Sunday, June 9, 2013

பார்த்து உணர்ந்திடு மானுடமே!
நலிந்தவர் உயர்ந்திடத்  தோள்  கொடுத்தால்
மெலிந்தவர் வாழ்ந்திடக்  கை கொடுத்தால்
உள்ளதை உளமாரப் பகிர்ந்திட்டால்
ஓரினமாய் ஒன்றியே  வாழ்ந்திட்டால்


பொழிவாய்ப் பொங்கும்  பசுமையே
வளமையாய் செழிக்கும் வாழ்வே
இதனை
மௌனமாய்க் கற்பிக்கும் இயற்கையே
பார்த்து உணர்ந்திடு மானுடமே!

30 comments:

 1. நானும் இன்று இயற்கையை போற்றினேன்.நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.நல்லது.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @கவியாழி கண்ணதாசன்: உங்கள் பதிவைப் படித்துவந்தேன் ஐயா, மிகவும் அருமை. நன்றி!

  ReplyDelete
 3. படமும் அதற்கான அருமையான
  விளக்கமாக அமைந்த கவிதையும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளாவிடினும் பரவாயில்லை. அதை அழிக்காமலிருந்தாலே போதும் என்று எண்ணத்தோன்றுகிறது. அருமையானதொரு கருத்தை அழகிய பாவாக்கியமைக்குப் பாராட்டுகள் கிரேஸ்.

  ReplyDelete
 5. தாவரங்கள், யாரையும் அழித்து வாழ்வதில்லை. கார்பன் டை ஆக்ஸைடை, உட்கொண்டு, உயிரிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளியிட்டு, மனிதனையும் மற்ற ஜீவராசிகளையும் வாழவைப்பவை தாவரங்கள்தான். அவைகள் உயர்வானவைகள்.

  மனிதனால் தாவரங்களை அழிக்காமல் வாழமுடியாது. முக்கிய அமினோ அமிலங்கள் என்று சொல்லப்படம் essential amino acids களை உருவாக்க முடியாத ஊனமுற்றவன்தான் மனிதன். அவைகளை தாவரங்கள், மற்றும் விலங்குகளை அழித்து பெறாமல் மனிதனால் வாழவே இயலாது. இப்படிப்பட்ட பாவ ஜென்மமான மனிதன், தன்னை எல்லோரையும்விட உயர்வானன் என்று வேற நினைத்துக்கொண்டு வாழ்கிறான், பிதற்றுகிறான். அப்படி கண்மூடித்தனமாக வாழும் மானிடன் எப்படி இயற்கையை வியந்து தன்னை சரி செய்துகொள்வான், கிரேஸ்? அப்படி ஏதாவது அவன் சாதிக்கணும்னா அவன் செத்து அவன் உடலை பல பாக்டீரியா, வைரஸ்களை வாழ வைத்தால்தான் உண்டு. உயிரோடு இருக்கும்போது அவன் வாழ்க்கையை உணர்ந்து, இயற்கையிடம் கற்றுக்கொண்டு அப்படியெல்லாம் யாருக்கும் உதவமாட்டான்.

  ReplyDelete
 6. என்ன ஒரு சிந்தனை கிரேஸ். கலக்குரீங்க :). கவிதை அழகாக? படங்கள் அழகாகனு ஒரு பட்டிமன்றம் வைக்கலாம் :)

  ReplyDelete
 7. /// உணர்ந்திடு மானுடமே! ///

  அனைவரும் உணர வேண்டும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இயற்கையுடன் இயைந்த வாழ்வு - அது
  கற்றுத் தருமே என்றென்றும்
  வாழ்வியலின் பாடங்கள் அனைத்தையுமே !!!

  அழகான கவிதை தோழி . வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 9. பொழிவாய்ப் பொங்கும் பசுமையே
  வளமையாய் செழிக்கும் வாழ்வே
  இதனை
  மௌனமாய்க் கற்பிக்கும் இயற்கையே
  பார்த்து உணர்ந்திடு மானுடமே!

  இதைப் படித்த பின்பாவது திருந்துவார்களா ?

  அர்த்தமுள்ள கவிதை அக்கா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வளமையாய் செழிக்கும் வாழ்வே

  இயற்கை போற்றும் அழகான பகிர்வுகல்.

  ReplyDelete
 11. இயற்கை தரும் பாடமதை
  இயல்பாய் நாமும் எண்ணிடவே
  பொறுப்பாய் கவிதனில் பொறித்திங்கே
  பொதிந்த சிந்தனை அற்புதமே...

  அழகிய கவிதை! வாழ்த்துக்கள் தோழி!.

  ReplyDelete
 12. @ரமணி: வருகைக்கும் வாழ்த்தும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா!

  ReplyDelete
 13. @கீதமஞ்சரி: உண்மைதான் கீதா, இயற்கையை அழிக்காமல் இருந்தாலே பெரும் உதவியாய் இருக்கும். கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 14. @வருண்: விளக்கத்துடன் கூடிய கருத்துரைக்கு நன்றி வருண். நீங்கள் சொல்வதில் உள்ள உண்மையும் ஆதங்கமும் புரிகிறது. //எல்லோரையும்விட உயர்வானன் என்று வேற நினைத்துக்கொண்டு வாழ்கிறான், பிதற்றுகிறான். அப்படி கண்மூடித்தனமாக வாழும் மானிடன் எப்படி இயற்கையை வியந்து தன்னை சரி செய்துகொள்வான், கிரேஸ்? // -- இது உண்மைதான், ஆனாலும் இன்று ஒரு புரிதலும் மாற்றமும் ஆரம்பித்து இருக்கிறதல்லவா? அது எல்லாவிடங்களிலும் பரவி பயன் தரவேண்டும் என்று நம்புவோம்..வேண்டுவோம். 100% இல்லாவிட்டாலும் ஏற்படும் நல்ல மாற்றங்கள் நல்லதுதானே?
  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 15. @ஸ்ரீனி: மிக்க நன்றி ஸ்ரீனி! ஹாஹா, இப்பொழுதெல்லாம் எதைபார்த்தாவது கவிதை தோன்றினால் படம் எடுக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது, பதிவுலகு தந்த ஊக்கம்! :)

  ReplyDelete
 16. @திண்டுக்கல் தனபாலன்: ஆமாம், அனைவரும் உணர்ந்தால் உயர்வுதான். நன்றி ஐயா!

  ReplyDelete
 17. @தமிழ்முகில்: //இயற்கையுடன் இயைந்த வாழ்வு// அப்படித்தானே நம் முன்னோர் வாழ்ந்ததாகச் சங்க இலக்கியம் சொல்கிறது. அது மாறியது வருத்தமே.. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி!

  ReplyDelete
 18. @ஹிஷாலீ: நம்புவோம் :)
  மிக்க நன்றி!

  ReplyDelete
 19. @இராஜராஜேஸ்வரி: வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி!

  ReplyDelete
 20. @இளமதி: கருத்தையும் கவியாய்ச் சொல்லும் தோழியே! உங்கள் திறம் வியந்து நன்றியும் கூறுகின்றேன்!

  ReplyDelete
 21. மிக எளிமையான, ஆனால் அருமையான தத்துவத்தை அழகாகச் சொல்லியிருக்கிங்க!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனீ!

   Delete
 22. உணர்ந்திடு மானுடமே!
  நன்று சொன்னீர்
  மானுடம் உணரட்டும்
  மானுடம் தளைக்கட்டும்

  ReplyDelete
 23. படங்களும் கவிதையும் அருமை கிரேஸ்..அடுத்த வரை அழிக்காமல் வாழ்வதை மனிதன் இயற்கையிடம் தான் கற்க வேண்டும்..

  ReplyDelete
 24. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 25. @தியானா: ஆமாம், நன்றி தியானா!

  ReplyDelete

 26. இந்த பதிவை பசுமை விடியல் FBயில் பகிர அனுமதி வேண்டும்,, டீல்னா சுட்டுக்கிறேன்

  ReplyDelete
 27. @சூர்ய ப்ரகாஷ்: வருகைக்கு நன்றி! பகிர்ந்துக்கலாமே..
  பகிர்ந்தபின் எனக்கும் தெரியப்படுத்துங்கள், பார்க்கிறேன். நன்றி!

  ReplyDelete
 28. நன்றி ,பசுமை விடியல் FBயில் பகிர்ந்தாச்சு :)

  ReplyDelete
 29. @சூர்ய பிரகாஷ்: மகிழ்ச்சி, நன்றி! :)

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...