படம்:நன்றி இணையம் |
ஏழு அல்லது எட்டு வயதில்
இழுஇழு என்று இழுத்து
பின்னல் போட்டுவிடுவார் அம்மா
ஏனென்றால்
முன்னிருக்கும் நூலில்தான்
என் கவனமிருக்கும்
அப்படிப் படித்தது ஒருகதை
எட்டநின்றுக் கற்ற வித்தைக்கு
கட்டைவிரலைக் கேட்டாராம்
அந்தக் குரு!
கொடுத்தும் விட்டானாம் அம்மாணவன்!
எப்பொழுதோ படித்த கதை
தப்பாமல் தினம்வந்தது நினைவில்
கறிகாய் வெட்டுவது ஏது?
கருத்தாய் எழுதுவதும் ஏது?
நெற்றிவிழும் கற்றைமுடி
அதைக்கோதவே இடதுகை வேண்டும்
ஏகலைவா! எப்படியப்பாக் கொடுத்தாய் ?
பின் என்ன செய்தாயோ?
ஏசுவே நீரோவென்றால்
இருகையிலும் ஆணிவாங்கினீரே!
அப்பப்பா!
உம்வலது கையை இதுபோல்
முன் எப்போதேனும் தடவியது..?
நினைவில்லை!!
தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால்தான்
விரல் சொல்லும் விசயம், கொஞ்சம் இதையும் வாசியுங்களேன் இணைக்கும் இணையமாம்.
கைவலியினால் கணினியுடன் ஊடல் கொள்ளுமாறு ஆகிவிட்டது. இப்பொழுது சற்று முன்னேறி ஊடல் குறையத் துவங்கிவிட்டது. கருத்துப் பெட்டியிலும், முகநூல், வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சலிலும் அன்புடன் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு நெகிழ்வுடன் நன்றிகள்! 'அப்பப்பா வலதுகை' என்றாலும் 'அப்பப்பப்பப்பா அன்பு உள்ளங்கள்!!' என்று மகிழ்ந்தே இருக்கிறேன். :)
கை வலி குறைந்து, கணினிக்கு வந்தது கண்டு மகிழ்கின்றேன் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குஅடடே வாங்க சகோ நலமா ?
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களின் வீச்சு.
நன்றி சகோ.
நீக்குவருக. வருக..இருகை நீட்டி அழைக்கிறோம்..
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குவெகு நாட்களுக்குப் பின் - தங்களுடைய பதிவு மலர்ந்திருக்கின்றது..
பதிலளிநீக்குஅன்பின் நல்வாழ்த்துகள்..
நன்றி ஐயா
நீக்குanupava kavithai arumai.vaalthukal.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅந்த அளவுக்கா படுத்திவிட்டது? மீண்டு வந்ததில் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஆமாம் சரவணன் , கொடும்பாடு!!
நீக்குநன்றி
முழுவதும் குணமடைய வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குபிறகு
தொடர வாழ்த்துகள்...
நன்றி அண்ணா
நீக்கு
பதிலளிநீக்குகைவலி சரியாக உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லி உங்களை வரவேற்கிறேன்...என்னா வம்பு இழுக்கா ஆள் இல்லை என்பதால் ஹீஹீ
நன்றி சகோ, ஆமாம் இறைவனுக்குத்தான் நன்றி.
நீக்குஹாஹா
பதிலளிநீக்குஹலோ ஹலோ உங்கள் மீது உள்ள அக்க்றையால் கேட்கவில்லை எங்க அண்ணன் எவ்வள்வு கஷ்டப்படுவார் என்ற அக்கறையால்தான் விசாரித்தோம்
அவர் வேறு நான் வேறா? அபப்டியென்றால் எல்லாம் ஒரே அக்கறைதனே :)
நீக்குஇப்போ பரவாயில்லையாப்பா.. ..வெல்கம் :)
பதிலளிநீக்குதொடருங்கள் இங்கே சந்திப்போம்
இறைவன் அருளால் இப்போ பரவாயில்லை ஏஞ்சலின். நன்றி
நீக்குபூரண நலம் பெற்று ...வாருங்கள்...
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்..
நன்றி தோழி
நீக்குதோழி நானும் வந்து இருக்கிறேன் நீங்கள் சில நாட்கள் கழித்து நான் சில வருடங்கள் கழித்து உங்கள் கையில் வலியா பூரண நலம் பெற வேண்டுகிறேன் சிரமத்தை சொல்லும் சிரமத்திற்கு இடையான கவிதை அழகு
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி தோழி...வாங்க வாங்க :))
நீக்குபாராட்டிற்கும் வேண்டுதலுக்கும் நன்றி
கைவலி இப்போது எப்படியிருக்கிறது...
பதிலளிநீக்குவிரைவில் குணமடையட்டும்...
முழுவதும் குணமாகும் வரை அதிகம் வேலை கொடுக்காதீர்கள்..
பரவாயில்லை சகோ.. அதிகம் வேலை செய்தால் அதிகரிக்கிறது. இடைவெளி விட்டுவிட்டுச் செய்கிறேன்
நீக்குநன்றி சகோ.