எனது முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு

 எனது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவை எழுத என்னை அழைத்த தோழி தமிழ்முகிலுக்கு நன்றி.

ஒவ்வொரு பதிவும் சந்தோசம் தந்தாலும் முதல் பதிவின் சந்தோஷம் ஒரு துள்ளல் சேர்ந்தது. பதிவுலகில் என் பயணம் துவங்கியது 2008ல்.  அங்கும் இங்கும் கிடைத்த தாட்களில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். அவற்றை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் டைரியில் எழுத ஆரம்பித்தபொழுது கணவரின் உந்துதலில் வலைப்பூ ஆரம்பித்தேன். முதல் பதிவு இட்டவுடன் ஏதோ புதியதாக  ஆரம்பித்து விட்ட மகிழ்ச்சி. அந்த வலைத்தள முகவரியை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கிவிட்டேன். ஆறுமாதம் கழித்து அடுத்த பதிவு. இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு முதல் மகன் பின்னாடி ஓடிக்கொண்டிருந்த காலம் அது. பின்னர் ஒருவழியாக சீரானது. என் அனுபவங்கள், கவிதைகள், கதைகள், இனிய நினைவுகள்  என்று ஆங்கிலமும் தமிழும் என்று கலந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

தமிழுக்குத் தனியாக எழுதவேண்டும் என்ற ஆசையில் இந்த வலைப்பூவை ஆரம்பித்து முதல் பதிவு கடவுள் வாழ்த்தாக இறைவனே போற்றி என்று எழுதினேன்.  என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு பெருமை தெரியுமா? முதல் பதிவிற்கு முன்னால் தளத்திற்கு என்ன பெயர், எனக்கு ஒரு தமிழ் பெயரில் மின்னஞ்சல் என்று எல்லாம் யோசித்து தேர்வு செய்து நடத்தியும் விட்ட திருப்தி. எவரெஸ்ட் ஏறியது போல மகிழ்ந்தேன் என்று சொல்ல முடியாது...ஏனென்றால் அது எப்படி என்று எனக்கு தெரியாதுங்க. :) என் கையில் மருதாணி இட்டுக்கொண்டு அம்மா கையால சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மகிழ்ச்சி என்று சொல்லலாம். மகிழ்ச்சியில் தமிழ் காதல் ஊற்றெடுத்து இன் உயிர் தமிழ் அன்றோ எழுதினேன்.

முதல் பதிவின் மகிழ்ச்சி எனக்கு அறிமுகம் இல்லாத நண்பர்களின் கருத்துரைகள் பார்த்தபொழுது பன்மடங்கானது. இன்னும் நிறைய எழுத ஊக்குவித்தது. அத்தகைய மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்கும் காரணமான நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்! நான் எழுதுவது ஒருபுறம் இருக்க, பலர் எழுதும் அருமையான பதிவுகளை வாசிக்கவும் என் முதல் பதிவு வழிகாட்டியிருக்கிறது. ஆக, கரும்பு தின்று கூலியும் வாங்கிய மகிழ்ச்சி!

உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இவர்களை தொடர் பதிவு எழுத அழைக்கிறேன்.
1. பூந்தளிர் தியானா
2. கோவைவீரன் ஸ்ரீனி
3. இளையநிலா இளமதி
4. காணாமல் போன கனவுகள் ராஜி

கேட்காமல் அழைத்துவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள் நட்புகளே. முடியவில்லை என்றால் தெரியப்படுத்துங்கள். இணைய இணைப்பு இன்னும்  எனக்குச்  சீராகவில்லை, பல பிரச்சினைகள். தற்காலிகமாக பயன்படுத்துவதில் இணைப்பு இருக்கும்போது பதிவிட்டுவிட வேண்டும் என்று துரிதப்படுத்திவிட்டென்.

மகிழ்ச்சியுடன்,
கிரேஸ் 
 

19 கருத்துகள்:

 1. மலரும் நினைவுகள் :). அழகான பதிவு கிரேஸ். என்னையும் தொடர அழைத்தமைக்கு நன்றி. எனது பதிவினை விரைவில் எதிர்பாருங்கள் :)

  பதிலளிநீக்கு
 2. முதல் பதிவு உண்டாக்கிய மகிழ்ச்சியை அம்மா கையால் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடும் மகிழ்ச்சியோடு ஒப்பிட்டதிலிருந்தே உங்கள் அன்றைய மனநிலையை உணரமுடிகிறது. மதுரத்தமிழ் இனிப்பதோடு மணக்கவும் செய்கிறது. பாராட்டுகள் கிரேஸ்.

  பதிலளிநீக்கு
 3. அருமை உங்கள் முதற் பதிவு நினைவுகள்!
  அழகாகக் கடந்த நினைவுகளை மிக இனிமையாக மீட்டிய இசையில் மெய்மறந்தேன். அருமையாக இருக்கிறது தோழி!

  அட இறுதியில் என்னையும் விட்டுவைக்கவில்லை நீங்கள்!..:) மிக்க நன்றி!

  ஆனால்,... ஏற்கனவே இந்தச் சங்கிலித்தொடரை கோவைக்கவி என்கையில் இணைத்துவிட்டுள்ளார். அதற்கே நான் என்ன எப்போ எழுதுவது என திணறிக்கொண்டிருக்கின்றேன்.

  ஆக இதனை வேறொருவருக்கு நீங்கள் கொடுத்து ஊக்குவியுங்கள் தோழி!

  மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இளமதி! அப்படியா, இணைய இணைப்பு சரி இல்லாததால் வேறு நண்பர்களை அழைக்க முடியாமல் போனது தோழி..பரவாயில்லை, இந்த தொடர் பதிவை பலரும் தொடர்ந்து எழுதுவார்கள் என்று நினைக்கிறேன் .

   நீக்கு
 4. முதல் படைப்பே முத்தான படைப்பு!!

  பதிலளிநீக்கு
 5. நீங்க இப்படி கூப்ப்டுவீங்கன்னு தெரிஞ்சுதான் முதல்லியே எழுதி பதிவிட்டுட்டேன் போல!! இன்னொரு முறை எழுதினா அடிக்க வருவாங்க!! http://rajiyinkanavugal.blogspot.in/2013/08/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சோ, நான் பார்க்கவில்லையே..மன்னித்துக் கொள்ளுங்கள் தோழி.
   :)

   நீக்கு
 6. என் கையில் மருதாணி இட்டுக்கொண்டு அம்மா கையால சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மகிழ்ச்சி என்று சொல்லலாம்.//

  அருமையாக அழகாய் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கோமதி அரசு அவர்களே.

   நீக்கு
 7. எனது அழைப்பினை ஏற்று தொடர் பதிவினில் தங்களது இனிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை அழைத்தமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி!

   நீக்கு
 8. முதல் பதிவின் மகிழ்ச்சி சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சுரேஷ் அவர்களே

   நீக்கு
 9. அழைப்பினை ஏற்று கொண்டேன் :)
  http://covaiveeran.blogspot.com/2013/08/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 10. Eniya vaalththu.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...