'பாட்டன் காட்டைத் தேடி' - இரண்டாவது கவிதைத் தொகுப்பு



முதல் குழந்தை பிறக்கும்பொழுது அம்மா ஆகிவிட்டேன்  என்று ஆனந்திக்கும் தாய்மனம் அடுத்தக் குழந்தைக்கும் அதே அளவில், ஏன் இன்னும் அதிகமாய்க்கூட ஆனந்திக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தம், பூரிப்பு! அதுபோலவே என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபொழுது மகிழ்ந்தேன். என் இரண்டாவது கவிதைத் தொகுப்பிற்கும் பன்மடங்கு மகிழ்கிறேன். நண்பர்களின் ஊக்கத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.


முன்பைவிட எழுத்தைச் செதுக்கியிருக்கிறேனா, முன்னேறியிருக்கிறேனா என்று யோசித்துப்பார்க்கிறேன். நான் யோசிப்பதில் என்ன பயன்? என் எழுத்தை வாசிக்கும் வாசகர்கள், என் நண்பர்களாகிய நீங்கள் சொல்வதே பயன் சேர்க்கும். உங்கள் கருத்துக்களால் என் எழுத்தைச்  செதுக்கிக்கொள்ளவே விழைகிறேன். நூலை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிருமாறு அன்புடன் வேண்டுகிறேன். நூலின் இணைப்புகள் இத்தளத்தின் வலதுபுறபட்டியில் கொடுத்திருக்கிறேன்.

பாட்டன் காட்டைத் தேடி பற்றி பகிர்ந்த தளங்களை மனம் நிறைந்த நன்றியுடன் பகிர்கிறேன்:

1. திரு.முத்துநிலவன் அண்ணாவின் தளத்தில் 'பாட்டன் காட்டைத் தேடி' நூலிற்கு அவர்கள் எழுதிய முன்னுரை,  கிரேஸ் பிரதிபா நூலுக்கான எனது முன்னுரை

2. ஞா.கலையரசி அக்காவின் 'ஊஞ்சல்' தளத்தில் :
என் பார்வையில் - 'பாட்டன் காட்டைத் தேடி,' கவிதைத்தொகுப்பு

நண்பர்களின் அன்பான பதிவுகளைப் பகிர்வதன்மூலம்  அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
கிரேஸ் பிரதிபா 


பின் குறிப்பு:
பல மாதங்களாக வரைவில் இருந்த பதிவிற்கு உயிரூட்டிப் பகிர்கிறேன். நண்பர்கள் மன்னிக்க! :)
நல்லதைத் தாமதமானாலும் செய்துவிடவேண்டும் அல்லவா? 


 

8 கருத்துகள்:

  1. ஓ முதற் குழந்தையா.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. இன்னும் பல கவிக் குழந்தைகளைப் பிரசவிக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் புத்தகம் - மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி. முதல் கவிதைத்தொகுப்பினைப் படித்தவன் என்ற நிலையில், இதுவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு வாழ்த்துகள் தங்கையே. நூல் வெற்றி பெற்று பேரும் புகழும் கிட்ட ஆசிகள். :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...