தமிழ் இனி - முத்தமிழ் விழா கவிதைப் போட்டி

 


தமிழ் இனி

தொண்டைத் தொன்மொழி தமிழ் பண்டைச் செம்மொழி தமிழ்

அண்மை மீநுண் நுட்பத்திலும் திண்மை குன்றாநம் தமிழ்

எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் சிந்தை மலர்த்தும் தமிழ்

உண்மை ஒன்றே என்றென்றும் ஒண்தமிழ் இனியும் வளர்தமிழ்


ஆதி இனிமை தமிழ் கீழடி ஆதினியும் நிறுவுகிறாள்

மீதிக் காலமா மாற்றிவிடும்? மடமைக் கனவு என்கிறாள்

தேதிக் கட்டுகள் தமிழ்க்கில்லை தாழ்தல் தூர்தல் பொய்யென்கிறாள்

வாதி யாரும் முன்வந்தால் ஏது வெற்றியென நகைக்கிறாள்

 

தமிழ்மகள் கொஞ்சுதமிழ் சுவைத்தேன் உலாவும் குழப்பத்தை உரைத்தேன்

தமிழ்இனி என்னவாகும் தமிழ்இனி எங்குசெல்லும் புலம்புகிறார் என்றேன்

தமிழ்இனி தளரும் தமிழ்இனி வளரும் வாதிக்கிறார் என்றேன்

தமிழ்நதிப் பருகி வளர்ந்தவள் செம்மாந்து விளக்கிட்டாள் மலைத்தேன்

 

மேல்பரப்பில் நீயும் கேட்போரும் மண்ணடுக்கில் முன்னதாய் நானும்

மேல்மேலாய் அடுக்குகள் பலவும் மண்ணுலகில் மிளிரவே வந்துவிடும்

ஆல்விழுதாய் ஊழிகாலம் அடுக்கும் அருந்தமிழின் அறமெங்கும் கோலோச்சும்

சால்புநிறைச் செழுந்தமிழ் இனியும் சிறந்திங்குத் தழைக்கவே தழைக்கும்

- கிரேஸ் பிரதிபா

செப்டம்பர் 15, 2023

2 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம்.

    நலம்தானே.

    எனது நண்பரின் பதிப்பகமான 'கேலக்ஸி'யின் இணையதளத்தில் புதிய தொடர்கள் / கட்டுரைகள் / கதைகள் / நாவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    நட்பின் அடிப்படையில் நான் இணையதள அட்மினில் ஒருவனாய், பதிவுகள் போடுபவனாய் நான் இணைந்திருக்கிறேன்.

    தங்களுக்கு விருப்பம் இருப்பின் ஏதாவதொரு தலைப்பில் எழுத இயலுமா?

    தற்போது வளர்ந்து வரும் இணையதளம் என்பதால் சன்மானம் எல்லாம் கொடுக்க இயலாது.

    உங்களது படைப்பை புத்தகமாகக் கொண்டு வர விரும்பினால் கேலக்ஸி பதிப்பக வழி எந்தச் செலவுமில்லாமல் புத்தகமாக்கலாம்.

    அதேபோல் தாங்கள் வேறு எதுவும் புத்தகம் கொண்டு வர விரும்பினால் கேலக்ஸி பதிப்பகக் குழுவுக்கு அனுப்பி, அவர்கள் வாசித்துப் பிடித்திருந்தாலும் பணம் பெறாமல் புத்தகம் ஆக்கித் தருவார்கள்.

    எழுத விருப்பம் இருப்பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

    kumar006@gmail.com

    நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...