திருமலை நாயக்கர் இன்று மஹாலுக்கு வந்தால்...

திருமலை நாயக்கர் இன்று வந்து மகாலைப் பார்க்க நேர்ந்தால் என்று மனதில் தோன்றிய கற்பனை உங்களுக்காக ...

நான்கு நூறு ஆண்டுகள் ஆகப்போகிறதே  அரண்மனையைக் கட்டி, பார்த்து வரலாம் என்று வந்தேன்..பாதிக்கு மேல் காணவில்லை. இருப்பதைப் பார்த்தால் மனது வருந்துகிறது..அழகாகத்  தூண்கள் அமைத்துக் கட்டினேன்..இப்பொழுது தூணுக்கு ஒரு 'காதல்' ஜோடி !
தூண்கள், சுவர் எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறார்கள்..இதயமும் அதைத் துளைக்கும் அம்பும் பெயர்களும் - எங்கு பார்த்தாலும்! எதற்கு வரைந்தார்களோ, ஆனால் என் இதயத்தை பல அம்புகள் துளைத்தது போல இருக்கிறது!


ஆஹா! எவ்வளவு புறாக்கள்! ஆனால் அதன் கழிவுகளைச்  சுத்தம் செய்தால் நன்றாய் இருக்குமோ! அங்கு இருவர் தூணில் என்ன சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்? ஒரு  பெண் அவர்களிடம் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே! ஆனாலும் நிறுத்தாமல் கிறுக்குகிறார்கள். இவர்கள் சரித்திரம் பொறிப்பதர்க்குத்தான் தூண்கள் வைத்தேன் என்று நினைக்கிறார்கள் போலும். வைத்தேன் என்று எதற்கு நினைக்கிறார்கள்..தூண்கள் அவர்களுக்காய் இருக்கிறது, அவ்வளவுதான்! புரியாதவர்கள்..கல்வெட்டுகளே காணாமல், மதிக்கப்படாமல் போகின்றன..
அங்கு என்ன வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்? ஓ, சாப்பாடு..உல்லாசச் சாப்பாடு. அலுவலகத்தில் சொல்லப்போகிறேன் என்று ஒரு பெண் செல்கிறாளே..பார்ப்போம். அட, அங்கே ஒருவரையும் காணோமே?..

வருங்கால சந்ததி சரித்திரம் அறியும், போற்றும் என்று நினைத்தேனே..என் சக அரசர்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்..சரி இருப்பது வரை மகிழ்ச்சி! கிளம்புகிறேன்..யாராவது சம்பந்தப்பட்டவர்களிடம்  சொல்லுங்களேன்..கொஞ்சம் பராமரித்தால் சரித்திரம் விளங்கும் என்று...

6 கருத்துகள்:

 1. nice brother...yes our next generation will not know about our tamil history.

  our old kings(chera, chola , pandiya)

  பதிலளிநீக்கு
 2. கசப்பான உண்மையை அழகாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கீங்க கிரேஸ். நம் வரலாறு குறித்த அறியாமையே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீனி, வருத்தமாக இருக்கிறது..எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது..தெரியவில்லை..

   நீக்கு
 3. அங்கு சென்று நாளாகி விட்டது... இப்படி ஆகி விட்டதா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் திரு.திண்டுக்கல் தனபாலன்! இருப்பதைப் பாதுகாத்தால் நல்லது..வருத்தம் தான்..

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பண்டிகைகள் சிறக்கப் போதிய பணம் வேண்டும்தானே?

நிறையட்டும்!தீபாவளி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! வாழ்வில் இன்பமும் ஒளியும் அனைத்து நலமும் நிறைந்து வாழ வாழ்த்...