மாறுவதும் மாறாததும்


எழுதமறுத்தப் பேனாவை
என்னவென்று கேட்டேன்

அரசும் ஆட்சியும்
மாறுவதுதான், கொஞ்சம்
ஊற்றிடு மாறாததை
என்றது;
அன்பே!
மருவுதல் அன்றி
மாறுவதும் மாறாததும்
நான் என்ன கண்டேன்!

13 கருத்துகள்:

  1. அட! அந்த அன்பும் மாற்றத்துக்கு உள்ளாகும் தருணங்களும் வருகிறதே!!!ஆனால் உண்மையான நேர்மையான அன்பு மாறாததுதான்!! அதுவும் மாறுவதும் மாறாததும் ஆகுதோ!!!!

    பதிலளிநீக்கு
  2. மாறாது and மாறாதது ..பேரன்பு மட்டுமே

    பதிலளிநீக்கு
  3. பாட்டன் காட்டைத் தேடி மின்னூல் வாசித்தேன்! நான் ரசித்ததை என் வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறேன். இரண்டு கவிதைகளின் தலைப்புகள் தவறாக உள்ளன. மனித நேயம், வருவது நலமாக இவையிரண்டையும் திருத்த வேண்டும். பாராட்டுகள் கிரேஸ்! மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றி அக்கா. தலைப்புகள் தவறாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. சரி செய்யச் சொல்கிறேன்.

      உங்கள் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அக்கா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...