சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல் - நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் பேசுகிறேன்

வணக்கம், அன்பு  நண்பர்களே! என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் வெற்றியிலும் வலையுலக நண்பர்களாகிய உங்கள் பங்கு பெரிது. குறிப்பாக என்னுடைய சங்க இலக்கியப் பதிவுகளுக்குப் பேராதரவு தந்து ஊக்குவித்தது. உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய உலா நிகழ்ச்சியில் 'சங்க இலக்கிய மாந்தர் பார்வையில் காதல்' என்ற தலைப்பில் பேசுகிறேன். 

சங்க இலக்கிய அமிழ்தக் கடலில் நான் பருகிய சிறு துளிகளின் அனுபவத்தையும், இனிமையையும்  பேசுவதற்கு அமைந்த இந்த வாய்ப்பு, கார்மேகம் தோன்றுவதற்கு முன்பே தலைவனின் தேரோசையைக் கேட்ட தலைவியின் மகிழ்வைத் தருகிறது.

இந்த வாய்ப்பினை எனக்களித்த நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவர் திரு.ஆல்ஃபிரெட் தியாகராஜன், வலையுலகில் பரதேசி என்ற வலைத்தளத்தில் எழுதிவருபவர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி இந்த வாய்ப்பிற்கு வழியமைத்த அன்பு அண்ணன் திரு.முத்துநிலவன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இந்நிகழ்ச்சியில் அட்லாண்டாவைச் சேர்ந்த நான் பேசுகிறேன் என்று அறிந்தவுடன் தோழமையுடன் இணைந்து ஆதரவு தரும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்திற்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பிறந்த வீட்டைப் போன்ற கணினித் தமிழ்ச் சங்கத்தையும் உடன்பிறப்பான வீதி கலை இலக்கியக் குழுவையும் என்னில் ஒன்றாகவே கருதுவதானாலும் என்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவிப்பது கடமையும் பேருவகையும் ஆகும். அத்தனை அன்பான உறவுகளுக்கும் அன்பின் மனங்கனிந்த நன்றிகள்.

நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியில் இணைந்து என்னை வாழ்த்தி ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்திய நேரம்: பிப்ரவரி 13ஆம் நாள், காலை 7.30 மணி; கிழக்கு அமெரிக்க நேரம்: பிப்ரவரி 12ஆம் நாள் மாலை 9 மணி.



5 கருத்துகள்:

  1. அருமை... ரசிக்க காத்திருக்கிறேன்...

    குறளுக்கேற்ப திரைப்பட பாடல்கள் உண்டு தானே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அண்ணா.
      குறளுக்கேற்ப திரைப்படப் பாடல்கள் எத்தனையை என் அண்ணன் எடுத்துக் காட்டியிருக்கிறார் தெரியுமா? :-)

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...