தோழியே தமிழே கேளு,
(அதற்கு முந்தைய தேதிகளில் இருக்கும் பதிவுகள் என் ஆங்கிலத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை.)
என் தளம் வந்து கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பிற்சேர்க்கை:'முன்னூறாவது பதிவு' என்று தட்டச்சு செய்தவுடன், பார்க்கும்பொழுதே ஏதோ சரியாக இல்லையோ என்று தோன்றியது..இருந்தாலும் ரொம்ப யோசிக்காமல் விட்டுவிட்டேன்..
"முன்னூறு என்பது தவறு முந்நூறு (மூன்று x நூறு என்பது அப்படித்தான் வரும்) “முன்னூறு தந்தேன் “என்றால், “முன்பொருமுறை தந்த நூறு“ என்று பொருளாகும்." என்று முத்துநிலவன் அண்ணா அன்புடன் தெளிவு படுத்திவிட்டார்கள்...அதன்படி என் பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். இங்கேயும் சொன்னால், படிக்கும் அனைவருக்கும் தெரியுமே என்று சேர்க்கிறேன். முத்துநிலவன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்! (மேலே உள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் :) )
படங்கள்:நன்றி கூகிள்
தோட்டமே செய்தாய் பாரு!
வாழிய தமிழே கேளு,
வானமாய் விரிதல் பாரு!
ஆழியே போலும் ஆசை
ஆட்கொளத் திறந்த பூவே!
வாழிய எனவே உன்னால்
வாசனைப் பொழிதல் பாரு!
2012 ஜுலையில் துவங்கிய இந்த வலைப்பூவின் முந்நூறாவது பதிவு இது!(அதற்கு முந்தைய தேதிகளில் இருக்கும் பதிவுகள் என் ஆங்கிலத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டவை.)
என் தளம் வந்து கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பிற்சேர்க்கை:'முன்னூறாவது பதிவு' என்று தட்டச்சு செய்தவுடன், பார்க்கும்பொழுதே ஏதோ சரியாக இல்லையோ என்று தோன்றியது..இருந்தாலும் ரொம்ப யோசிக்காமல் விட்டுவிட்டேன்..
"முன்னூறு என்பது தவறு முந்நூறு (மூன்று x நூறு என்பது அப்படித்தான் வரும்) “முன்னூறு தந்தேன் “என்றால், “முன்பொருமுறை தந்த நூறு“ என்று பொருளாகும்." என்று முத்துநிலவன் அண்ணா அன்புடன் தெளிவு படுத்திவிட்டார்கள்...அதன்படி என் பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். இங்கேயும் சொன்னால், படிக்கும் அனைவருக்கும் தெரியுமே என்று சேர்க்கிறேன். முத்துநிலவன் அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்! (மேலே உள்ள படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள் :) )
படங்கள்:நன்றி கூகிள்
wow வாழ்த்துக்கள்டா அப்புறம் வருகிறேன்!
பதிலளிநீக்குஅருமை கிரேஸ் ... இன்னும் பல நூறு பதிவுகள் தர வாழ்த்துகள்
பதிலளிநீக்குஆஹா!!! டியர் கலக்குங்க:)) முன்னூறாவது பதிவு, அதுவும் அழகான விருத்தத்தில்!! ஆங்கிலதளத்தில் எழுதியத்தில்லாமல் மூன்னூறு!!! சூப்பர் டியர்! இன்னும் இன்னும் உங்க தமிழ் சேவை தொடரட்டும்!!
பதிலளிநீக்குநன்றி டியர்.
நீக்குஆங்கிலத்தில் எழுதியது அல்லாமல் என்று சொல்லலாம் டியர், அங்கிருந்த சில தமிழ் பதிவுகளை இங்கு தரவிறக்கம் செய்திருக்கிறேன்.. :)
அருமை சகோ
பதிலளிநீக்குமூவாயிரத்தை தொட வாழ்த்துக்கள் ..
த ம +
Valthukal ma Anna 400 thangai 300 super
பதிலளிநீக்குநன்றி கீதா
நீக்குஆமாம்.. :)
300வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குஆயிரமாயிரமாய் பதிவுகள் தொடரட்டும்
தம 2
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமுன்னூறு பதிவுகள் - மனம் நிறைந்த வாழ்த்துகள் கிரேஸ். மேலும் பல பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇன்னும் பல நூறு பதிவுகளைத் தருவதற்கு வாழ்த்துகின்றேன்!..
பதிலளிநீக்குஇன்னும் பெருகிட வேண்டும் புலமையும்
பதிலளிநீக்குமின்னிடும் பாக்களும் சேர்ந்து!
அருமை அருமை முந்நூறு என்ன மூவாயிரத்திற்கு மேலும் பல பல பதிவுகள் படைத்திட மனதார வாழ்த்துகிறேன்மா.....!
மிக்க நன்றி தோழி..மீண்டும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி
நீக்குஎண்ணிக்கை மேன்மேலும் உயர வேண்டும்
பதிலளிநீக்குஎல்லையென்ன தமிழுக்கு இல்லை யாண்டும்
கண்ணுக்கு தெரிகின்ற காட்சி முற்றும்
கருவாகி கவிதையென வடிவம் பெற்றும்
பண்ணுக்கு ஏற்றவகை பாடல் தருவீர்
பைந்தமிழ் மரபுவழி பாடி வருவீர்
மண்ணுக்குப் பெருமைமிக உங்கள் சேவை
மாறவாது எழுதுங்கள் நாளும் பாவை!
உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி ஐயா...மிக்க நன்றி
நீக்குஇனிய வாழ்த்துக்கள். தொடருங்கள் உற்சாகத்துடன்.
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்குவாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி அனுராதா
நீக்குவாழ்த்துகள் மென்மேலும் வளர மேலும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ் மணம் - 6
எனது பொங்கல் பதிவு - மோதகமும், அதிரசமும்.
நன்றி சகோ
நீக்குபார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி
300ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி.
பதிலளிநீக்குமுன்னூறாவது பதிவிற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் கிரேஸ்!
பதிலளிநீக்கு300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குஆகாகா... வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்குஅய்..அண்ணன் 400 தங்கை 300 எனக்கு ரொம்ப மகிழ்ச்சிம்மா.
வலைப் பக்கம் நம்மை எப்படியாவது இழுத்து உட்கார வைத்து எழுத வச்சிடுது இல்ல..? கவிதையில் 300ஆவது பதிவுப் பகிர்வு. இன்னும் இன்னும் பலநூறு எழுதி, தமழ் இலக்கிய உலகில் உனக்கென்று ஒரு பேரையும் புகழையும் பெற்றுச் சிறந்திட அன்பான வாழ்த்துகள் மா. கவிதையில் வாழ்த்து இன்னும் சிறப்பு. மரபுஉனக்கு வருகிறது.. விடாமல் தொடர்ந்து முயன்று பயின்று தேவைப்படும் பொழுது மரபில் முழங்வும், புதுக்கவிதையில் பொங்கவும் கைவரவேண்டும். (தாமத வருகைக்கு மன்னிச்சுக்கோ பா)
மிக்க நன்றி அண்ணா. //மரபில் முழங்கவும் புதுக்கவிதையில் பொங்கவும் // ஆகா ரசித்தேன் அண்ணா. உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றிகள்! உங்கள் வருகை மகிழ்வே, தாமதம் எல்லாம் பரவாயில்லை அண்ணா..
நீக்குதமிழைத் தோழியாக்கி, (ஈசனை சுந்தரர் சகா என்று கொண்டாராமே?) அழகான எதுகை மோனை, ஓசைநயம் நன்றாக அமைந்திருக்கிறது.அறுசீர் விருத்த வகையில் அழகாய் உட்காரும் பா. பொருள்நயம் பழகப்பழக இன்னும் இயல்பாய் வந்துவிடும். எடுத்த எடுப்பில் சிக்ஸர் மாதிரி மரபு எழுதியதற்கு விஜூவிற்கு நன்றிசொல்லி உன்னைப் பாராட்டி, இதுபோல அவ்வப்போது எழுத வேண்டுகிறேன்
பதிலளிநீக்குஅப்படியா அண்ணா?
நீக்குமிக்க மகிழ்ச்சி அண்ணா, நன்றி. ஆமாம் விஜூ அண்ணா எளிமையாக்கி விட்டார், அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
எழுதுகிறேன் அண்ணா, ஆனால் என்ன இப்படி எழுதினால் சிலருக்குப் புரிகிறது, பிடிக்கிறது, புதுக்கவிதை பலருக்கும் பிடிக்கிறது :)
ஆகா..மறந்துட்டேன்.. இதோ த.ம.வாக்கு எண்-8
பதிலளிநீக்குநன்றி அண்ணா... :)
நீக்குதங்களது 300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். மேலும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம.9
நன்றி ஐயா.
நீக்குஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!