Thursday, January 31, 2013

எண் எழுத்து இகழேல்

பதுமன் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிய வாளியில் முகர்ந்த தண்ணீரை அருகிருந்த குடங்களில்  ஊற்றிக் கொண்டிருந்தான். குடத்திற்கு இரண்டு ரூபாய் என்று ஊர் மக்கள் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு ஊதியமாய் அவனுக்குக் கொடுப்பார்கள். இப்படி கடினமாகத் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது அவனுக்கு. பெற்றோர் படிக்கச் சொன்னபொழுது கேட்காமல் விளையாடிக் கொண்டே இருந்துவிட்டான். இப்பொழுது இந்த மாதிரி சிறு சிறு கூலி வேலைகள் செய்து வாழ்க்கை ஒட்டிக் கொண்டிருந்தான்.

பதுமனை நம்பி ஒரு மனைவி, ஒரு மகன். மகன் இளவரசு இரண்டாவது படித்துக் கொண்டிருந்தான். அன்று அவன் தண்ணீர் எடுக்கச் சென்ற பொழுது இளவரசுவும் பள்ளி விடுமுறை என்பதால் உடன் சென்றான். தந்தை நீர் நிறைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ஒரு ஆள் 'இந்தா, 11 ரூபாய்" என்று கொடுத்ததைக் கேட்டான். உடனே இளவரசு, "குடத்திற்கு இரண்டு ரூபாயாக ஏழு குடத்திற்கு மொத்தம் 14 ரூபாய், ஐயா" என்று சொன்னான். அந்த ஆளும் சினத்துடன் இன்னும் மூன்று ரூபாய் கொடுத்தான். இது போலவே அன்று பலரிடம் நிகழ்ந்ததால் திகைத்தான் பதுமன். தனக்கு எண்ணும் கணக்கும் தெரியாததால் மக்கள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்து வருந்தினான்.

மகனைக் கட்டிக் கொண்ட பதுமன் "எனக்கும் உனக்குத் தெரிந்த  எழுத்தையும் எண்ணையும் சொல்லிக் கொடுப்பா" என்று  சொன்னான். இதற்கு தான் "எண் எழுத்து இகழேல்" என்று அவ்வை ஆத்திச்சூடியில் சொன்னார் போலும்.

அதனால் குழந்தைகளே, எண்ணையும் எழுத்தையும் தேவையில்லை என்று இகழாமல் நன்றாகப் படியுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்!


12 comments:

  1. சிம்பிள் & ஸ்வீட்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசி கோபால் அவர்களே!

      Delete
  2. Replies
    1. நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

      Delete
  3. நடையில் எளிமையாக இருந்தாலும் கருத்தில் வலிமையாக அமைக்க பெற்ற கதை. நல்லது கிரேஸ்

    ReplyDelete

  4. "எண் எழுத்து இகழேல்"

    அருமையான வலைச்சர
    அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே

      Delete
  5. மிகவும் நன்றாக உள்ளதம்மா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் எடுத்துப் படித்துக் கருத்துரை இட்டதற்கு உளமார்ந்த நன்றியம்மா.

      Delete
  6. தாமதமாகவே இந்த வகையைப் பார்க்கிறேன் பா.
    முதலில் “ஆத்திச்சூடி“ என்பதில் ச் கிடையாது. தளத்தின் லேபிளிலிருந்து ச் ஒற்றெழுத்தை முதலில் எடுத்துவிடு..பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துக் கருத்திடுகிறேன்..தொடர்ந்து எழுதுடா.

    ReplyDelete
    Replies
    1. எடுத்துவிட்டேன் அண்ணா..நன்றி.

      சரியண்ணா, மனம் நிறைந்த நன்றி

      Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...