காவியம் எழுதும் காதலை


கதைக்கத்தான் அழைத்தாள்
கதையினூடே எழுதென்றாள்

எதை என்றேன்
காதலை என்றாள்
ஏன் இப்பொழுது என்றேன்
'தொண்ணூற்று ஆறு' திரைப்படம்
என்னே காதல் என்றாள்
சிரித்தேன்
நானென்ன எழுத
ஆதிமுதல் காவியம் எழுதும்
காதலை





8 கருத்துகள்:

  1. காவியமாய்ப் படைப்பதையும் விடச் சிறப்பு பார்க்கும் அனைவரையும் காவியங்கள் மேலும் எழுதத் தூண்டுவது! 96 வெற்றி பெற்றுவிட்டது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஸ்ரீராம். நானும்
      பார்க்கவேண்டும் என்ற ஆவல் தோன்றி விட்டது

      நீக்கு
  2. அருமை
    96 பார்க்கவேண்டும்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்மா!
    என் மகளின் விருப்பத்திற்காகத்தான் என் மனைவி, மகளுடன் போனோம்!
    படம் தொடங்கும் முன், என் மகள் கேட்டாள், “அப்பா, நீங்க பள்ளிப் பருவத்தில லவ் பண்ணியிருக்கிங்களா?” நான் கேட்டேன், “டேய்... உன் அம்மாவை வச்சிக்கிட்டு கேட்டா என்னப்பா சொல்ல?” “சரி சரி.. புரிஞ்சிருச்சு” என்று சிரித்தாள். நான் சொன்னேன் - “இல்லை” என்று சொல்பவர்களில் பாதிப்பேர் கல்யாணமானவர்களாக இருப்பார்கள். மீதிப்பேர் மனைவியை மதிக்கிறோம் என்பதற்காக உண்மையை மறைப்பவர்களாக இருப்பார்கள்” என் மகள் விழித்தாள், என் மனைவி முறைத்தாள்! நாட்டுல உண்மையச் சொல்லக்கூடாதுல்ல..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா! நானும் விழிக்கிறேன் ஹாஹா.
      நான் இன்னும் படம் பார்க்கவில்லை அண்ணா. எல்லோரும் எழுதித் தள்ளுகிறார்கள். 96இல் சமத்தாக இரண்டாமாண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாராவது காதல் என்று சொன்னாலே எதிர்பக்கம் ஓடும் ஆள், இன்று எத்தனைக் காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது அண்ணா. அட, காதல் தான் வாழ்க்கையே என்று இன்று தோன்றுகிறது :-)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...