வாராதோ முற்று

உலகில் கேட்கும் புற்றுநோய் செய்திகள் மனதை உலுக்க, ஆட்கொல்லி நோய்க்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கத்துடன்  புற்றுநோயால் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்.


வருவதும் போவதும் வாழ்வாம் எனினும் 
கருவியாய்ப் புற்றேநீ காலன்  துணையேன்
வயதுபாரா நோயுனக்கு வாராதோ முற்று 
இயல்வாழ்வு மானிடர்க்கு விட்டு

துள்ளும் வயதிலும் தள்ளும் வயதிலும்
அள்ளி மகிழ்வை அருளின்றிக் கொன்றபின் 
சுற்றத்தின் வாழ்வும் சிதறக் கலைத்திடும்
புற்றிற்கு வாராதோ முற்று


45 கருத்துகள்:

  1. “வினைமுற்றும் முன்னே பெயரெச்ச மாக்கும்
    வினைத்தொகை யாக விளங்கும் - சினைபற்றிக்
    குற்றுயிர்க்(கு) ஆயுதமாய் குன்றா தளபெடையாம்
    புற்றேநீ போவதெப் போ?”

    வெண்பாக்கள் அருமை சகோ.

    தொடருங்கள்.

    தொடர்கிறேன்.


    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கணக் குறிப்பைச் சொல்லி அது புற்றிற்குப் பொருந்துவதாகவும் அமைத்த உங்கள் பா கண்டு அசந்து போனேன் அண்ணா. எனக்குப் புரியாமல் கேட்ட ஐயத்திற்குத் தெளிவாக விளக்கிப் புரியவைத்ததற்கு நன்றி அண்ணா.
      வெண்பாவில் இருந்த தவறும் சரி செய்திருக்கிறேன். மனமார்ந்த நன்றி அண்ணா.

      நீக்கு
  2. ஜேன் அயர் நாவலை நடத்திய பொழுது எப்படி என்புருக்கி நோய் உலக மக்கள்தொகையை குறைத்து என்பதை உணர்திருகிறேன் ..
    இன்று அந்த நோய் ஒரு பழங்கதை

    அதே போல் ஒரு நாள் வரலாம் புதருக்கும் முற்று ..
    மனிதர்கள் அதுவரை பூமியை பிழைக்க விட்டிருந்தால் சாத்தியமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா , ஆனால் புற்று புதிது புதிதாய் உருவெடுக்கிறதே.
      பூமியை பிழைக்க விட்டிருந்தால் - இதுவும் சரி தான் . நன்றி அண்ணா

      நீக்கு
  3. முக்கியமான விசயத்தை மறந்துட்டேன்
    தம +

    பதிலளிநீக்கு
  4. என் நண்பர்கள் சிலர் இந்நோயை எதிர்கொண்டு (cancer survivors) தற்போது நன்றாக இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டபோது சற்று பாரமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நண்பர்கள் நன்றாக இருப்பதறிந்து மகிழ்கிறேன் ஐயா.ஆமாம் , இது பற்றிக் கேட்கும் பொழுதெல்லாம் மனம் கனக்கும்.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  5. சில வரிகள் என்றாலும் போதுமானது. அருமை.

    பதிலளிநீக்கு
  6. வேதனையின் எச்சங்கள், அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வேதனையைக் கொண்டு வரும்
    விழிநீரை நின்றுதரும் பழிதீர்க்கும்
    புற்றுக்கும் புற்று வரும் நிச்சயமாய்
    முற்று வரும் முனிந்து!..

    பதிலளிநீக்கு
  8. தமிழ் மணம் இப்பொழுதுதான் ஓகே ஆனது.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ !

    வணக்கம் சகோ !

    புற்றுநோய் போக்கப் புனைந்தகவி நெஞ்சத்தைப்
    பற்றிப் பிழிகிறதே ! பாருலகில் - முற்றாக
    அற்றுத்தான் போகாதோ ஆயுளுந்தான் நீளாதோ
    இற்றரைக்கேன் இந்த இழப்பு !

    கற்காலம் இல்லை கனிந்துவரும் விஞ்ஞானம்
    பொற்காலம் ஆக்கிடுமே போயகலப் - புற்றும்தான்
    வெற்றிக் களிப்போடு வீறுநடை போட்டிடலாம்
    பற்றோடு வாழ்வைப் பெருக்கு !

    அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    தளைதட்டாமல் இன்னிசை வெண்பா அல்லது நேரிசை வெண்பாவில் எழுதி இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் சகோ வாழ்த்துக்கள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவில் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.
      ஆமாம், தளை தட்டியது பார்த்தேன் சகோ, வேதனையில் யோசிக்க மனமின்றி விட்டுவிட்டேன், மன்னிக்கவும்.
      உங்கள் ஆலோசனை மனதில் வைக்கிறேன், நன்றி சகோ

      நீக்கு

  10. பற்றிடும் புற்றழிக்க பாரிலொரு பொழுதிலையோ
    பெற்றவரும் மற்றவரும் பதறியே நெஞ்சுவேக
    குற்றுயிராய்க் கொல்லுமிவ் நோய்தீர்ந்து துகளாகி
    முற்றும் விரைவினில் பார் !

    தேனு அருமைம்மா ! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை தோழி! ஆமாம், விரைவில் நோய்க்கு முடிவு வரவேண்டும்.
      அன்பான கருத்திற்கு மிக்க நன்றி இனியா

      நீக்கு
  11. //நோயுனக்கு வாராதோ முற்று
    இயல்வாழ்வு மானிடர்க்கு விட்டு//

    யோசிக்க வைக்கும் ஆக்கம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்“
    சகோதரி
    கவியைில் சொல் விளையாடுகிறது அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. எத்தனை எத்தனை பேரை பலி கொண்டுவிட்டாலும் இன்னமும் இவ்வரக்கனின் பசி தீர்ந்தபாடில்லை......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வருத்தும் உண்மை. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

      நீக்கு
  14. எனது சகோதரியின் நினைவுடன் கலங்கினேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சகோதரியையும் இதை எழுதும்பொழுது நினைத்தேன் அண்ணா..

      நீக்கு
  15. கவிதை அருமையாக‌ இருக்கும் அதே சமயம் மனதையும் கனக்க வைக்கிறது கிரேஸ்!
    சென்ற வருடம் தான் எந்த‌ வித முன் அறிவிப்புமில்லாது என் நெருங்கிய உறவினர் புற்று நோயால் மரணமடைந்தார். இன்னும் அந்த துக்கம் ஆறாத புண்ணாய் இருந்து கொன்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தமாய் இருக்கிறது, என் இரங்கல்கள் அம்மா.
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  16. மிகவும் கஷ்டமாக இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
  17. முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உண்டு! அருமை!

    பதிலளிநீக்கு
  18. செம்ம கிரேஸ் ... அருமையான அழமான வரிகள் :)

    பதிலளிநீக்கு
  19. புற்றிற்கு வராதோ முற்று ....

    அழகான கருத்தாழம் நிறைந்த வரிகள்

    பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  20. புற்றிற்கு ஒரு முற்று ?!! அருமையான கருத்துடன் துளிர்ந்திருக்கும் கவிதை ஆதங்கத்துடன் முடிவது......எல்லோர் மனதையும் பிரதிபலிக்கின்றது சகோதரி! சொல்லிட வார்த்தைகள் இல்லை.....

    பதிலளிநீக்கு
  21. புற்றிற்கு வாராதோ முற்று

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...