அட்லாண்டாவில் உள்ள பெர்ன்பன்க் அருங்காட்சியகம் (Fernbank Museum of Natural History) சென்றபொழுது அங்கு இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள Brain - The Inside story என்ற மூளையைப் பற்றிய காட்சியகம் காண வாய்ப்பு கிடைத்தது. மனித மூளை எப்படி இயங்குகிறது, நம் ஒவ்வொரு செயலும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, மூளையின் பரிணாம வளர்ச்சி என்று அருமையாக காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. மூன்று மணி நேரம் அங்கேயே ஒவ்வொன்றையும் ஆய்ந்து அறிந்து மகிழ்ந்து வந்தோம். நானும் என் கணவரும், ஏன் என் மூத்தவன் பார்த்தது கூட ஆச்சரியமில்லை, என் இளையவன் ஒவ்வொன்றையும் வாசித்து, செய்து பார்க்கும் படி இருந்தவற்றைச் செய்துபார்த்து, கேள்விகள் கேட்டு வியப்பில் ஆழ்த்திவிட்டான். நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை அப்படியே இங்கு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
வாருங்கள் மூளைக்குள் செல்வோம்..உங்க உங்க மூளைக்குள் தான் :)