வான்தொடும் கற்காட்டில்

படம்: நன்றி இணையம்

கம்பளி மேல்சட்டையும்
கையுறை குல்லாவும்
கருத்தாய் அணிந்திருந்தும்
உறைந்து சில்லிட்டதென் இதயம்
பெருநகரச் சாலையோரம்
உடல்குறுக்கி உறங்கும் மனிதன்
வான்தொடும் கற்காட்டில்
வாழ்விடப் பஞ்சம்

17 கருத்துகள்:

  1. மனதைத் தொடும் கவிதை.

    தலைநகர் குளிரில் இப்படி பலர்....

    பதிலளிநீக்கு
  2. க்ரேஸ் மனம் என்னவோ செய்தது...அங்கேயே இப்படி என்றால் இங்கு கேட்கனுமா..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சாலையில் பலரை பதாகைகளுடன் பார்த்ததுண்டு. உணவு - எப்படியோ சமாளித்தாலும், அடிக்கும் குளிர்க் காற்றில் உறங்க எங்கு ஒதுங்குவார்களோ என்றெண்ணியதுண்டு.

    ஆல்பரெட்டாவில் ஒருவர் shopping cart ல் தனது உடைமைகளை வைத்துக் கொண்டு, பார்க்கையில் எல்லாம் நடந்து போய்க்கொண்டிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிக்காலத்தில் தங்குமிடங்கள் அதிகரித்தாலும் போதவில்லை என்பது மனம்பிசையும் உண்மை. டவுன்டவுனில் அதிகம்..

      நீக்கு
  4. பார்க்கும்போதெல்லாம் மனம் பிசையும் காட்சி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...