நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்பால் பல ஊறுக பகடு பல சிறக்க
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
பசிஇல் ஆகுக பிணிகேன் நீங்குக
வேந்து பகை தணிக ஆண்டுபல நந்துக
அறநனி சிறக்க அல்லது கெடுக
அரசுமுறை செய்க களவுஇல் ஆகுக
நன்றுபெரிது சிறக்க தீதுஇல் ஆகுக
மாரி வாய்க்க வளநனி சிறக்க
ஐங்குறுநூறு பாடல்களில் இருந்து , மேலும் அறிய கீழுள்ள இணைப்பைப் பார்க்கவும்.
பொருள்:
நெல் நன்றாக விளையட்டும், பொன்(வளம்) பெருகிச் சிறக்கட்டும்.
வயல்கள் நன்றாக விளையட்டும், இரவலர் வந்து பயன் பெறட்டும்.
பால் வளம் பெருகட்டும், பகடு(எருது) பலவாகப் பெருகட்டும்.
பகைவர் புல் உண்ணட்டும் (தோற்றுப்போகட்டும்), பார்ப்பார் வேதம் ஓதட்டும். பசி இல்லாமல் ஆகட்டும், பிணியும் நோயும் நீங்கட்டும்.
வேந்தனுடைய பகை தணியட்டும் (அழியட்டும்), பல ஆண்டுகள் செழிக்கட்டும்.
அறம் நன்றாகச் சிறக்கட்டும், அல்லது (தீயது) கெடட்டும் (அழியட்டும்).
அரசு முறையாக ஆட்சி செய்யட்டும், களவு இல்லாமல் ஆகட்டும்.
நல்லதுப் பெரிதாய்ச் சிறக்கட்டும், தீது இல்லாமல் ஆகட்டும்.
மாரி (மழை) வாய்க்கட்டும், வளம் நன்றாகச் சிறக்கட்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்!
- கிரேஸ் பிரதிபா
மீள் பதிவு, இணைப்பு:
https://thaenmaduratamil.blogspot.com/2013/04/nerpala-pozhiga.html?m=1
https://thaenmaduratamil.blogspot.com/2013/04/nerpala-pozhiga.html?m=1
ஐங்குறுநூறு பாடலும் விளக்கமும் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், தங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றி சகோ. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
நீக்கு