அன்றும் இன்றும்

 
திரைப்படத்திற்காக ஒரு நாள்
படப்பாடல்களுக்காக மற்றொரு நாள்
கார்ட்டூன் ஒரு நாள்
தொலைகாட்சி பார்க்கக் காத்திருந்தோம் அன்று
உறவினர் மற்றும் நண்பர்களோ 
எந்நாளும் இருப்பர்
தேநீரும் பல வீட்டுப்பலகாரமும்
பேச்சும் சிரிப்பும் என்று
மகிழ்ந்திருந்தோம்

எப்பொழுதும் திரைப்படங்கள்
எப்பொழுதும் பாடல்கள்
எப்பொழுதும் செய்திகள்
(அப்படியென்றால் அது செய்தியா?
சரி.. அது வேறு கவிதைக்கு )
உறவினரையும் நண்பரையும்
காணக் காத்திருக்கிறோம்
கண் பூத்திருக்கிறோம் இன்று


14 கருத்துகள்:

 1. உறவினர்களையும்
  நண்பர்களையும் சந்திப்பது என்றுமே மகிழ்வுதான் சகோதரியாரே
  தம+1

  பதிலளிநீக்கு
 2. உண்மை....

  உறவுக்காகவே காத்திருக்கும் நிலை இன்று...

  நிதர்சன வரிகள்..

  பதிலளிநீக்கு
 3. உறவுக்காக ஏங்கும் நிலை இன்று...
  எல்லாமே இணையம் செய்த கோலம்.

  பதிலளிநீக்கு
 4. உண்மை சகோ/க்ரேஸ் இன்று உறவினரையும் நண்பர்களையும் காண யாரேனும் கல்யாணம் இல்லை வேறு என்று தகவல் வராதா என்று காத்திருக்கும் நிலை. சில சமயம் அதுவும் செல்ல முடியாத நிலை என்று...

  பதிலளிநீக்கு
 5. ஆமாம்பா கிரேஸ் ! ஸன்டேஸ்ல ஹோம்வொர்க்க்லாம் முடிச்சிட்டு ரெடியா டிவி முன்னாடி உக்காருவோம் ஒரே ஒரு நாள் படத்துக்கு அதில் இருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை :( எங்க ஊர்ல என் முகமே மறந்து போயிருக்கும் பலருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல். வெளியே சென்றாலும் ஒரே படத்தின் வசனம் தான் தெருவெங்கும் கேட்கும் :)
   ஹ்ம்ம் கஷ்டம் இல்லையா..எவ்ளோ தொலைத்து ஏங்குகிறோம்..
   நன்றிப்பா

   நீக்கு
 6. நெடுநாள் கழித்து இன்று பதிவினைக் கண்டேன்.
  உறவுகளிடமிருந்தும் நட்புகளிடமிருந்தும் அந்நியமாகிப் போய்க்கொண்டேயிருக்கின்றோம் என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...