Friday, June 20, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

தோழி மைதிலி பத்து கேள்விகள் கேட்டு பத்தும் பதிலளிக்க என்று சொல்லிவிட்டார். என் விடைத்தாள் இங்கே..


1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
இப்புவியில் இருந்தால் நடக்கும் திறனுடனும், (யாருக்கும் தொந்திரவா இருக்கக்கூடாது)
இல்லாவிட்டால் 
நூற்றாண்டு விழாவை மேகங்களில் மிதந்தபடி பார்த்தும்  ;-)
(பெரிய அப்பாடக்கரா, நூற்றாண்டு விழாவிற்கு என்று கேட்காதீர்கள்...கனவு காண்பதில் என்ன தப்பு? :) )

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
சினத்தைக் கட்டுப்படுத்த
(இதப் படிங்க புரியும் ;-)  )

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
தோழி மைதிலி என் பெயரை இணைத்ததைப் பார்த்து, ஆஹா நான் பெரிய ஆளாயிட்டேனா என்று மகிழ்ச்சியில்.. ;-)

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
சூரிய ஒளி இருக்கும் வரை வேலை, புத்தகம், குழந்தைகளுடன் விளையாட்டு. இருண்ட பின் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கதை,
குழந்தைகளுடன் விளையாட்டு, தூக்கம் 
(காத்து இல்லேனா..... இரண்டாம் பதிலில் இருக்கும் கதையைப் படிங்க..ஒன்னும் சொல்றதுக்கில்லை :) )

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் , enjoy life 

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
நீர் பிரச்சினையை  

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
அதுக்குன்னு ஒரு குழு வச்சுருக்கேன், நேரத்தையும் பிரச்சினையையும் பொறுத்து யாரென்று முடிவாகும் 

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக் கொண்டேன், நான் எப்படி என்று எனக்குத் தெரியும், நெருங்கியவருக்கும் தெரியும்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
அவர் சொல்வதைக் கேட்டுக்  கைபிடித்து நிற்பேன்  
("Saying nothing sometimes says the most" - Emily Dickinson, எனக்குப் பிடித்த வரிகள்)

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
புத்தகம், புத்தகம், புத்தகம்  

என் கேள்விக்கென்ன பதில்?
'என் கேள்விக்கென்ன பதில்?' என்று நான் கேட்கும் (தொடர் பதிவு தாங்க) நட்புகள் யாரென்றால்,

1. ஸ்ரீனி (http://covaiveeran.blogspot.in/)

2. தென்றல் சசிகலா (http://veesuthendral.blogspot.in/)

3. இளையநிலா இளமதி (http://ilayanila16.blogspot.in/)

4. பூந்தளிர் தியானா (http://dheekshu.blogspot.com/)

5.சகோதரர் ரூபன் (http://tamilkkavitaikalcom.blogspot.in/)

6. சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் (http://dindiguldhanabalan.blogspot.com/)

7. சகோதரர் இரவின் புன்னகை வெற்றிவேல் (http://iravinpunnagai.blogspot.com/)

8. தோழி தமிழ்முகில் (http://tamizhmuhil.blogspot.com/)

9. சகோதரி கோவைக்கவி (http://kovaikkavi.wordpress.com/)

10.தோழி நிகழ்காலம் எழில் (http://nigalkalam.blogspot.com/)

இத்தொடற்பதிவில் என் அழைப்பின் சங்கிலியில் அழைக்கப்பட்டோரைப் பார்க்க,
தோழி மைதிலியின் பதிவு.
மதுரைத் தமிழனின் பதிவு.

'இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?' தலைப்பில் உங்கள் பதில்களை பதிவிடவும்.  நன்றி.

61 comments:

 1. Oh! my god me to.?.....நல்லா மாட்டிவிட்டாயிற்று!..... நிசமே தான்.
  சங்கடமாகச் சிரிக்கிறேன்...கிறேஸ்...
  இப்போது சரியில்லாத கணனியில் எழுதுகிறேன்.
  எனது கணனி திருத்தியதும் பதிலிடுகிறேன்.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ..பரவாயில்லை சகோதரி, கணினி சரியானவுடன் பதிவிடுங்கள்.

   Delete
 2. ஆத்தி என்னையுமா ? சரிங்க கண்டிப்பாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. வணக்கம் தோழி!

  அட என்னமா பதில் சொல்லிக் கொண்டு போறாங்களேன்னு பார்த்து
  ரசித்துக் கொண்டு இருந்த என்னை,
  அந்த லிஸ்டில் என் பெயரையும் இப்படி இணைத்து
  ஸ்தம்பிக்க வைச்சுட்டீங்களே... :0

  பார்க்கலாம்... முயல்கிறேன் தோழி!
  என்னிடம் பதிலுரைக்க என்ன இருக்குன்னு யோசிக்கிறேன்.

  நன்றியுடன் வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தோழி.

   ஹாஹா உங்க பதில்களையும் படித்து ரசிக்கத்தான்.. :)
   வாழ்த்துகள்!

   Delete
  2. இப்டியும் இளமதி இந்த வட்டத்துல சிக்குவாங்கனு எதிர்பார்த்தேன்:))
   நன்றி கிரேஸ் ! தோழி இளமதி இதை என் அழைப்பாகவும் ஏற்கவும் :))

   Delete
  3. அது எப்டி சரியாய் எதிர்பார்த்தீங்க? கலக்குறீங்க தோழி :)

   Delete
 4. அத்தனை கேள்விக்கும் அருமையான கலக்கலான பதில் அன்புத் தோழியே வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. பதில்களை ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி தோழி

   Delete
 5. அனைத்தும் அருமையான பதில்கள் சகோதரி

  ReplyDelete
 6. சிறப்பான பதில்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. இப்படி என்னையும் மாட்டி விட்டுடியே கிரேஸ்! எழுத முயற்சி செய்கிறேன்.. ஆனா எப்போ என்று மட்டும் கேட்காதே :-)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா உன்ன விட்டுட்டு ஒன்னு செய்வேனா? :)
   எழுது, எழுது நேரமிருக்கும்பொழுது..

   Delete
 8. கலக்கான பதில்கள் கிரேஸ்! பதில்கள் அனைத்திலும் "நீ" தெரிகிறாய்!

  ReplyDelete
 9. வணக்கம்
  சகோதரி.

  கேள்விக்கு பதில் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
  என்னையும் மாட்டிவிட்டிங்கள் .. இதுவரைக்கும் இதைய தலைப்பில் நான்கு பதிவுக்கு பதில் போட்டு வந்த பின் உங்களின் பக்கம் திரும்பிய போது. நம்ம தப்பித்தோம் சாமி என்று நிம்மதியாக இருந்தேன் பின்புதான் பார்த்தேன் என்னையும் சங்கிலித்தொடரில் மாட்டிவிட்டீங்கள் ..அப்போது என் இதயம் 72 தடவைக்கு பதிலாக 75 தடவை துடித்தது.. சரி எழதுகிறேன் இன்று இரவு.. பாருங்கள். பதிவாக.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   முதலில் என் நன்றி.
   ஹாஹா சிறகடிக்கும் நினைவலைகளில் இருந்து நீங்கள் கொஞ்சம் வெளியே வரத்தான் :) உங்கள் பதில்களைப் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

   Delete
 10. அடடா சூப்பர் மா

  ReplyDelete
 11. பதில் அளிக்க காத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  பதில்களை அறிய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 12. thank u sooooooooo much dear! u made my day:))
  பதில்கள் ஒவ்வொன்னு அட்டகாசம்:) சொன்னாலும் சொல்லாட்டியும் என் friend பெரிய அப்பாடகர் தான் :) இந்த ஆரோக்கியமான நட்பு வட்டம் இப்படி விரிவது அளவு கடந்த சந்தோஷம்:)) கிரேஸ் செல்லம் மீண்டும் மீண்டும் நன்றி டா:)

  ReplyDelete
  Replies
  1. The pleasure is mine dear :)
   ஹாஹா உங்க அன்பான மனம்திறந்த கருத்துரைக்கு ரொம்ப நன்றி மைதிலி. ஆமாம் இந்த நட்பு வட்டம் மிகுந்த மகிழ்ச்சி தரும் வட்டமே. செல்லத்தின் செல்ல நன்றிகள் பல :)

   Delete
  2. உஷ்ஷ்ஷ்ஷ் என்ன இங்க ரொம்ப சத்தம் கேட்கிறது...அமைதி அமைதி....நானும்தானே இந்த நட்பு வட்டத்தில் இருக்கிறேன். இல்லைன்னுமட்டும் சொன்னீங்க... இன்னொரு மொக்கை பதிவு போட்டு அதை தொடர்பதிவாக்கி உங்க 2 பேரையும் முதலில் இழுத்துவிட்டுடுவேன்

   Delete
  3. நீங்களும் நட்பு வட்டத்தில் இருக்கீங்கதான்..அதுக்காக நானும் மைதிலியும் சவுண்ட் குடுக்காம இருக்க மாட்டோம், என்ன டியர் மைதிலி, சரிதானே? :)

   Delete
  4. ofcourse da chellam!! lets rockKKKKK:)))@ கிரேஸ்
   இதுல என்ன டௌட் , இந்த வட்டத்தில் நீங்க எப்பவுமே இருக்கீங்க சகா but ரெண்டு பொண்ணுங்க அதுவும் friends சேர்ந்த கொஞ்சம் சவுண்ட் இருக்கத்தானே செய்யும்@ தமிழன்
   இன்னொரு பதிவுக்கு பயந்தவன்களா நாங்க:))) என்ன கிரேஸ்?
   உங்க friend டா இருந்துகிட்டு பயந்தாலும் ஆகுமா:)

   Delete
  5. சரியாச் சொன்னீங்க டியர், பதிவுக்கெல்லாம் பயந்தவங்க கிடையாது இந்த தோழிகள் :)

   Delete
 13. நானும் அன்பில் மாட்டிக் கொண்டேனா...? சிறிது அவகாசம் தேவை...

  ReplyDelete
  Replies
  1. வலைத்தள நட்புகளின் அன்பில் மாட்டாமல் இருக்க முடியுமா? :)
   கண்டிப்பாக, நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடுங்கள்..உங்கள் பதில்கள் மிகுந்த சுவாரசியமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..நன்றி.

   Delete
  2. படித்துவிட்டேன் சகோதரரே...எப்பொழுதும் போல உங்கள் முத்திரையுடன் அருமையான பதில்கள்
   நன்றி

   Delete
 14. சுவாரசியமான கேள்விகள் பதில்கள் ....பதிலுக்குள்ள பதில் இருக்கே ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு முதல் நன்றி. பதில்கள் ஒவ்வொன்றையும் ரசித்துக் கருத்திட்டதற்கு நன்றி.

   Delete
 15. உண்மையான மனம் திறந்த நல்ல பதில்கள் கிரேஸ். நானும் இந்த அன்பு வட்டத்தில் சிக்கிக் கொண்டேன் வெகு விரைவில் பதில்களோடு வருகிறேன். நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இனியா.
   இந்த அன்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியுமா? நல்ல விசயம்..
   உங்கள் பதில்களைப் படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.

   Delete
  2. அட இன்னுமா படிக்கவில்லை நீங்கள் very bad very bad

   Delete
  3. ஹ்ம்ம் எப்படி கவனிக்காமல் விட்டேன்? very sorry very sorry :)
   லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டா வந்து படிச்சுட்டேனே :)

   Delete
 16. தேன் மதுரத் தமிழில் பதில்கள் எல்லாம் அருமை

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 17. 9 வது பதில் மிக மிக மிக அருமை...... சிலநேரங்களில் வார்தைகளைவிட மெளனமாக கையை பிடித்து அமர்ந்திருப்பது போல மனதுக்கு ஆறுதல் தரும் விஷயம் ஏதும் கிடையாது என்பதுதா எனது கருத்து.

  இதை மைதிலியின் பாட்டி மறைவு செய்திக்கு நீங்கள் கொடுத்த கருத்தை பார்த்து என்னைப் போல ஒருவரும் சிந்திக்கிறாரே என்று மகிழ்வு கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. உண்மைதான், எந்த இழப்புமே ஈடு செய்ய முடியாதது, வார்த்தைகளுக்கு அங்கு இடமில்லை..
   மைதிலியின் தளத்தில் நான் கொடுத்த கருத்துரை பார்த்து உங்கள் கருத்தைச் சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

   Delete
 18. ரசனையான விளையாட்டில் வித்தியாசமான பதில்கள் தங்களுடையது.
  மகிழ்ச்சி.. மிகவும் ரசித்தேன்.
  இந்த வட்டத்திற்குள் சுற்றி வர எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
  நேரமிருந்தால் - எனது விடைகளையும் காண்பதற்கு தங்களை அழைக்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. கண்டிப்பாகப் பார்க்கிறேன் ஐயா.

   Delete
 19. பதில்கள் அனைத்துமே யதார்த்தமாக இருந்தது.

  ReplyDelete
 20. நல்ல பதில்கள்.... எல்லோருடைய பதில்களையும் பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கு..... நான் என்ன எழுதப் போறேன்! :))))

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட்...

   கலக்கப் போறீங்க..ஆவலாய் இருக்கிறோம் :))

   Delete
 21. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப் பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  ReplyDelete
 22. சூப்பர் பதில்கள்.. 1, 9 பதில் மிக அருமை...
  என்னோட பதிலையும் சீக்கிரம் போடுறேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீனி..
   சீக்கிரம் ..சீக்கிரம்..இல்லேனா எல்லாரும் கோவைவீரனை மறந்துடுவாங்க :)

   Delete
 23. சகோதரி, எனது பதில்கள் இங்கு:
  http://muhilneel.blogspot.com/2014/06/blog-post_24.html

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் சகோதரி..பகிர்விற்கு நன்றி.

   Delete
 24. அட்வைஸ் கேக்க குழுவையே வச்சிருக்கீங்களா!? அம்மாடி! நீங்க பெரிய ஆள்தான்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா
   சின்ன ஆள் தான் ராஜி, உங்கள் சின்ன தங்கை ஆச்சே.

   Delete
 25. அனைத்தும் மனந்திறந்த சிறப்பான பதில்கள். பாராட்டுகள் கிரேஸ்.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...