வளைந்தாலும் நெளிந்தாலும் பயணம் தொடர்வேன்


பாதை முடிந்ததோ
பயணம் முடிந்ததோ
வழி இல்லையோ
வாழ்வு அவ்வளவுதானோ
வழி தெரியவில்லையே
போகுமிடம் தெரியவில்லையே 

இவ்வாறெல்லாம்
கலங்கி நின்றால்
வழி தெரியுமா
விடை கிடைக்குமா
பயணம் இனிக்குமா
வாழ்வு செழிக்குமா

வளைந்தாலும் நெளிந்தாலும்
இருண்டாலும் ஒளிர்ந்தாலும்
பட்டுக் கம்பளமோ
கரடு முரடோ
எதுவானாலும் பயணம் தொடர்வேன்
என்பவர்க்கே
பாதை விரியும்
வழியும் தெரியும்
வாழ்க்கை ஒளிரும்

கண்கள் காணாவிட்டாலும்
மனதில் நம்பிக்கைகொண்டு
தொடர்பவர்க்கே
பாதை வசம்
வாழ்வும் சுகம்


20 கருத்துகள்:

  1. ***வளைந்தாலும் நெளிந்தாலும்
    இருண்டாலும் ஒளிர்ந்தாலும்
    பட்டுக் கம்பளமோ
    கரடு முரடோ
    எதுவானாலும் பயணம் தொடர்வேன்
    என்பவர்க்கே
    பாதை விரியும்
    வழியும் தெரியும்
    வாழ்க்கை ஒளிரும்***

    True. When one door closes, another door will open somewhere else. If one worries about the closed door and not looking for open door, she/he might not be able to find the "newly opened door"! The fact is our failures teach better lessons than successes. Life is all about learning, so we just have to move on! :)

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கை வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சிறந்த சிந்தனைக் கவி படைத்தீர்கள் தோழி!
    நெஞ்சமெல்லாம் நிறைக்கின்றது. வாழ்த்துக்கள்!

    பாதைகள் தொடரும்
    வேதைகள் இடரும்
    தீததைக் கடந்திட
    மேதைகள் தாமே.

    நீர்இதை கூறினீர் நல் கவியாலே
    பாரினில் பாவலராய் பரிமளித்தே யார்
    உணர மறுப்பர் உண்மையிதை அல்லால்
    தீதுணர தருமே துயர்!

    பதிலளிநீக்கு
  4. உண்மை. உண்மை. மிகச் சரியாக சொன்னீங்க கிரேஸ். அழகான கவிதை :)

    பதிலளிநீக்கு
  5. நிதர்சனமான உண்மை தோழி. அழகான கவிதை.வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  6. பாதை விரியும்
    வழியும் தெரியும்
    வாழ்க்கை ஒளிரும்// ஆம் ஆள்கையும் ஒளிரும்

    பதிலளிநீக்கு
  7. நம்பிக்கை ஒளியேந்தி
    பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  8. உண்மையை உணர்த்தும், நம்பிக்கைத் தரும் கவிதை கிரேஸ்..வாழ்வு சுகிக்க மனதார வாழ்த்துகிறேன் தோழி!!

    பதிலளிநீக்கு
  9. @வருண்: ஆமாம் அழகாக விளக்கியிருக்கிறீர்கள், வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  10. @திண்டுக்கல் தனபாலன்: உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிபல.

    பதிலளிநீக்கு
  11. @இளமதி: நன்றி தோழி, அருமைக் கவியாலே கருத்துப் பதிந்து ஊக்குவிக்கும் உங்கள் திறம் கண்டு வியக்கிறேன். //உணர மறுப்பர் உண்மையிதை அல்லால்
    தீதுணர தருமே துயர்!// உண்மை, அருமை. நன்றி தோழி :)

    பதிலளிநீக்கு
  12. @தமிழ்முகில்: கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
  13. @கவியாழி: ஆமாம், பாதை ஒளிர்ந்தால் ஆளுமையும் ஒளிரும், உண்மை உரைத்தீர்கள்! நன்றி பல!

    பதிலளிநீக்கு
  14. @கரந்தை ஜெயக்குமார்: வருகைக்கும் வாழ்த்தும் கருத்துரைக்கும் நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. @தியானா: வாழ்த்துக்கு மிகவும் நன்றி, உன் போல தோழி இருக்க வாழ்வு சுகிக்கவே செய்யும்..நன்றி தோழி! :)

    பதிலளிநீக்கு
  16. தன்னம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் அருமை !
    வாழ்த்துக்கள் சகோதரரே .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...