Tuesday, September 29, 2015

இளையோர் நீர்தாம் நம்பிக்கை

தம்பி தங்காய் கேட்டிடுவாய்
      தரணி நிலையைப் பார்த்திடுவாய்
இம்மண் வறட்சித் தடுத்திடுவாய்  
      இன்றே செயலில் இறங்கிடுவாய்  
தும்பக் கொடுமை எதிர்த்திடுவாய் 
      துள்ளி எழுந்தே அழித்திடுவாய் 
நம்பி அழைத்தோம் உனைத்தானே
      நாளை உலகம் நீர்தாமே



மரங்கள் வெட்டி வீழ்த்திட்டோம்
      மயங்கிச் சூழல் அழித்திட்டோம்
பரவை மட்டம் உயர்ந்திட்டால்
       பாவம் மக்கள் என்செய்வார்
கரத்தில் எடுப்பீர் வருங்காலம்
      கடந்த காலம் அரும்பாடம் 
உரம்நீ கொண்டு இணைந்திட்டால்
      உலகம் மீட்டு வாழ்ந்திடலாம்


பிந்தி வருதல் அறிந்தோமே
      பிழையைத் திருத்த விழைவோமே

சிந்தைச்  சிறகை விரித்திடுவீர்
      சிறந்த தீர்வைக் கண்டிடுவீர்
முந்தி நீவீர் முனைந்திட்டால்
      முகடும் விலகி வழிவிடுமே
இந்த உலகம் நிலைபெறவே
      இளையோர் நீர்தாம் நம்பிக்கை


பரவை  - கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------
'இளையோர் நீர்தாம் நம்பிக்கை' என்ற இக்கவிதை, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே வகை-(5) மரபுக்கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே  என்று உறுதி கூறுகிறேன்.
இதுவரை எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டி முடிவுகள் வெளிவரும்வரை எங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதிகூறுகிறேன்.
நன்றி,
வி.கிரேஸ் பிரதிபா

22 comments:

  1. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  2. அருமை கிரேஸ் .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா அருமைமா வெற்றி பெற வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அற்புதமான கருத்துகள் தோழி. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  5. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, உங்கள் உழைப்பிற்கு ஈடில்லை. மனம் நிறைந்த நன்றிகள். அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

      Delete
  6. >>> இந்த உலகம் நிலைபெறவே
    இளையோர் நீர்தாம் நம்பிக்கை!<<<

    அருமை.. அருமை!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  7. அருமை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கிரேஸ். மரபிலும் கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி..உங்க அளவிற்கு முடியாது என்றாலும் போட்டிக்கான என் பங்களிப்பாக எழுதினேன்.

      Delete
  9. அருமையான கவி
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  11. நம்பிக்கை தரும் கவிதை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...