திகட்டாத சுவை!..
  இனிய பதிவு..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
 4. ஆஹா இனிப்பு எது தோழி ?

  இல்லாதபோ தேஇல்லார்க் கும்கொடுத் தல்இனிது
  இல்லை ஒருபற்ரென் போர்சொல்கேட் டல்லினிது
  எல்லாம்இ ருந்துமேநா னங்கிலாநட் புமினிதே
  எல்லாம்தித் திக்கும் கரும்பு !

  ஆஹா அருமை அருமைம்மா! என் சிறு முயற்சி. மனதில் நிற்கும்படியாய் இனித்தது தங்கள் கவியும் அருமைடா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
  மேலும் இப்படி நிறைய தாருங்கள் தோழி .


  ReplyDelete
  Replies
  1. உங்கள் பா இனிமை தோழி.. :)

   உங்கள் பாராடிர்க்கும் வாழ்த்திற்கும் மனங்கனிந்த நன்றிகள் தோழி ..கண்டிப்பாகத் தொடர்வேன்

   Delete
 5. ஆகா!.. அருமையாக இருக்கின்றது தோழி!

  நல்ல முயற்சி!.. தொடருங்கள்!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. புத்தாண்டிற்கு நல்ல இனிப்பு! அறிவிற்கு ஏற்ற இனிப்பு!! (அறிவு இயங்க இனிப்பும் அவசியம் இல்லையா) !!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே! ஆமாம் ஆமாம்..இனிப்பு மிகத்தேவை :)

   Delete
 7. வணக்கம் !

  எண்ணமெல்லாம் இனிக்கும் இது போன்ற சுவையான இனிப்பை
  எவர் தருவார் !கிடைத்த வரைக்கும் அதி உச்ச மகிழ்வினை அடைந்தோம்
  தோழி :))இனிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி!
   உங்கள் அன்பான கருத்தைக் கண்டு மிக மகிழ்ந்தேன்..மிக்க நன்றி தோழி

   Delete
 8. புத்தாண்டில் இனியவை நாற்பது மூலம் இனிய கவிதை படைத்து தந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி சகோ. நன்றி

   Delete
 9. தித்திக்கும் இனிப்பு...
  அருமை... அருமை...

  ReplyDelete
 10. ஒரு தகவலுக்காக - சகோதரி அவர்களுக்கு வணக்கம். “வி.கிரேஸ் பிரதிபா – துளிர் விடும் விதைகள் (நூல்அறிமுகம்) ” என்ற தலைப்பினில் தங்கள் நூலினைப் பற்றி ஒரு பதிவு
  ( http://tthamizhelango.blogspot.com/2015/01/blog-post.html )
  எழுதியுள்ளேன்..
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. இச்செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா..உளமார்ந்த நன்றி..இதோ பார்க்கிறேன் ஐயா

   Delete
 11. ஆஹா!!! சக்கரையா இனிக்குதே மெச்செஜ்:))) எந்த பக்கம் திரும்பினாலும் துளிர் விட்டிருக்கிறது விதை !!! ரொம்ப சந்தோசம் டியர்:) வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி டியர்..
   எல்லாம் உங்கள் அன்பின் பிரதிபலிப்பு டியர்..மிக்க நன்றி டியர் :) :)

   Delete
 12. 'செல்வமெலாம் வாய்த்தும் செருக்கில்லா தாரர்' ஆன தங்களின் பாடல் மிக அருமை. பாராட்டுக்கள். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். - VGK

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete

 13. செருக்கில்லா தோர்துணையை செப்பும் பதிவில்
  உருக்கமாய் சொன்னீர்கள் உண்மை - இருப்போரும்
  இல்லாரை காக்கும் இதயத்தை ஏற்றிங்கே
  நல்லதை செய்வோம் நயந்து !


  அழகாய் சொன்னீர்கள் சகோ அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
  தம 6

  ReplyDelete
 14. மிக மிக இனிது.
  தொடர்க...
  வேதா. இலங்காதிலகம்

  ReplyDelete
 15. அருமையான கருத்து...
  நம்ம ஆட்கள் சொன்னால் மதிக்க மாட்டாங்க இதே ஆண்ட்ரூ கார்நிகீ சொன்னால் ரசிப்பாங்க...
  நற்பணி தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா..
   ஆண்ட்ரு கார்நிகி யாரென்று இப்போதான் கூகிள் செய்தேன் :) இவருதான் பிட்ஸ்பெர்க் ஸ்டீல் கம்பனி ஆரம்பித்தவரா? நன்றி அண்ணா :))
   அது எப்பொழுதும் அப்படித்தானே, சொந்த ஊரில் உள்ள விசயங்கள் தெரியாது...

   Delete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டில் சிறப்பாக ஒரு பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. இனிது இனிது உங்கள் விளக்கமும் இனிது. நன்றி கிரேஸ் :)

  ReplyDelete
 18. அடடே.. நான் கவனிக்க வில்லையேம்மா.. நல்லவேளை இணைப்புக் கொடுத்தாய்.
  பழைய வெண்பாவுக்குப் புதிய வெண்பாவில் விளக்கம்..அட! இது நல்லாருக்கே! (“பெலன்“ மட்டும் கிறிஸ்துவ வழக்குச் சொல். சரியா? அங்குமட்டும்தான் எதுகை-மோனை இடிக்கிறது. மற்ற இடங்களில் எதுகை மோனையுடன் பொருளும் அப்படிப் பொருந்தி நிற்பது அழகு) வெண்பா இலக்கணத்துடன் எளிதாகவும் இருக்கிறதுப்பா.. ஆங்.. தேறிட்டே.. இனி வெளுத்து வாங்கு! வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா, காணோமேனு பார்த்தாலும், வேலைப் பளு என்று நினைத்துக்கொண்டேன்.. :)) ஆனா எப்படி வெண்பாவிற்கு உங்களிடம் கேட்காமல் இருப்பது?
   ஆமாம் அண்ணா, கிறிஸ்துவர்கள் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணா..

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...