உழவர்த் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவர்த் திருநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உழவாலன்றோ...


உழவின்றி உயிருண்டோ சிந்திப்பீரே
உழவரைப் போற்றவே நினைத்திடுவீரே!

எத்தொழிலும் சிறப்பாம் உலகத்தாரே
இத்தொழில் முதன்மையாம் உணர்ந்திடுவீரே!

இலைதளை கொண்டே வீடுசெய்யலாம் - உழவு
இல்லையென்றால் எதை உண்பீர் தெளிந்திடுவீரே!

அறுவடைத் திருநாளாம் பொங்கல் இன்று
அறுசுவை உணவோடு மகிழ்ந்து கொண்டாடுவீர்

உழவும் உலகமும் தழைக்கவே போற்றுவோம்
உலகம் சுற்றும் மஞ்சள்  கதிரவனை!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.