மாபெரும் சபைதனில் - திரு.உதயச்சந்திரன் அவர்களுடன் வீதி 81ஆவது நிகழ்வில்

 

வீதி கலை இலக்கியக் களத்தின் 'மாபெரும் சபைதனில்' நூல் அறிமுக நிகழ்வு  செம்பியன் செவிலியர் பயிற்சிக் கல்லூரியிலும்  இணைய அரங்கிலும் ஒருசேர மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப., இயக்குனர் தொல்லியல் துறை , அவர்களின் நூலினை, அவர் முன்னிலையில் அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பிற்கு அகமகிழ்கிறேன். அதிலும் திரு.உதயச்சந்திரன் அவர்கள் முழுவதும் இணைந்திருந்து கேட்டு, ஏற்புரை வழங்கியது மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கியது.  

அன்புத்தோழி, சகோதரி, கவிஞர் மு.கீதா வரவேற்புரை வழங்கி இனிதாய் அனைவரையும் வரவேற்க, பள்ளி கல்வித்துறையின் இணை இயக்குனரும் வீதியின் நிறுவனருமான முனைவர் அருள்முருகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்திட, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குனர் முனைவர் சங்கரசரவணன் அவர்கள் தொடக்கவுரை ஆற்ற, திரு.முத்துநிலவன் அண்ணா நிறைவுரை ஆற்ற, வீதியின் உறுப்பினர்களும் இனிய நண்பர்களுமான மகாசுந்தர் அண்ணா,  ஜெயாம்மா, கஸ்தூரி அண்ணா, திருப்பதி ஐயா, தம்பி ஸ்ரீ, நியூயார்க் ஆல்பி, பேராசிரியர் விஜயலட்சுமி, எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வம் ஆகியோருடன் நானும் நூல் அறிமுகம் செய்ய, சிறப்பு விருந்தினரின் ஏற்புறைக்குப் பின் அன்புத்தோழி மைதிலி கஸ்தூரிரெங்கன் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது. 

 

கவிஞர் நீலாம்மா மற்றும் அன்புத் தங்கைகள் சுபா, திவ்யா, மூவரும் தனித்தனியாக இனிமையாகப் பாடி மகிழ்வித்தார்கள். 
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல், 'மாபெரும் சபைதனில்'.

வீதியின் 81ஆவது நிகழ்வான இன்று, சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த அன்புச் சகோதரி கீதா
அவர்களுக்கும் வழிநடத்திய திரு.முத்துநிலவன் அண்ணனிற்கும் உளப்பூர்வமான நன்றிகள். அரங்கைக் கொடுத்ததோடு அல்லாமல் இணையவழி நடப்பதற்கான தேவைகளையும் கவனித்த செம்பியன் செவிலியர் பயிற்சிக் கல்லூரியின் திரு.பைசர் அவர்களுக்கும் மனம்கனிந்த நன்றிகள்.
 

 
திரு.மகாசுந்தர்

திரு.கஸ்தூரிரெங்கன்

பேரா.விஜயலட்சுமி

திரு.ராசிபன்னீர்செல்வம்

நிகழ்வைச் சிறப்பித்தவர்கள்


சுபா


கவிஞர் நீலா

நிகழ்வில் திருவள்ளுவர் நூலகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டது சிறப்பு.






மைதிலி கஸ்தூரிரெங்கன்










 
ஒவ்வொருவரின் நூல் அறிமுகமும் அருமையாக இருந்தது. நேரம் கருதி சுருக்கமாகப் பதிவு செய்த நூல் அறிமுகத்தை விரைவில் இன்னும் ஆழமாகப் பகிரவேண்டும் என்று விரும்பி, நடக்கும் என்று நம்புகிறேன். 
நிகழ்வின் படங்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
 #மாபெரும்சபைதனில் #உதயச்சந்திரன்
 
அன்புடன்,
கிரேஸ் பிரதிபா, அட்லாண்டா

12 கருத்துகள்:


  1. அமெரிக்க நேரம் நள்ளிரவு 3 மணி வரை விழித்திருந்து இணைந்திருந்தது மகிழ்வும் நெகழ்வும் அளித்தது. உடனே அதை வலைப்பக்கத்தில் பதிவு செய்த தேன்மதுரத்தமிழ் கிரேஸ் தங்கையின் ஈடுபாட்டிற்கு வீதியின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் வணக்கமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா. எனக்கு மகிழ்ச்சி அண்ணா, சிறப்பான நிகழ்வில் பங்கேற்று நண்பர்கள் அனைவரையும் பார்த்ததும் அனைவருடைய உரைகளையும் கேட்டதும் மகிழ்வளித்தது. இறுதியில் திரு.உதயச்சந்திரன் ஐயா அவர்களின் ஏற்புரை பேருவகை தந்தது. வீதியோடும் உங்களனைவருடனும் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும், அண்ணா.

      நீக்கு
  2. மிகச்சிறந்த பணி...பாராட்டுகளும் வாழ்த்துகளும்...தொடர்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. உங்களை இணையவழி நிகழ்வில் சந்தித்தது மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

      நீக்கு
  3. சிறப்பான நிகழ்வுகளை நடத்தி வரும் புதுகை நண்பர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை... வாழ்த்துகள்...

    நேரலையில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. சிறப்பு.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...