கோபம்

 பூங்குழலிக்குச்  சோர்வாக இருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு அன்று மதியம்தான் வீடு திரும்பியிருந்தனர். வந்தவுடன் குளித்துவிட்டு இரு பிள்ளைகளையும் குளிக்க வைத்துவிட்டு வந்தாள். கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று கெஞ்சிய கால்களை அலட்சியம் செய்துவிட்டு சமையலறை சென்றாள். ஏதோ செய்ய வேண்டுமே என்பதற்காக  தக்காளி சாதம் கிளறினாள். ஒரு வழியாக சாப்பாட்டு வேலையை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று அமர்ந்தாள். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. மகளிடம் தொலைகாட்சிப் பெட்டிக்கு தடை விதித்து வீட்டுப்பாடம் செய்யச்  சொன்னவள் கண்ணயர்ந்து போனாள். பட படவென்று விளையாட்டுச்  சாமான் விழும் சத்தம் கேட்டு விழித்தவள் மகளின் முதுகில் ஒரு அடி வைத்தாள். "டயர்டா இருக்குனு கொஞ்ச நேரம் படுக்க முடியுதா? அமைதியா இருக்க மாட்டியா? போய் மூலைல உக்காரு..எப்பப் பாரு சத்தம் போட்டுக்கிட்டு..." என்று கத்தியவள் சுய உணர்வுக்கு வந்தாள். எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? தனக்கு அயர்வாக இருந்தால் தான் தூங்க வேண்டும் என்றால் குழந்தை பொம்மை போலவா இருக்க முடியும்? பாவம், டிவியும் போடாமல் விளையாடவும் இல்லாமல் என்ன செய்வாள் குழந்தை. கத்தி விட்டேனே. ஆறுவது சினம் என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதுமா? பூங்குழலிக்கு தன் மேலேயே வெறுப்பாக வந்தது. எவ்வளவு பயந்து விட்டாள் குழந்தை! பாழாய்ப்போன இந்த கோபம் ஏன் தான் அறிவை மறைக்கிறதோ. கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள். மகளை அழைத்து சமாதானம் செய்ய நினைத்துக்கொண்டு அழைத்தாள். இரண்டு முறை கூப்பிட்டும் பதில் இல்லாமல் போகவே "எத்தன தடவ கூப்டுறது? கூப்டா என்னனு கேக்க மாட்டியா?..." அடப்பாவமே!

10 கருத்துகள்:

  1. ஹா... ஹா... இவ்வளவு சிந்தித்தும் அந்த அரக்கன் போகலையே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திரு.திண்டுக்கல் தனபாலன், மிகக் கொடிய அரக்கன்! வருகைக்கு நன்றி!

      நீக்கு
  2. ஹா ஹா.. புரிகிறது கிரேஸ் யார் அந்த பூங்குழலினு :-)

    பதிலளிநீக்கு
  3. எதார்த்தமான கதை! அருமை! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்திற்கு வருகை தந்து கருத்து பதிவு செய்ததற்கும்
      வாழ்த்துக்கும் நன்றி திரு.சுரேஷ்!

      நீக்கு
  4. அன்பின் கிரேஸ் - பெற்றவர்கள் பல்வேறு காரணங்களினால் குழதைகள் மேல் கோபப் ப்டுகின்றனர் - தவறெனத் தெரிந்த உடன் வருந்துகின்றனர் - ஆனால் உடனே கோபம் - மாறி மாறி வருவது இயறகை. தவிர்க்க இயலாததாகி விட்டது - சிறு - மிகச் சிறிய கதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. ஆமாம், குழந்தை வளர்ப்பில் இப்படித்தான் இருக்கும், வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனா அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. இங்கு வந்து கதை படித்து கருத்திட்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...