அவசர வேகம் தேவையா?

சில நாள் பயணமாக தாய்நாடு சென்று திரும்பியிருக்கிறேன். பல மாற்றங்கள் பார்த்தாலும் என் மனதில் பிசையும் ஒரு விஷயம் உண்டு. எங்கு பார்த்தாலும் அவசரம். சாலையில் பெருகியிருக்கும் வாகனங்கள். ஆனால் நிதானம் இல்லை. அனைவருக்கும் முதலில் செல்ல வேண்டும். மற்ற அனைவரும் வெட்டியாக செல்வதுபோலவும் தனக்கே முக்கியமான வேலை இருப்பது போலவும் ஒரு அவசரம். நூலிழையில் அடிபடாமலோ உயிர்தப்பியோ சென்றவர்கள் பலர். முன் சென்ற வண்டியில் லேசாக இடித்து நிலை தடுமாறினார் மிதிவண்டியில் சென்ற ஒரு பெரியவர். என் இதயம் பட படவென்று தாளம் போட்டது. நல்ல வேலையாக அவரும் சமாளித்துச் சென்று விட்டார். இடித்த வண்டியும் எதுவும் நடக்காதது போல் சென்று விட்டது. இப்படி பல சம்பவங்கள்!
சிகப்பு சிக்னலில் குறுக்கே வரும் வண்டிகள் அருகில் இல்லை என்று பார்த்து விட்டு ஒரு கும்பலே வண்டி ஓட்டிச் செல்கிறது. கார், ஆட்டோ, இரண்டு சக்கர வாகனங்கள் என்று அனைவரும்! எதற்கு இந்த அவசரம் என்று எனக்குப் புரியவில்லை. சாலை விதிமுறைகளும் யாருக்காகவோ என்று இருக்கிறது. மக்கள் தொகை அதிகம் என்பதால் உயிர் மலிவாகி விட்டதா என்று வருத்தமாக இருக்கிறது. அதிகாரிகள் கவனிக்க வேண்டுமா இல்லை மக்கள் உணர வேண்டுமா? தெரியவில்லை..கடவுளே! என் நாட்டையும் மக்களையும் காப்பாற்று! 

10 கருத்துகள்:

 1. red signala irunthu green signal marathukku munnadi varum 3,2,1 count down mudiyara varaikkum kuda kaathirukka mudiyatha avasaram...

  பதிலளிநீக்கு
 2. கடவுளுக்கு இதுதான் வேலையா? மக்களுக்கு மூளைன்னு ஒண்ணக் கொடுத்திருக்கறதை பயன்படுத்த வேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி திரு பழனி.கந்தசாமி! மக்கள் தவறும்பொழுது கடவுளைத் தானே அழைக்க வேண்டியுள்ளது...

   நீக்கு
 3. எந்த ஊர் என்று சொல்லவில்லையே? எல்லா ஊரும் இப்படித்தான் அவசரத்தில் பயணிக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 4. நான் இங்கு குறிப்பிட்டிருப்பது மதுரை கவியாழி கண்ணதாசன் அவர்களே. எல்லா ஊர்களிலும் இந்த நிலைமை தான் என்று நினைக்கிறேன்.வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. மக்களாகிய நமக்கும் அந்த எண்ணம் இருந்தாலொழிய எந்த ஒரு ஒழுங்குமுறையும் சட்டத்தால் கட்டுப்படுத்த இயலாது.

  சட்டதிட்டங்களை விட அதி உள்ள ஓட்டைகளின் எண்ணிக்கையும் நமது பொறுப்பற்றதனமும் மிக அதிகம்.
  மாற்றம் மக்களாகிய நம்மிடமிருந்து தொடங்காவிட்டால் எதனாலும் பலன் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், மக்கள் உணர்ந்து செயல்பட்டால் அன்றி மாற்றம் வருவது கடினம்தான். நீங்கள் சொல்வது உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராபர்ட்.

   நீக்கு
 6. சிக்னல் சும்மா... அதை யாரும் மதிப்பதும் கிடையாது....
  சிக்னலும் முறையாக செயல்படுத்தப்படாது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...இதை திருச்சியிலும் பார்த்துவிட்டேன்...பெங்களூருவிலும் பார்க்கிறேன்..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ!

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...