படம்: நன்றி இணையம் |
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா! |
கவிஞர் திரு.தங்கம் மூர்த்தி அண்ணா தலைவராகவும் கவிஞர்.திரு.முத்துநிலவன் அண்ணா துணைத்தலைவராகவும் என் இனிய சகோதரி கவிஞர் மு.கீதா துணைச் செயலராகவும் பணியாற்றுகிறார்கள்.
நண்பர்களுடன் இணைந்து பணியாற்றவும் நன்கொடை வழங்கி உதவவும் வேண்டுகிறேன்.
திரு.முத்துநிலவன் அண்ணாவின் பதிவிலிருந்து,
"
நமது
“வீதி”
ஒருங்கிணைப்பாளர்
திருமிகு
மு.கீதாவைத் தொடர்பு கொண்டு
உதவியைத்
தொடங்கலாம்
எனது எண்ணிலும் கேட்கலாம்
எனது எண் - 94431 93293
தங்கை மு.கீதாவின் எண் - 96592 47363
"
அட! நாணயவியல் கண்காட்சி! |
சரி, இந்தாருங்கள் புத்தகத் திருவிழாவிற்கு நுழைவுச் சீட்டு! நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை என்றைக்கு வேண்டுமானாலும், ஏன், தினமும்கூட செல்லலாம். உங்கள் பணிக்குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளுங்கள்! நாட்காட்டியில் வட்டமிட்டுக் கொள்ளுங்கள்!
படம்: நன்றி இணையம் |
ஒரே ஒரு நிபந்தனை! சென்று மகிழ்ந்து புத்தகங்கள் வாங்கிக் களித்து வாசித்துத் திளைக்கலாம்.
ஆனால் யாரேனும் வாங்கிய புத்தகங்கள் என்று பட்டியலிட்டுப் பதிவிட்டால் அவ்வளவுதான்! சொல்லிட்டேன்! :) என்னால் வர முடியாதுல்ல?
அட, சும்மா கிண்டலுக்குச் சொன்னேன்.
படம்: நன்றி இணையம் |
சிறப்பு... உங்களின் பகிர்வு மிகச் சிறப்பு...
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குதங்களின் பகிர்வுகள் படங்களுடன் புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்துள்ளன.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குநீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் பதிவினை இப்போதுதான் படித்தேன். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி
நீக்குஐயா.
மிக்க நன்றி
அன்பினிய தங்கைக்கு, உனது “பாட்டன் காட்டைத் தேடி” நூலின் பிரதிகளை, புத்தக விழாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர், மற்றும் முக்கியமானவர்கள் (ஒரு 25பேருக்கு) கவிதையை ரசிக்கக் கூடியவர்களாகப் பார்த்துக் கொடுக்கலாமாம்மா?
பதிலளிநீக்குஅண்ணா, என்கிட்டக் கேக்கணுமா நீங்க? தாராளமாகக் கொடுங்கள், எனக்கு மகிழ்ச்சியே! எப்பொழுதும் ஊக்குவிக்கும் உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா.
நீக்கு