Tuesday, March 10, 2015

அட்சயப் பாத்திரம்


சமைத்துக் கட்டி அனுப்பிவிட்டு
துலக்கித் தொட்டித் துடைத்துவிட்டு
பெருக்கிக் கூட்டித் துடைத்துவிட்டு
அசதி என்று ஒரு தேநீர் குடித்தால்....
பளிங்குத் தொட்டியில் மீண்டும்
துலங்க ஒரு கோப்பை!!

பின் குறிப்பு:
இக்கவிதை லேசான மனநிலையிலேயே எழுதப்பட்டது..வருத்தமோ எரிச்சலோ இல்லை :) வாழ்க்கை என்றால் உணவு வேண்டும், உணவு என்றால் பாத்திரம் கழுவவும் வேண்டும் :)))

48 comments:

 1. குடிச்சதும் கழுவி வச்சிட்டா இந்தப் பிரச்சனையில்லை :)

  ReplyDelete
  Replies
  1. அதத்தான் செய்வேன் சகோ, திரும்பவும் கழுவி வைக்கணும் ..:))

   Delete
 2. அடடே.....
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. மறுபடியும் மறுபடியும் கழுவணுமா... அப்ப தேநீர் அதிகம் குடிப்பீங்களோ...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...ஒரு டீ தான் சகோ, மற்றதைக் கழுவிவிட்டு டீ கப் மட்டும் திரும்பவும் :)

   Delete
 4. வினோத் ஊர்ல இல்லங்கிறதுக்கு ஒரு கவிதை எழுதிக் காட்டணுமாக்கும்?
  அவருக்கே ஒரு செல்பேசியில ஒரு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பலாம்ல? (என்றாலும் அட்சய பாத்திரத்திற்கு ஒரு புது அர்த்தம் கிடைத்ததுமமா. எடுக்க எடுக்கக் குறையாமல் வந்கொண்டே இருப்பது... ஆகா என்ன பொருத்தம்? பாவம்பா இந்தப் பெண்ணினம். எங்க வீட்ல சாப்பாட்டுத் தட்டு, தேநீர்க்குவளை எல்லாம் அவரவரே எடுத்துகிட்டு வந்து, சாப்டதும் கழுவியும் வச்சிரணும் இது நாங்களே போட்டுக்கிட்ட சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா வினோத் வந்துட்டாங்க அண்ணா..
   //சமைத்துக் கட்டி அனுப்பிவிட்டு// வினோத்திற்கும் சேர்த்துத்தான் :)
   வினோத் ஊரில் இருந்தாலும் இது என்னுடைய பகல்நேர வேலை அண்ணா..இரவு உணவிற்குப் பின்னரே வினோத் பாத்திரம் உருட்டலாம் :)
   நல்ல சட்டம்தான் அண்ணா, பசங்க இன்னும் கொஞ்சம் பெரிசானவுடனே ஆரம்பிச்சுர வேண்டியதுதான். :)

   Delete
 5. சிம்பிள் & நைஸ்

  ReplyDelete
 6. யூஸ் & த்ரோ கப்புகளை உபயோகிக்கலாமே ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. நான் eco friendly என்று அதெல்லாம் உபயோகிப்பதில்லை. :))

   Delete
 7. வணக்கம்

  வரிகளை இரசித்து படித்தேன்... பகிர்வுக்குநன்றி... த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. இவ்வாறு சூழலை எதிர்கொள்ள தேநீரை மறக்கவேண்டும். முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா அது எப்படி ஐயா? வேலைக்காக உணவைத் தவிர்க்க முடியுமா? :)
   கருத்துரைக்கு நன்றி ஐயா

   Delete
 9. அனைத்து பெண்களின் மன உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது உங்கள் வரிகள்.நானும் பல நேரங்களில் நொந்து போனது உண்டு சகோ.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அனிதா ..
   பார்ட் and பார்சல் ஆப் லைப் :))

   Delete
 10. ஏனிந்த சலிப்பு...! தேநீர் சரியில்லையோ...? ஹிஹி....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாய் சலிப்பு இல்லை அண்ணா.. தேநீர் அபாரம் :))
   உங்களுக்கு தேநீர் போட்டுக்கொடுக்கும் பொழுது உண்மையைத் தெரிஞ்சிக்கோங்க :))

   Delete
 11. துலக்கவும் விளக்கவும் ஒரு கோப்பை என்றால்
  இலங்கவும் துலங்கவும் ஒரு கோப்பை தான்!..

  நம்கையில் ஒரு அட்சய பாத்திரம் உள்ளது . அது எது.. எது!?..

  இனிய கவிதை!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 12. இது தான் நிலை என்ன செய்வது.

  ReplyDelete
 13. அட்சய பாத்திரம் பொருத்தமான தலைப்பு ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ, வருகைக்கு மகிழ்ச்சி, கருத்திற்கு நன்றி :)

   Delete
 14. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. ஆமாம் சகோதரி! அது (சமையலறை ஸிங்க்) அட்சய பாத்திரம்தான். ஊரில் மனைவி இல்லாதபோது எனக்கும் மகனுக்கும் பாத்திரங்களை கழுவிக் கழுவி வைத்த சற்று நேரத்திற்குள் இன்னொன்று வந்து விடுகிறது. ஒன்று நான் வைத்து இருப்பேன். அல்லது என் மகன் வைத்து இருப்பான். என்ன இருந்தாலும் தாய்மார்களுக்கு உள்ள பொறுமை சட்டென்று துலக்கும் பாவனை எமக்கு இல்லை.
  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ஐயா? ஆமாம், ஒருவேளை வேலை முடித்தால் அடுத்த உணவு வேளை வந்துவிடும் :))
   கருத்திற்கு நன்றி ஐயா

   Delete
 16. ம்ம்ம் கரெக்டா சொன்னீங்கப்பா...ஆமாம் கீதா மட்டும் இல்ல துளசியும் பாலக்காட்டில் தனியாக இருக்கும் போது தன் கையே தனக்குதவிதான்....வீக் என்ட், லீவு நாட்களில் மட்டுமே குடும்பத்துடன்....அதனால அக்ஷயபாத்திரம் தான்...

  கீதா விட்டுல எல்லாமே அவங்கவங்க சாப்டறது, குடிக்கற பாத்திரங்களைக் கழுவி வைச்சுரணும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோதரரே, இந்த அட்சயப்பாத்திரம் எல்லா வீடுகளிலும் :)
   அப்படியா? நல்ல பழக்கம்..

   Delete
 17. சலிப்பு என்றாலும் ஒரு கோப்பி தெம்புதான்

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 18. அட.. பார்க்கும் எல்லா இடத்திலும் கவிதை ... கவித்துமான உலகத்தில் வாழுறீங்க கிரேஸ் :)

  ReplyDelete
  Replies
  1. பார்ப்பதும் பாரக்காததும் பாடு பொருளாகும்
   பார் மகிழநீ பாடு
   :) நன்றி ஸ்ரீனி

   Delete
 19. பெண்களுக்கு ஓயாமல் தொடரும் இல்லப்பணிகள் குறித்தான ஒரு குறியீட்டுக்கவிதை போலத்தான் எனக்குத் தெரிகிறது கிரேஸ்... அழகாகவே கவிநயத்துடன் சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி கீதமஞ்சரி, மிக்க நன்றி.

   Delete
 20. அதென்னவோ அந்த "சிங்க்"ல ஏதாவது ஒரு பாத்திரம்/கப் இருந்தால் நம்ம தாய்க்குலங்கள் அதை ஏன் இப்படி உலகமஹாப் பிரச்சினையாக்குறாங்கனு தெரியவில்லை. எல்லாமே டிஸ்போஷபில்லாக வாங்கிட்டா சிங்க் கே இல்லாமல் வாழ்ந்திடலாம்னு தெரிந்தும் அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க. டிஸ்போஷபிள் கப்ல தேனீர்க் குடித்தால் தேனீர் டேஸ்ட் கம்மியாயிடுமோ? :)))

  சிங்க் ல உள்ள டேட்டி டிஷ் மட்டுமல்லங்க, சந்தோஷம், துன்பம், கஷ்டம் எல்லாமே முடிவில்லாமல் தொடரத்தான் போகுதுங்க, நாம் சாகிறவரைக்கும்.இதுதான் என் கடைசி கஷ்டம், இதோட என் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுச்சுனு சொல்ல முடியுமா? அதேபோல்தான் கடைசிக் கப்பையும் கழுவி வைத்தால் இன்னொரு கடைசிக் கப் ஒண்ணும் வந்து நிக்கும். இப்படியெல்லாம் என்னைத் தத்துவம் பேச வச்சுட்டீங்க பாருங்க, கிரேஸ்!

  ஒரே ஒரு கோப்பைதானா? நீங்க ரொம்ப லக்கி! :) நீங்க மைக்ரோவேவ்ல டீ போட்டுக் குடிப்பீங்களா என்னனு தெரியலை, அதான் ஒரு கப்போட நிக்கிது. நான் எல்லாம் "லூஸ் டீ" (தாஜ்மஹால் இல்லைனா லிப்டன்) வாங்கி வந்து ஒரு "டீச் சட்டி"லதான் ஸ்டவ் மேலே தண்ணீரைக் கொதிக்க வச்சு, லூஸ் டீ யைக் கொட்டி, , டீ எக்ஸ்ட்ராக்ட் ரெடியானதும், அதில் பாலைக் கலந்து, ஒரு ஏலக்காயையும் உடைத்துப் போட்டு, டீ போடுவது வழக்கம். ஏலக்காய் மணக்கும் டீ குடித்த பிறகு, டீ கப் மட்டுமல்ல, ஒரு டீச் சட்டி, அப்புறம் ஊறிய லூஸ் டீ நிறைந்த ஒரு வடிகட்டி, அப்புறம் டீ அருந்திய கோப்பைகள்னு ஒரு நாலு ஐட்டமாவது சிங்க்ல வந்து சேரும். :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண் :)
   டிஸ்போசபில் சில உடல்நல சம்பந்தப்பட்ட சவால்களுடனே இருக்கிறது, அதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம்..அதுபோல இருக்கிற சூழல் கேடுகளில் குப்பையைக் குறைப்பதே என் ஆசை, என் மகன் பள்ளியில் நான் ஈகோ கமிட்டியில் இருந்தபொழுது, மதிய உணவிற்கு ச்டேரோபோம் பயன்படுத்துவதை நிறுத்தினோம். இதில் விவாதங்கள் இருக்கலாம்..ஆனால் இப்பொழுதைக்கு நான் பயன்படுத்துவதில்லை.
   ஆஹா தத்துவம்!! உங்க தத்துவம் உண்மைதானே வருண்?
   நீங்கள் சொல்வதுபோல் எங்கள் வீட்டிலும் டீ போடுவது , ஏலக்காய், இஞ்சி என்று..இஞ்சி இடித்த உரலும் சேரும் :)) ஆனால் இப்பதிவில் நான் சொன்னது எனக்கு மட்டுமான ஒரு அதிகப்படியான தேநீர் என்பதால் கிரீன் டீ , அதுதான் ஒரு கோப்பை, கலந்தவுடன் ஸ்பூனை அலசி வைத்ததால் ஒரு கோப்பை மட்டும் :)))

   Delete
 21. உண்மை,உண்மை,உண்மைசகோதரி.அது அட்சயபாத்திரமே..........

  ReplyDelete
 22. அன்புள்ள சகோதரி,

  ‘அட்சயப் பாத்திரம்’
  பாத்திரங்களே...
  அட்சயப் பாத்திரங்களாய்
  ஆகிப்போனதோ?
  அருமை.
  -நன்றி.
  த.ம. 10.

  ReplyDelete
 23. அழகிய ஆனால் உண்மையைச் சொல்லும் கவி. அருமை.

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...